Advertisment

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

மே மாத தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.9 அதிகரித்ததன் விளைவாக குறைந்தபட்சம் 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
petrol diesel prices are high, petrol price, diesel price are high, petrol diesel prices, global crude oil, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன, இந்தியா, தமிழ்நாடு, மத்திய வரி, மாநில வரி, central state taxes, What reason for high petrol diesel prices, india, tamil nadu, delhi

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதற்கு உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.

Advertisment

மே மாத தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.9 அதிகரித்ததால் குறைந்தபட்சம் 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.6 அதிகரித்து ரூ.101.5 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.12.4 அதிகரித்து ரூ.93.6 ஆகவும் விற்பனையாகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிப்பதன் பங்கையும் சமீபத்திய எரிபொருள் விலைகள் மீதான வரி ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறது.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் எரிபொருள் (பெட்ரோல் டீசல்) விலையை எவ்வாறு பாதித்தன?

உலக பொருளாதாரம் கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால், உலகளாவிய தேவை மீண்டும் உயர்ந்தது. இந்த பின்னணியில் 2021ம் ஆண்டில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ப்ரெண்ட் கச்சா விலை 37.1 சதவீதம் அதிகரித்து பீப்பாய்க்கு 71 டாலராக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை என்பது சர்வதேச பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சராசரியாக 15 நாளுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவின் கச்சா எண்ணெய் வாங்கும் விலை, சராசரியாக பீப்பாய்க்கு 105.5 டாலராக இருந்தபோது, ​​தற்போதைய பெட்ரோல் விலை 14வது நிதியாண்டைவிட கணிசமாக அதிகமாக உள்ளன. 2010ம் ஆண்டில் பெட்ரோல் விலை கட்டுப்பாட்டில் இருந்து விடுக்கப்பட்டது. அதே போல, 2014ம் ஆண்டில் டீசல் விலை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.

ஜூன் 2013 இல், இந்தியா வாங்கிய கச்சா எண்ணெய் விலை சராசரியாக ஒரு பீப்பாய்க்கு 101 டாலராக இருந்தபோது, ​​அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் தேய்மானம் சரிசெய்யப்படும்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.63.09 அல்லது ஒரு லிட்டர் சுமார் ரூ.76.6க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல, அக்டோபர் 2018-ல், இந்தியா வாங்கிய கச்சா எண்ணெயின் சராசரி விலை பீப்பாய்க்கு 80.1 டாலராக இருந்தபோது, ​​டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.7 ஆக உயர்ந்தது.

வரிகளின் தாக்கம் என்ன?

பெட்ரோல், டீசல் மீது மத்திய மாநில அரசுகள் வரிகளை அதிகரிப்பது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மிக உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம். கச்சா எண்ணெயின் விலை 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட 3.5 சதவீதம் மட்டுமே அதிகமாக இருந்தாலும், கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், கச்சா எண்ணெய் தேவை கடுமையாக வீழ்ச்சியடைய வழிவகுத்தது.

டெல்லியில், மத்திய மற்றும் மாநில அரசு வரிகள் பெட்ரோல் விலையில் 57 சதவீதமும், டீசல் பம்ப் விலையில் 51.4 சதவீதமும் உள்ளன. தொற்றுநோய் பொருளாதார நடவடிக்கைகளில் கூர்மையான வீழ்ச்சிக்கு வழிவகுத்ததால், வருவாயை உயர்த்துவதற்காக மத்திய அரசு 2020ம் ஆண்டில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசலுக்கு ரூ.16 ஆகவும் உயர்த்தியது.

ராஜஸ்தான், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்கள் தொற்றுநோய்களின்போது விதிக்கப்பட்ட மாநில வரிகளை குறைத்துள்ளன. இருப்பினும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வாகன எரிபொருட்களுக்கான வரியை குறைக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கோரிக்கை இருந்தபோதிலும் மத்திய அரசு மத்திய வரிகளை குறைக்கவில்லை.

டீசல் மீதான மொத்த வரிகளில் 71.8 சதவீதம் மத்திய வரி விதிக்கிறது. தேசிய தலைநகரில் டீசல் மீதான மொத்த வரிகளில் 60.1 சதவீதம் மத்திய வரியாக இருக்கிறது.

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்து தற்போது அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தார். “தற்போது, வருவாய் குறைவாக உள்ளது. செலவில் நாம் சமரசம் செய்ய முடியாது. சுகாதாரத் துறையின் செலவு அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Petrol Diesel Rate Petrol Diesel Price
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment