பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28-ம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கட்டடத்தை திறந்து வைக்க கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அரசியலமைப்பில் இருந்து காங்கிரஸ் தவறாக மேற்கோளை காட்டுவதாகவும் இந்தியாவின் முன்னேற்றத்தில் எந்த தேசிய உணர்வும் மற்றும் பெருமை உணர்வும் காங்கிரஸிற்கு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர் மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர், பிரதமருக்குப் பதிலாக, இந்தியக் குடியரசுத் தலைவர்தான் கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளை மேற்கோள் காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு பூரியின் கருத்துக்கள் வந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பாசாங்குத்தனத்தை நியாயப்படுத்த முயல்கிறார்கள் என்று கூறிய பூரி, அக்டோபர் 24, 1975 அன்று நாடாளுமன்ற இணைப்பு வளாகத்தை இந்திரா காந்தியும், ஆகஸ்ட் 15, 1987 அன்று நாடாளுமன்ற நூலகத்திற்கு ராஜீவ் காந்தியும் அடிக்கல் நாட்டிய போது இருவரும் பிரதமர்களாக இருந்தனர் என்று கூறினார்.
இருப்பினும், நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்திற்கு அடிக்கல்லை அப்போதைய இந்திய ஜனாதிபதியால் நாட்டப்பட்டது. மேலும் நாடாளுமன்ற நூலகமும் ராஷ்டிரபதி பவனில் இருந்தவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மே 28 அன்று புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, டிசம்பர் 10, 2020 அன்று அதற்கான அடிக்கல்லையும் அவர் தான் நாட்டினார். ஜூலை 2017 இல் பாராளுமன்ற இணைப்பின் விரிவாக்க கட்டிடத்தையும் பிரதமர் மோடி தான் திறந்து வைத்தார் என எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசியலமைப்பின் எந்தப் பிரிவுகளை காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது?
காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் குடியரசுத் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆகவே அவர்தான் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றார்.
தரூர் எம்.பியும் கார்கே கருத்தை ஆதரித்து அரசியலமைப்பு சட்டப் பிரிவு 60 மற்றும் 111-யை குறிப்பிட்டார், அதில், "ஜனாதிபதியே நாடாளுமன்றத்தின் தலைவர் என்பதை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி அவரே பூமி பூஜைநிகழ்த்தியது வினோதமானது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றார்.
அரசியலமைப்பு பிரிவு 60
(ஜனாதிபதியின் உறுதிமொழி அல்லது ஒப்புதல்) ஜனாதிபதி பதவி ஏற்கும் முன் எடுக்க வேண்டிய உறுதிமொழியைக் குறிப்பிடுகிறது: "நான், அவரின் பெயர் ., கடவுளின் பெயரால் சத்தியம் செய்கிறேன்/ ஜனாதிபதியின் பதவியை உண்மையாக நிறைவேற்றுவேன் என்று உறுதியாக உறுதியளிக்கிறேன். இந்தியக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளை நிறைவேற்றி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தைப் பாதுகாத்து இந்திய மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக நான் அர்ப்பணிப்போடு சேவை செய்வேன் என்று கூறுவதாகும்.
சட்டப்பிரிவு 111
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவை என்பதாகும்.
இந்நிலையில், பூரி தரூருக்கு பதிலளிக்கையில், சட்டப்பிரிவு 60 மற்றும் 111க்கு அவர் கட்டமைக்க முயற்சிகள் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் ஜனாதிபதி இரு அவைகளில் எந்த உறுப்பினராக இல்லை, ஆனால் பிரதமர் உள்ளார் என்றார்.
மணிஷ் திவாரி, பூரியின் கருத்து பதிலளிக்கையில், சட்டப் பிரிவு 79 யூனியனுக்கு ஒரு பாராளுமன்றம் இருக்க வேண்டும், அதில் ஜனாதிபதி மற்றும் இரண்டு அவைகள் முறையே மாநிலங்கள் மற்றும் மக்கள் மன்றம் என அறியப்படும் என்று கூறினார்.
பூரி குறிப்பிடும் கட்டிடங்கள் என்ன?
பா.ஜ.க அமைச்சர் பூரி, இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற இணைப்பு கட்டடம் மற்றும் ராஜீவ் காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட நாடாளுமன்ற நூலக வளாகத்தை குறிப்பிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“