Advertisment

அகதிகள்; சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள்... இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்?

எல்லை தாண்டும் நபர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு படைக்கு புதுடெல்லி உத்தரவிட்டிருந்தாலும் அதனை மிசோரம் அரசு எதிர்க்கிறது.

author-image
WebDesk
New Update
அகதிகள்; சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள்... இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்?

Nirupama Subramanian 

Advertisment

On ‘refugees’ and ‘illegal immigrants’, how India’s stance changes with circumstances : கடந்த வாரம் ரோஹிங்கியாவை சேர்ந்த 300 நபர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து பேசிய இந்தியாவின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் என்று கூறி ஜம்மு மற்றும் டெல்லியின் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை வெளியேற்ற மறுத்த அரசு அவர்களை வெளிநாட்டினர் சட்டம் 1946-ன் கீழ் நாடு கடத்த வேண்டும் என்று கூறியது.

சட்டத்திற்கு விரோதமாக குடியேறியவர்கள் Vs அகதிகள்

அகதி என்ற சொல் தங்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும், இனம், மதம், தேசியம் மற்றும் குறிப்பிட்ட சமூக குழுக்களில் இருப்பதால் உருவாகியுள்ள துன்புறுத்தலினால் நிறுவப்பட்ட அச்சத்தின் காரணமாக அவர்களால் தங்களின் நாட்டுக்கு திரும்பி செல்ல இயலாதவர்கள் அகதிகள் என்று கூறுகிறது 1951 ஐ.நா. மாநாடு மற்றும் அடுத்தடுத்த 1967 நெறிமுறை. நாடற்றவர்களும் இந்த காரணத்தினால் அகதிகள் என்று கூறலாம். பிறந்த நாடு (குடியுரிமை பெறப்பட்ட நாடு) தற்போது முன்னாள் குடியிருந்த நாடு என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ளப்படும். (ஆக்ஸ்போர்டு கையேடு அகதிகள் மற்றும் கட்டாய இடம்பெயர்வு ஆய்வுகள்).

ஐ.நாவின் அறிக்கைப் படி 2017ம் ஆண்டு மியான்மரில் உள்ள ரக்கைனில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு ரோஹிங்கியாக்கள் தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர். இது தற்போது உலகின் மிகப்பெரிய அகதிகள் பிரச்சனையாக உருவாகி வருகிறது. வங்க தேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் ஆகும். ரோஹிங்கியா மக்கள், முக்கியமாக இஸ்லாமியர்கள், வங்கதேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் என்று மியான்மர் கூறுகிறது.

கடந்த மாதம் வங்க தேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட 1.1 மில்லியன் மக்களுக்கு அடைக்கலம் தந்து மனித நேய உதவிகளை வழங்கி வரும் வங்க அரசை மனம் உவந்து பாராட்டினார் மோடி என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஹிங்கியாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதில் இந்தியா ஒரு வலுவான பங்கைக் கொள்ளுமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கேட்டுக் கொண்டார். பி.டி.ஐ அறிக்கையின்படி, "அகதிகளை நிலையான முறையில் திரும்பப் பெற" இந்தியா விரும்புகிறது என்று மோடி கூறினார்.

ஆனால் இந்தியாவிற்கு வந்துள்ள 40 ஆயிரம் ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பவது குறித்து இந்தியா தெளிவற்று இருக்கிறது. அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையருக்கு, அங்கு இருக்கும் சில அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்க அரசாங்கம் அனுமதித்தது. இப்படியாக 14 ஆயிரம் ரோஹிங்கியாக்கள் அகதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் , சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவர்களை சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் என்று கூறினார். பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத அவதூறுகள் பற்றிய பொது மற்றும் அரசியல் நிலைப்பாடுகளுடன் இணைத்து, அவர்கள் உடனடியாக "நாடு கடத்தப்பட வேண்டும்" என்ற கோரிக்கையும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ராணுவ ஆட்சி

மியான்மரில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் இருந்து மிசோரமிற்கு வருகை புரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பலர் சின் இனத்தை சேர்ந்த ஜனநாயக செயற்பாட்டாளார்கள் அல்லது போராட்டக்காரர்களை சுட மறுத்த காவல்துறையினராக உள்ளனர். அவர்கள் திரும்பி செல்லும் பட்சத்தில் மியான்மர் ராணுவம் அவர்களை கொன்று விடும் என்று அச்சம் அடைந்துள்ளனர்.

அகதிகள் அடிப்படையில் பார்த்தால் ரோஹிங்கியாவினருக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது. வெவ்வேறு சூழ்நிலைகளில் மியான்மர் ராணுவத்திடம் இருந்து அவர்கள் தப்பி வந்திருந்தாலும் கூட ஒரு பிரிவினரை மியான்மர் அந்நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்கிறது. ரோஹிங்கியாக்களை நிராகரிக்கிறது.

மிசோரம் மற்றும் மணிப்பூரில் தஞ்சம் கோரும் மக்களை ரோஹிங்கியாக்கள் ஆவலுடன் கவனிக்கும் என்று டெல்லி பதில் கூறியுள்ளது. இதுவரை வடகிழக்கில் இருக்கும் நிலைமை குறித்து புதுடெல்லி குழப்பத்துடன் இருக்கிறது தெளிவாகிறது. எல்லை தாண்டும் நபர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு படைக்கு புதுடெல்லி உத்தரவிட்டிருந்தாலும் அதனை மிசோரம் அரசு எதிர்க்கிறது. முதல்வர் மியான்மரில் இருந்து வரும் நபர்களுக்கு துணையாக இருப்பதை உறுதி செய்தார். மேலும் ஜனநாயக அரசில் இருந்து நாடு தப்பிய குழுக்கள் உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தினார். மணிப்பூரில், மியான்மரைச் சேர்ந்த எவருக்கும் உணவு அல்லது தங்குமிடம் வழங்க வேண்டாம் என்று மக்களைக் கேட்கும் அரசாங்க உத்தரவு பரவலாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து அவசரமாக திரும்பப் பெற வேண்டியிருந்தது.

நாடு கடத்தல், திரும்பிச் செல்லாதது

ரோஹிங்கியாக்களை "அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி" வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் "நாடு கடத்த" உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், நடைமுறையில் இது சிக்கலானது. வங்கதேச அகதிகள் முகாமில் பெற்றோரிடமிருந்து பிரிந்த 14 வயது ரோஹிங்கியா சிறுமியை திருப்பி அனுப்ப அசாம் அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியிலிருந்து இது தெளிவாகிறது. அசாமின் சில்ச்சாரில் நுழைந்த போது அந்த சிறுமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார். மியான்மரியில் அவருடைய குடும்பத்தினர் யாரும் இல்லை. கடந்த வாரம் அசாம் அதிகாரிகள் அவரை மியான்மருக்கு திருப்பி அனுப்ப மணிப்பூரின் மோரெஹிற்கு கொண்டு வந்த போது மியான்மர் அரசு அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

சட்டரீதியான நாடுகடத்தலுக்கு அடிப்படையானது மக்களை எல்லையைத் தாண்டி அனுப்பவது கிடையாது. மாறாக நாடுகடத்தப்பட்டவரை அந்நாட்டினராக ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில், காக்ஸ் பஜாரில் ரோஹிங்கியாக்களை திரும்ப அழைத்துச் செல்ல மியான்மரை வற்புறுத்திய வங்கதேசத்தின் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இந்தியா ஒரு சிலரை மிகவும் சிரமத்துடன் திருப்பி அனுப்ப முடிந்தது.

ரோஹிங்கியா மக்களை சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் என்று அழைத்தாலும் கூட, அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தாலும் இந்தியா “non-refoulement”-க்கு எதிராக உள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை போன்ற பிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கு இது கையொப்பமிட்டது.

Non-refoulement என்பது எந்த ஒரு நிலையிலும் அவர்/அவளுக்கு ஆபத்து நேரிடும் நிலை இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு அகதியும் திருப்பி அனுப்பப்படாதது. இந்த கொள்கை 2018 ஆம் ஆண்டளவில் ஐ.நா.வில் இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறியதுடன், அகதி அந்தஸ்தை வழங்குவதற்கான தடையை உயர்த்துவதற்கும் எதிராக வாதிட்டது, இது ஏராளமான மக்களை "அதிக பாதிப்புக்குள்ளாக்குகிறது" என்று கூறியது.

இந்தியா எவ்வாறு வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகளை கையாளுகிறது என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது. இலங்கை தமிழ் அகதிகள் பலரும் தமிழக முகாம்களில் உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதுடன் அவர்களுக்கு வேலை மற்றும் கல்வியை கிடைக்கவும் வழி வகை செய்கிறது. 2009ம் ஆண்டு இறுதி கட்ட போருக்கு பிறகு தாயகம் திரும்புபவர்களுக்கு இந்திய அரசு உக்கம் அளித்தது. வீடு திரும்பும் நிலைமை பாதுகாப்பாக இருந்தால், யு.என்.எச்.சி.ஆர் போன்ற ஒரு நிறுவனத்துடன் கலந்தாலோசித்து திரும்ப செல்வது குறித்து முடிவெடுத்தது. ஆனாலும் இந்த முறையும் non-refoulement கொள்கையை பின்பற்றுகிறது.

"தன்னார்வமாக திரும்பி செல்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவது … மற்றும் திரும்பி வருபவர்களுக்கு ஆதரவைத் திரட்டுவது" தான் முக்கியமானது என்று யு.என்.எச்.சி.ஆர். கூறுகிறது. இதன் பொருள் அதன் சொந்த மக்களை மீண்டும் ஒருங்கிணைக்க உதவுவதற்கு பிறந்த நாட்டின் முழு அர்ப்பணிப்பு" தேவைப்படுகிறது என்பதாகும். ரோஹிங்கியாக்கள் அல்லது ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் தானாக முன்வந்து நாடு திரும்ப விரும்பும் இடத்திலிருந்து மியான்மர் இப்போது வெகு தொலைவில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment