Advertisment

Explained: இராணுவ தலைமை தளபதியின் பதவிக் காலம் நீடிக்க ஏன் சட்டம் கொண்டுவருகிறது பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) இந்த மசோதாவிற்கு “நிபந்தனையற்ற ஆதரவை” அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pakistan army chief tenure extended, pakistan army amendment bill,pakistan army chief,imran khan

pakistan army chief tenure extended, pakistan army amendment bill,pakistan army chief,imran khan

வெள்ளிக்கிழமை (ஜனவரி 3), பாகிஸ்தானின் தேசிய அவையும்  மற்றும் செனட்டின் பாதுகாப்புத் துறைக்கான கூட்டு நிலைக்குழுவும்  அந்நாட்டின் இராணுவம், கடற்படை விமானப்படை குறித்த  சட்டங்களை திருத்தும் மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தன.

Advertisment

குறிப்பிடும் படியாக, பாகிஸ்தான் ராணுவம் (திருத்தம்) மசோதா அந்நாட்டின் இராணுவ தலைமை தளபதி (கோஸ்) கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளாக அதிகரிக்க முயல்கிறது. மற்ற இரண்டு மசோதாக்கள் முறையே பாகிஸ்தான் கடற்படை (திருத்தம்) சட்டம், பாகிஸ்தான் விமானப்படை (திருத்தம்) சட்டம்.

சட்டத்தின் பின்னணி :

ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. அதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, “பிராந்திய பாதுகாப்பு நிலைமையை” கருத்தில் கொண்டு இராணுவ தலைமை தளபதி பஜ்வாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக இம்ரான் அறிவித்தார், பஜ்வாவின் பதவிக்காலம் 2019ம் ஆண்டு நவம்பரில்  முடிவடையவிருந்தது.

இதன் தொடர்ச்சியாக டிசம்பரில், தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இராணுவ தலைமை தளபதிக்கு மூன்று ஆண்டு நீட்டிப்பு வழங்கிய  பாகிஸ்தான் அரசிடம், "இந்த பதவி நீட்டிப்பை நீங்கள் நியாயப் படுத்த வேண்டிம் , பதவி நீட்டிப்பிற்கான சட்ட அதிகாரம் உங்களிடம் உள்ளதா? " என்று பல கேள்விகளை முன்வைத்தது.

எவ்வாறாயினும், அவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், அரசின் மூன்றாண்டு நீட்டிப்பை ரத்து செய்ததோடு,  பஜ்வாவுக்கு ஆறு மாத கால நிபந்தனை நீட்டிப்பையும்  வழங்கியது. இதன் பொருள், பஜ்வா  தொடர்பான சட்டங்களை ஆறு மாதத்திற்குள் பாகிஸ்தான் பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

Explained : முப்படை தலைமைத் தளபதியின் அதிகாரம் என்ன?

சட்டத் திருத்தம் :

மூன்று மசோதாக்களின் திருத்தங்கள் மூலம்  முப்படை ஜெனரல்கள், இராணுவ தலைமை தளபதியின்  ஓய்வு வயதை 64-க நிர்ணயிக்கும் என்று பாகிஸ்தான் நாளேடான ‘டான்’(dawn) வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

60 வயதில் இவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க  ஜனாதிபதிக்கு இறுதி ஒப்புதல் பெற்று பிரதமர் நீட்டுக்க அதிகாரம் அளிக்கின்றது.

'டான்' மேற்கோள் காட்டப்பட்ட திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 8 சி யின் கீழ் , “இந்தச் சட்டத்தின் (அதாவது,  பாகிஸ்தான் ராணுவ சட்டம் 1952 ) கீழ் செய்யப்பட்ட விதிமுறைகளின் கீழ், ஒரு ஜெனரலுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஓய்வூதிய வயது மற்றும் சேவை வரம்புகள், இராணுவப் படைத் தலைவருக்கு பொருந்தாது. அவரது நியமனம், மறு நியமனம் அல்லது நீட்டிப்பு, அதிகபட்சமாக அறுபத்து நான்கு (64) வயதுக்கு உட்பட்டது. அத்தகைய பதவிக்காலம் முழுவதும், இராணுவப் படைத்தலைவர் பாகிஸ்தான் இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றுவார்.”

காசெம் சுலேமானீ மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்,  பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) இந்த மசோதாவிற்கு “நிபந்தனையற்ற ஆதரவை” அளிப்பதாக உறுதியளித்துள்ளது. மற்றொரு பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி)  மிகவும்  அவசரமாக செயல்படுவதாக பாகிஸ்தான் அரசை எச்சரித்துள்ளது.

நீட்டிப்பின் முக்கியத்துவம் :

பாகிஸ்தானில் இராணுவம் மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பாகும். கடந்த காலங்களில் இராணுவத் தலைவர் பெரும்பாலும் நாட்டின் மிக சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டார்.

கடந்த காலங்களில், குறைந்தது ஆறு பாகிஸ்தான் இராணுவத் தலைவர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பஜ்வா வழக்கில் உள்ள வேறுபாடு என்னவென்றால், முப்படைத் தளபதி நீட்டிப்பை முதன்முதலாக  உச்சநீதிமன்றம் எதிர்த்து அனைவரையும் திருப்பி பார்க்க வைத்தது.பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இந்த சம்பவம் முதல் முறை என்பதால் ஒருவிதமான பதட்டமும் நிலவயு வந்தது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தனது நவம்பர் உத்தரவில், "இராணுவ நீட்டிப்பிற்கான, காரணமும் ஒப்புதலும் சரியாகயில்லை" என்று கூறியது.

இராணுவ தலைமை தளபதியின் பதவி நீட்டிப்பை நியாயப்படுத்தவும், எதிர்காலத்தில் நீட்டிப்புகள் எவ்வாறு செயல்படும் என்பதற்கு பதிலாகவும்  இந்த சட்ட திருத்தம் இருக்கின்றது.

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment