Advertisment

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட காரணம் என்ன?

இதுபோன்ற பெரிய ஆய்வுகளில் பாதகமான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்!

author-image
WebDesk
New Update
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட காரணம் என்ன?

Prabha Raghavan

Advertisment

Oxford vaccine trials paused: Why this may not be a serious blow : இந்தியாவில் சீரம் நிறுவனம் நடத்திவரும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக செப்டம்பர் 10-ஆம் தேதி அறிவித்துள்ளது.   உலகளாவிய சோதனை தளங்களில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான விளைவுகள் தொடர்பாக புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் சீரம் நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு வெளியிட்டுள்ள நோட்டீஸிற்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய மற்றும் இறுதி கட்ட மனித சோதனைகளை நடத்தி வருகிறது சீரம் நிறுவனம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் ஸ்வீடன் - பிரிட்டிஷ் பார்மா நிறுவனம் அஸ்ட்ராஜென்கா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் முனைப்பில் இறங்கியுள்ளது சீரம் நிறுவனம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இது என்ன தடுப்பூசி?

உலக அரங்கில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஒன்றாகும் இது. இது சிம்பன்ஸிகளில் குளிர் காய்ச்சலை உருவாக்கும் வைரஸின் பலவீனமாக்கப்பட்ட வைரஸை கொண்டு இது ஒருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை இது உட்செலுத்தப்பட்டால் இந்த வைரஸ்கள் செல்லை தாக்கி, ஸ்பைக் லேயரை உருவாக்க கட்டளையிடும். இது ஸ்பைக் புரதம் என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலாக மனித உடலில் உட்புகும் வைரஸ் இப்படி தான் தாக்குதலை துவங்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த ஸ்பைக் புரதத்தை ஒரு அச்சுறுத்தலாக அங்கீகரிக்கும் என்றும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்டிபாடிகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அது உண்மையான வைரஸிலிருந்து பாதுகாக்கத் தயாராக இருக்கும்.

எந்த கட்டத்தில் இந்த தடுப்பூசி சோதனை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது?

அஸ்ட்ரஜெனேக்கா உலக அளவில் தடுப்பூசி பரிசோதனைகளை துவங்கியது. இங்கிலாந்தில் மே மாத இறுதியில் தடுப்பூசி பரிசோதனைகளை ஆரம்பித்தது. பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் சோதனைகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி முதல் இந்தியாவில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. AZD1222 என்று உலக அளவில் அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்ட் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மனிதர்கள் மீது சோதனை நடத்த திட்டமிட்டது. 1600 நபர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டனர். 1600 நபர்களில் 100 பேருக்கு முதற்கட்டமாக செப்டம்பர் 2ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. பிறகு தடுப்பூசி போடப்படுதல் நிறுத்தப்பட்டது. ஒருவாரம் அவர்களை சோதனை செய்த பிரகு அவர்கள் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் தரவுகளை டேட்டா சேஃப்டி மற்றும் மானிட்டரிங் போர்டிடம் சமர்பிக்க வேண்டும். பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிந்து, ட்ரையலை தொடர பாதுகாப்பானதா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

இந்தியாவில் சீரம் நிறுவனம் ஏன் சோதனைகளை நிறுத்தியது?

விவரிக்க முடியாத உடல்நல குறைவு சோதனையில் ஒருவருக்கு கண்டறியப்பட்ட பிறகு அஸ்ட்ராஜெனெக்கா இந்த சோதனையை தற்காலிகமாக நிறுத்தும் முடிவை எடுத்தது. அந்நபர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் ஸ்பைனல் இன்ஃபலமேட்டரி சிண்ட்ரோம் தாக்குதலை பெற்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனால் குறிப்பிட்ட காலத்திற்கு தடுப்பூசி சோதனைகளுக்கு இடைக்கால நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரமான குழு ஒன்று வருகை புரிந்து, சேஃப்டி டேட்டாவை சோதனையிட்டு இது போன்று ஒரே பிரச்சனை தடுப்பூசியால் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய இந்நிறுத்தம் அவசியமாகிறது.

அஸ்ட்ரஜென்கா இது தொடர்பாக அறிவித்த போது சீரம் நிறுவம் இந்திய சோதனைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியது. ஆனால் இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாளரகத்தில் அறிவிக்கவில்லை. புதன்கிழமை சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாளார் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் நோயாளியின் பாதுகாப்பு நிறுவப்படும் வரை இந்தியாவில் சோதனைகளை மேற்கொள்ள அதற்கு வழங்கப்பட்ட அனுமதி ஏன் இடைநிறுத்தப்படக்கூடாது என்பதை விளக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டனர். உலகளாவிய சோதனைகளில் கண்டறியப்பட்ட பாதகமான எதிர்வினை குறித்து தெளிவு கிடைக்கும் வரை இந்தியாவில் சோதனையை நிறுத்த SII முடிவு செய்தது.

இந்தியாவுடன் தொடர்பில் இல்லாத ஒரு நபருக்கு பிரச்சனை என்றால் ஏன் சீரம் தன்னுடைய ஆய்வை நிறுத்த வேண்டும்?

10 ஆயிரம் நபர்கள் பங்கேற்றிருக்கும் இந்த ஆராய்ச்சியில் ஒருவருக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது தடுப்பூசி மேம்பாட்டு காலக்கெடு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு எதிர்பாராத எதிர்மறையான விளைவுகளும் முழுமையாக ஆராயப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த இது முக்கியமானது.

உலகளாவிய சிக்கலை சி.டி.எஸ்.கோவுக்கு சீரம் தெரிவிக்காமல் விட்டுவிட்டது. இது முந்தைய உலகளாவிய சோதனை தரவுகளின் அடிப்படையில், தடுப்பூசியின் பாதுகாப்பை சரிபார்க்கும் முதல் கட்ட மனித பரிசோதனையைத் தவிர்ப்பதற்கு நிறுவனம் அனுமதி பெற்றது. இங்கிலாந்தில் பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலரில் ஏற்பட்ட எதிர்வினையின் ஒரு சிகிச்சை மற்றும் ஒரு பாதகமான நிகழ்வின் நிகழ்வு ஆகியவற்றுக்கு இடையேயான உறவை மதிப்பீடு செய்யும் ஒரு “காரண பகுப்பாய்வு”யும் சீரம் சமர்ப்பிக்கவில்லை என்றும் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.

உலகளவில் மற்றும் இந்தியாவில் ஒரே தடுப்பூசி பரிசோதிக்கப்படுவதால், இங்கு பங்கேற்பாளர்களிடமும் இதேபோன்ற சம்பவம் நிகழ வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் - குறிப்பாக இந்தியாவில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை 5,000-10,000 ஐ விட மிகக் குறைவாகவே உள்ளனர். மேலும், உலக அளவில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா நடத்திய சோதனைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மருத்துவ தரவுகளும் ஒப்புதல்கள் வழங்கப்படும்போது பரிசீலிக்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் இந்தியாவில் சோதனைகளை நடத்த சி.டி.எஸ்.கோ அனுமதி வழங்கியது.

இது தடுப்பூசி பாதுகாப்பற்றது என்பதை சுட்டுகிறதா? எப்போது மீண்டும் தடுப்பூசி சோதனைகள் எப்போது ஆரம்பமாகும்?

தடுப்பூசியால் எந்த ஒரு பாதகமான சூழலும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யவே இந்த இடை நிறுத்தம். மேலும் எந்த ஒரு முடிவையும் விரைவாக எட்டிவிட இயலாது. இது 10 ஆயிரம் சோதனையாளர்களிம் ஒருவரிடம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முற்றிலும் தடுப்பூசிக்கு சம்பந்தமே இல்லாத ஒன்றாகவும் இருக்க கூடும். இந்தியாவில், டி.எஸ்.எம்.பி நாட்டில் சோதனையில் பங்கேற்ற 100 பேரின் பாதுகாப்புத் தரவை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் உலகளாவிய தளத்தில் கண்டறியப்பட்ட பாதகமான எதிர்வினையின் தரவையும் பார்க்க வாய்ப்புள்ளது. தடுப்பூசி பாதுகாப்பானது என்று கண்டறிந்தாலும், சுதந்திரமான குழுவின் இறுதி முடிவும் அதே என்றால், அனைத்து பகுதிகளிலும் மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை மீண்டும் தொடரும். இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிவுற்றால் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு தடுப்பூசி தயாராகும். அதற்கு முன்பு இது பாதுகாப்பானதா, இந்திய மக்கள் தொகைக்கு ஏற்றதா என்பதை கட்டுப்பாட்டாளரகம் முடிவு செய்த பிறகு மூன்றாம் கட்ட சோதனைகள் தொடரும்.

இதற்கு முன்பு இப்படி ட்ரையல்கள் நிறுத்தப்பட்டுள்ளதா?

இந்தியாவில் இது போன்று, இதற்கு முன்பு ட்ரையல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரோட்டா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்திய போது இது போன்ற சில தொந்தரவுகள் ஏற்பட பரிசோதனை செய்ய தன்னார்வலர்களின் சேர்க்கை சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. டி.எஸ்.எம்.பி. அதன் விசாரணைகளை முடித்த பிறகு மீண்டும் ட்ரையல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதுபோன்ற பெரிய ஆய்வுகளில் பாதகமான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், சோதனையை இடைநிறுத்துவது எந்தவொரு தடுப்பூசி பரிசோதனையின் “பகுதி மற்றும் பார்சல்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment