Advertisment

ராணுவத்தில் பெண்கள்: உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

இராணுவத்தில் உண்மையான சமத்துவத்தை கொண்டுவருவதற்கான மனநிலையின் மாற்றத்தின் அவசியத்தை உச்சநீதிமன்றம் எடுத்துரைத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
permanent commission to women officer

permanent commission to women officer in indian army supreme court judgement

இராணுவத்தின் 10 பிரிவுகளில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

Advertisment

வழக்கின் பின்னணி : இராணுவத்தில் பெண் அதிகாரிகளை பணி அமர்த்தும் பணி இந்தியாவில் 1992 ஆண்டே தொடங்கியது. இராணுவ கல்வி படைப்பிரிவு , சிக்னல்கள் படைப்பிரிவு , புலனாய்வுப் படைகள், இன்ஜினியர்ஸ் படைப்பிரிவு போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட நீரோடைகளில் பெண் அதிகாரிகள் ஐந்து வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இந்தியப் படைகளில் குறுகிய சேவை ஆணையம் (SSC ) மூலம் ஆண்களைப் போல பெண்களை நியமனம் செய்யும் அணுகுமுறையை இந்நாள் வரை கடைபிடிக்கவில்லை. ராணுவத்தில் பெண் அதிகாரிகள் சிறப்பு நுழைவுத் திட்டத்தின் (WSES) கீழ் நியமனம் செய்யப்பட்டனர்.

2006ஆம் ஆண்டில், பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு நுழைவுத்  திட்டம், குறுகிய சேவை ஆணையம் (SSC) திட்டமாக மாற்றப்பட்டன. இதன் மூலம் ராணுவத்தில் பெண்கள் 10 வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டனர் (14 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுக்கலாம்).

சேவை செய்யும் WSES அதிகாரிகளுக்கு புதிய SSC திட்டத்திற்கு செல்லவும்,அல்லது முந்தைய WSES இன் கீழ் தொடரவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், முன்னர் இருந்த குறிப்பிடப்பட்ட படைப்பிரிவுகளில் குறிப்பிட்ட வேலைகளை தான் செய்ய வேண்டும். உதாரணமாக பீரங்கிகளை இயக்குபவர்கள், ஆயுதங்களைக் கையாள்பவர்கள் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை.

குறுகிய சேவை ஆணையம் (SSC) மூலம் நியமிக்கப்பட்ட ஆண் அதிகாரிகள் 10 வருட ராணுவ சேவையின் முடிவில் நிரந்தர கட்டளைப் பணியைத் தேர்வு செய்யலாம். இந்த வசதி பெண் அதிகாரிகளுக்கு கிடையாது.  'நிரந்தர கட்டளைப் பணி' இல்லாத ஒருவர் முன்கூட்டியே பதவி ஓய்வு பெற நேரிடும் அல்லது கட்டாயமாக அவர்களது பணிக்காலம் முடித்து வைக்கப்படும். ஆகவே , ராணுவத்தில் உள்ள பெண்கள் எந்தவொரு தளபதி நியமனத்திற்கு தகுதியற்றவர்கள். அரசாங்க ஓய்வூதியமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஏனெனில் ஒரு ராணுவ அதிகாரியாக 20 ஆண்டுகள் பணியாற்றிய பின்னரே ஓய்வூதியம் தொடங்கப்படும். முதன் முதலில் குறுகிய சேவை ஆணையம் (SSC) திட்டத்தின் கீழ் பெண் அதிகாரிகள் 2008 இல் இராணுவத்தில் நுழைந்தனர்.

நீதிமன்றங்களில் நடந்த வார்த்தை போர்:  

இராணுவத்தில் உள்ள பெண்கள் எஸ்.எஸ்.சி அதிகாரிகளுக்கு நிரந்தர கட்டளைப் பணி (பிசி) வழங்குவேண்டும் என்று  2003 ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுஜன மனு தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 2008 இல், நீதிபதி அட்வகேட் ஜெனரல் (ஜேஏஜி) பிரிவு மற்றும் இராணுவ கல்வி படைப்பிரிவு (ஏஇசி) ஆகியவற்றில் உள்ள எஸ்.எஸ்.சி பெண்கள் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை செப்டம்பர் 2008 இல், பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்தது.

நிரந்தர கட்டளைப் பணியை ஒரு குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளதாக கூறி இந்த சுற்றறிக்கையும்  டெல்லி உயர்நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது.

2003, 2006, மற்றும் 2008 மனுக்களை ஒன்றாக்கி, 2010 ஆம் ஆண்டு தன்னுடைய  தீர்ப்பை வழங்கியது . விமானப்படை மற்றும் ராணுவத்தில் பணி புரியும் பெண் எஸ்எஸ்சி அதிகாரிகளுக்கு நிரந்தர கட்டளைப் பணி அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தப்படாவிட்டாலும்,பாதுகாப்பு அமைச்சகம் அந்த உத்தரவுகளை செயல்படுத்தவில்லை.

வழக்கு விசராணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல், இராணுவ கல்வி படைப்பிரிவு மற்றும் இராணுவத்தின் இதர எட்டு பிரிவுகளில் எஸ்.எஸ்.சி பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்குவதற்கான உத்தரவை மத்திய அரசு 2019 பிப்ரவரியில் நிறைவேற்றியது. இருப்பினும், அவர்களுக்கு எந்தவொரு ராணுவத் தளபதி நியமனங்களும் வழங்கப்படாத வகையில் இந்த சுற்றறிக்கை அமைந்திருந்தது.

 தாக்கங்கள்: 

ஓய்வூதிய சலுகைகள், கொள்கை முடிவுகளில் நீதித்துறையின் இருக்கும்  மறுஆய்வு வரம்புகள், தொழில்சார் அபாயங்கள், பெண்களுக்கு எதிரான இயல்பான பாகுபாடு, உடலியல் வரம்புகள் போன்ற வாதங்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது.

இந்த வாதங்களை மறுத்த உச்ச நீதிமன்றம், இராணுவத்தில் உண்மையான சமத்துவத்தை கொண்டுவருவதற்கான மனநிலையின் மாற்றத்தின் அவசியத்தை எடுத்துக் கூறியது.

ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல், ராணுவக் கல்விப் பிரிவு, பொறியாளர்கள், ராணுவ விமானப் பிரிவு, ராணுவ வான் பாதுகாப்பு பிரிவு, மின்னணு மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள், ராணுவத் தளவாடங்கள் தொடர்பான பிரிவுகள், ராணுவ உளவுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பெண்கள் நிரந்தரமாகப் பணியாற்ற உத்தரவு பிறப்பித்தது .

இதன் பொருள் என்னவென்றால், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக, அனைத்து ராணுவத் தளபதி நியமனங்களுக்கும் பெண் அதிகாரிகள் தகுதி பெறுவார்கள். இது அவர்களுக்கு உயர் பதவிகளில் பதவி உயர்வு பெறுவதற்கான வழிகளைத் திறக்கும். பெண் அதிகாரிகள் ஊழியர்களில் மட்டுமே பணியாற்றியிருந்தால், அவர்கள் கர்னல் பதவி அப்பால் சென்றிருக்க மாட்டார்கள்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க: Explained: What Supreme Court said on women in Army

Supreme Court Supreme Court Of India Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment