Advertisment

Explained: பிரசாந்த் பூஷன் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏன் நிராகரித்தது?

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனால் பதிவிட்ட 2 ட்விட்டர் பதிவுகள் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
prashant bhushan, prashant bhushan contempt of court, SC on prashant bhushan, பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு, prashant bhushan tweet contempt, prashant bhushan comment on supreme court, prashant bhushan comment on supreme court news, prashant bhushan supreme court tweet, prashant bhushan supreme court tweet news, prashant bhushan tweet cji, prashant bhushan tweet cji news

Faizan Mustafa

Advertisment

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனால் பதிவிட்ட 2 ட்விட்டர் பதிவுகள் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிவித்துள்ளது. தீர்ப்பில் புதிதாக எதுவும் கூறவில்லை (தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை) என்றாலும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் அவமதிப்புச் சட்டத்தின் பொருத்தப்பாடு, முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளில் உள்ள நீதிபதிகளை விமர்சிப்பதை நீதிபதிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், இந்தியாவின் நீதிமன்றங்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது பற்றிய விவாதத்தை இது மீண்டும் தொடங்கியுள்ளது.

பிரசாந்த் பூஷனின் வாதங்களை நீதிமன்றம் ஏன் நிராகரித்தது?

பிரசாந்த் பூஷன் ட்வீட்டுகளில் ஒன்று இந்தியாவின் கடைசி நான்கு தலைமை நீதிபதிகளின் பங்கு பற்றியது. மற்றொரு ட்வீட், நீதிமன்றம் பொதுமுடக்கத்தில் இருந்தபோது, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுவது பற்றியதாக இருந்தது. பிரசாந்த் பூஷன் வருத்தம் தெரிவித்தபோதிலும் பிரசாந்த் பூஷனின் பிந்தைய ட்வீட் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் (சி.ஜே.ஐ.) அவரது தனிப்பட்ட திறனுக்கு எதிரானது அல்ல. ஆனால், அது நீதித்துறையின் தலைமைய்க்கு எதிரானது என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுமுடக்க கருத்துக்கு நீதிபதிகள் விதிவிலக்கு எடுத்துக்கொண்டு மார்ச் 23 முதல் ஆகஸ்ட் 4 வரை, உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு பெஞ்சுகளில் 879 அமர்வுகள் இருந்தன. அதில் 12,748 விசாரணைகளை செய்துள்ளன என்ரு குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் பிரசாந்த பூஷனே ஒரு வழக்கறிஞராக ஆஜராகியது மட்டுமல்லாமல், அவருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை எதிர்த்து வாதாடியுள்ளார். அதனால், அவரது ட்வீட்டை வேதனையில் இருந்து எழுதப்பட்டது என்பதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

மற்றொரு ட்வீட்டைப் பொறுத்தவரை, கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பான நீதிமன்றம் இந்திய ஜனநாயகத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்தது என்ற தோற்றத்தை அளிக்க முனைகிறது. "இந்த ட்வீட் நீதித்துறை நிறுவனம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உலுக்கும் என்பதில் சந்தேகமில்லை ... இந்த ட்வீட் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் சி.ஜே.ஐ அமைப்பின் கண்ணியத்தையும் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், சட்டத்தின் பெருமையை நேரடியாக பாதிக்கிறது.” என்று நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.

vital என்ற முக்கிய வார்த்தை உண்மையான ட்வீட்டில் இல்லை, ஆனால் தீர்ப்பின் பாரா 71 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல வல்லுநர்கள் இதே போன்ற விஷயங்களை கூறியிருந்தாலும் அல்லது எழுதியிருந்தாலும், ட்வீட் என்பது ஒரு கருத்து மட்டுமே என்ற வாதத்தை பெஞ்ச் நிராகரித்தது. ஜனவரி 11, 2018 அன்று உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 4 பேர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, “மிக உயர்ந்த நீதித்துறையின் நம்பகத்தன்மை ஆபத்தில் உள்ளது” என்று கூறினார்கள். ஒரு சுதந்திரமான நீதித்துறை வெற்றிகரமான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பாக இருப்பதால் ஜனநாயகம் நீடிக்காது என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுபோன்ற ஒரு வலுவான குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் பொறுத்துக்கொண்டது. அப்போது சி.ஜே.ஐ-யாக நீதிபதி தீபக் மிஸ்ரா இருந்தார். இப்போது, ​​ஒரு வழக்கறிஞர் மற்றும் செயல்பாட்டாளரின் ட்வீட்களை புறக்கணிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் தேர்வு செய்கிறது. நீதித்துறை அமைப்பின் அஸ்திவாரத்தின் மீது தீங்கிழைக்கும், கொடூரமான, கணக்கிடப்பட்ட தாக்குதலைக் கையாள்வதில் பலவீனம் ஏற்படக்கூடிய அளவிற்கு அதன் தன்மையை நீட்டிக்க முடியாது என்றும் அதன் மூலம் ஜனநாயகத்தின் அடித்தளத்தை சேதப்படுத்தும் என்றும் பெஞ்ச் கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் முக்கிய வாதங்கள் என்ன?

உண்மையான தலையீடு: ட்வீட் உண்மையில் நீதி நிர்வாகத்தில் தலையிடவில்லை என்ற வாதத்தை அது நிராகரித்தது. இது பிரம்ம பிரகாஷ் ஷர்மா வழக்கை (1953) சார்ந்துள்ளது. அதில் நீதி நிர்வாகத்தில் உண்மையான குறுக்கீடு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாக நிரூபிக்க தேவையில்லை என்று அரசியலமைப்பு பெஞ்ச் கூறியுள்ளது. மேலும், நீதி நிர்வாகத்தில் உண்மையான தலையீடு செய்வதற்கு அவதூறான அறிக்கை இருந்தால் போதும் அல்லது அவதூறு செய்ய முனைந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற பெஞ்ச், சி.கே. தப்தரி (1971) வழக்கை சார்ந்துள்ளது. அதில் நீதிமன்றம், “ஒரு தீர்ப்பு அல்லது கடந்தகால நடத்தை தொடர்பாக ஒரு நீதிபதி மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுவது நீதியின் உண்மையான நிர்வாகத்தில் எந்தவிதமான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது என்பதை அவருடன் நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. நம்மைப் போன்ற ஒரு நாட்டில் இந்த வகையான தாக்குதல் நீதித்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் தவிர்க்க முடியாத விளைவைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை அவதூறு செய்தல் : பரதகாந்தா மிஸ்ரா (1974) வழக்கை நீதிமன்றம் மேற்கோள்காட்டியுள்ளது. நீதிமன்றத்தை அவதூறு செய்வது ஒரு வகை அவமதிப்பு மேலும், நீதிபதியை இழிவுபடுத்துவது ஒரு பொதுவான வடிவம் ஆகும். இதில் நீதிமன்றம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நீதிபதியை ஒரு நீதிபதியாக இழிவுபடுத்தப்படுகிறாரா அல்லது ஒரு தனிநபராக இழிவுபடுத்தப்படுகிறாரா என்பதுதான். தனிநபராக என்றால், நீதிபதி தனது தனிப்பட்ட தீர்வுகளுக்கு விடப்படுவார். மேலும் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு செய்ய அதிகாரம் இல்லை. நீதிமன்ற பெஞ்ச், வெள்ளிக்கிழமை, நீதிபதிகள் மீதான நியாயமான விமர்சனம், பொது நலனில் நல்ல நம்பிக்கையுடன் இருந்தால், அவமதிப்பு அல்ல என்று கூறியது. இதில் நல்ல நம்பிக்கையை எவ்வாறு கண்டறிவது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதில் நல்ல நம்பிக்கையையும் பொது நலனையும் அறிந்து கொள்வதற்காக, கருத்துக்களுக்குப் பொறுப்பான நபரின் துறையில் அவரது அறிவு மற்றும் நோக்கம் உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்து சூழ்நிலைகளையும் நீதிமன்றங்கள் காண வேண்டும் என்று பெஞ்ச் கூறியது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான முந்தைய தீர்ப்புகளிலிருந்து இந்த தீர்ப்பு எவ்வாறு ஒத்திருக்கிறது அல்லது வேறுபட்டுள்ளது?

அவமதிப்பு சட்டத்தின் முந்தைய தீர்ப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த தீர்ப்பில் புதிதாக எதுவும் இல்லை. அதில் பல பெஞ்ச்களின் தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது. பிரசாந்த் பூஷன் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் (2001; அவருக்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன) ஒரு நீதிபதியின் தனிப்பட்ட விமர்சனம் நியாயமான விமர்சனத்திற்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. நீதிபதி ரூமா பால் அவமதிப்புச் சட்டத்தை சுருக்கமாகக் கூறியபோது, “​​ஒரு நீதிபதிக்கு உள்நோக்கங்களைக் கூறுவது என்பது ஒட்டுமொத்தமாக நீதி நிர்வாகத்தைப் பற்றி பொதுமக்களின் மனதில் அவநம்பிக்கை விதைகளை விதைப்பதாகும். சட்டத்தை அமல்படுத்துவதற்கு பொறுப்பான நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக பொதுமக்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் விளைவைவிட எதுவும் ஆபத்தானது அல்ல.” என்று தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971 இன் பிரிவு 2 (சி) இன் கீழ் குற்றவியல் அவமதிப்பு என்பது எந்தவொரு வெளியீட்டையும் குறிக்கிறது. (i) எந்தவொரு நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அவதூறு செய்யும் அல்லது அவதூறு செய்யும் நோக்கம் கொண்ட, அல்லது நீதிமன்றத்தின் மதிப்பைக் குறைக்கும் அல்லது குறைக்கும் நோக்கம் கொண்டதையும் அல்லது (ii)எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளின் சரியான போக்கில் தவறான எண்ணங்களை ஏற்படுத்துவது அல்லது தலையிடுவது அல்லது தலையிட முனைவது அல்லது (iii) வேறு எந்த வகையிலும் நீதி நிர்வாகத்தில் தலையிடுவது அல்லது தலையிடும் நோக்கம் அல்லது நீதி நிர்வாகத்தை தடுப்பது அல்லது தடுப்பதை நோக்கமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறது.

2006ம் ஆண்டில் அரசாங்கம் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அது இப்போது பொது நலனில் உண்மைக்கு பாதுகாப்பு வழங்குவதால் அது நேர்மையானதாகிறது.

நீதிமன்றத்தை அவதூறு செய்வது என்ற வெளிப்பாடு வரையறுக்கப்படவில்லை. சிவ சங்கர் வழக்கில் (1988) உச்சநீதிமன்றம், நீதி நிர்வாகத்தை பாதிக்காத மற்றும் தடைசெய்யாத நீதிமன்ற விமர்சனத்தை அவமதிப்பு என்று தண்டிக்க முடியாது என்று கூறியுள்ளது.

இது ஒரு ட்வீட் உண்மையில் நீதி நிர்வாகத்தைத் தடுக்க முடியுமா, அந்தளவுக்கு நீதியின் கௌரவம் மிகவும் பலவீனமாக இருக்கிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இது ஒரு செயல்பாட்டாளரின் -வழக்கறிஞரின் கருத்து என்று முதிர்ச்சியடைந்த இந்திய மக்களின் பார்வையில் குறைத்து பார்க்கப்படும்.

publive-image

பிற ஜனநாயக அமைப்புகள் அவமதிப்பு கேள்வியை எவ்வாறு கையாண்டன?

இந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் உள்ள முன்னோடிகளுடன் ஒத்துப்போகும் அதே வேளையில், பிற முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளால் அமைக்கப்பட்ட கொள்கைகளுக்கு இது கீழாக உள்ளது. 1987 ஆம் ஆண்டில், பிரபுக்கள் அவையின் ஸ்பைகேட்சர் தீர்ப்புக்குப் பிறகு, டெய்லி மிரர் மூன்று சட்ட பிரபுகளின் தலைகீழான படங்களை ‘நீங்கள் வயதான முட்டாள்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டது. பிரபுக்கள் அவை தலைவர் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க மறுத்துவிட்டார். மேலும், அவர் உண்மையில் வயதாகிவிட்டவர் என்றும் அவர் ஒரு முட்டாள் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றாலும் அவர் தனிப்பட்ட முறையில் ஒரு முட்டாள் அல்ல என்று கூறினார்.

பிரிட்டிஷ் நீதிபதிகள் பெரும்பாலும் தனிப்பட்ட அவமதிப்புகளை கவனிப்பதில்லை. பிரெக்ஸிட் தீர்ப்புக்குப் பின்னர், அதே வெளியீடு தனது அறிக்கையில் "மக்கள் எதிரிகள்" என்ற தலைப்பில் தலைப்புச் செய்தியாக இருந்தது. ஆனால் அவமதிப்பு அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இங்கிலாந்தில் 1930ம் ஆண்டில் கடைசியாக அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அவமதிப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், சட்ட ஆணையம் 2018 ஆம் ஆண்டில் தனது 274 வது அறிக்கையில் இதுபோன்ற வழக்குகள் அதிகமாக இருப்பதால் இதுபோன்ற சட்டத்தைத் தொடர பரிந்துரைத்தது (ஜூலை 1, 2016 முதல் ஜூன் 30, 2017 வரை 586 வழக்குகள் நிலுவையில் உள்ளது).

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஹ்யூகோ பிளாக், பிரிட்ஜ்ஸில் (1941) “வெளியிடப்பட்ட விமர்சனங்களிலிருந்து நீதிபதிகளை பாதுகாப்பதன் மூலம் நீதித்துறைக்கு மரியாதை வெள்ள முடியும் என்ற அனுமானம் அமெரிக்க பொதுக் கருத்தின் தன்மையை தவறாக விளக்குகிறது… ஒரு நடைமுறைப்படுத்தப்பட்ட அமைதி எவ்வளவு வரையறுக்கப்பட்டாலும், பெஞ்சின் கவுரவத்தைப் பாதுகாப்பது என்ற பெயரால் மரியாதை அதிகரிக்கும் என்பதைவிட அதிருப்தி, சந்தேகம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்தது.

அமெரிக்காவைப் போலவே, கனடாவும் நீதி நிர்வாகத்திற்கு உடனடி அல்லது தெளிவான ஆபத்து இருக்கும்போது மட்டுமே அவமதித்ததற்காக மக்களை தண்டிக்கிறது. கோபிட்டோவில் (1987) நீதிமன்றங்கள் பலவீனமான பூக்கள் அல்ல, அவை சர்ச்சையின் சூடான கடலில் வாடிவிடுவதற்கு என்று கூறப்பட்டுள்ளது. முண்டேயில் (1972), ஆஸ்திரேலியாவின் ஜஸ்டிஸ் ஹோப், “பொது நிறுவனங்களின் செயல்களை விட நீதிமன்றங்களின் செயல்களை கடுமையாக விமர்சிக்கக் கூடாது என்பதற்கு வேறு எந்த காரணமும் இல்லை” என்றார்.

அவமதிப்பு சட்டம் ஏன் சிக்கலாகக் கருதப்படுகிறது?

நீதிபதி தானே வழக்கறிஞராகவும் பாதிக்கப்பட்டவராகவும் செயல்படுகிறார். மேலும், குற்றமற்றவர் என்பதைவிட குற்ற உணர்ச்சியுடன் தொடங்குகிறார். அவமதிப்பு நடவடிக்கைகள் அரை குற்றவியல் மற்றும் சட்ட சுருக்கம் ஆகும். பிரிட்டிஷ் நீதிபதி டென்னிங் பிரபு மெட்ரோபொலிட்டன் போலீஸ் கமிஷனர் வழக்கு (1969) விசாரித்தார். அதன்படி, அவமதிப்பு “அதிகார வரம்பு சந்தேகத்திற்கு இடமின்றி எங்களுக்கு சொந்தமானது. ஆனால், நாங்கள் அதை மிகக்குறைவாகப் பயன்படுத்துவோம்: குறிப்பாக இந்த விஷயத்தில் நமக்கு ஒரு ஆர்வம் இருப்பதால். எங்கள் கவுரவத்தை நிலைநிறுத்துவதற்கான வழிமுறையாக இந்த அதிகார வரம்பை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று ஒரே நேரத்தில் சொல்கிறேன். அது உறுதியான அஸ்திவாரங்களில் இருக்க வேண்டும். எங்களுக்கு எதிராகப் பேசுபவர்களை அடக்குவதற்கும் நாங்கள் அதைப் பயன்படுத்த மாட்டோம். நாங்கள் விமர்சனத்திற்கு அஞ்சுவதில்லை. அதை நாங்கள் எதிர்க்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

சட்ட வல்லுனர்

பைசன் முஸ்தபா, தற்போது நல்சார் சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம், மனித உரிமைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றில் நிபுணர் ஆவார். அவர் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் சில உச்சநீதிமன்றத்தால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவர் யூடியூப்பில் 'சட்ட விழிப்புணர்வு' வலைத் தொடரை நடத்திவருகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment