Advertisment

பெகாசஸ் செல்போன்களில் ஊடுருவி எவ்வாறு உளவு பார்க்கிறது? விரிவாக கூறும் விளக்கப்படங்கள்

இது ஒரு மிகவும் அடிப்படையான அமைப்பு. இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு சாதனத்திலும் இது ஊடுருவி வேவு பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Project Pegasus, Quixplained, spyware

Project Pegasus : இந்தியாவில் இரண்டு அமைச்சர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பல ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய கூட்டமைப்பு நடத்திய விசாரணை ஒன்றில் பெகாசஸ் என்ற கண்காணிப்பு ஸ்பைவேர் வாட்ஸ்ஆப் மூலமாக உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கான நபர்களை உளவு பார்க்க பயன்படுத்தியதாக கூறியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த ஸ்பைவேர் மூலமாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

பெகாசஸ் போன்ற ஒரு ஸ்பைவேர் எப்படி செயல்படும் என்பதை கூறுகிறது இந்த விளக்கப்படங்கள்.

publive-image

இஸ்ரேலில் உள்ள என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் இந்த ஸ்பைவேரை உருவாக்கி சந்தைப்படுத்தி வருகிறது. பெகாசஸ் செல்போன்களில் ஊடுருவி, தாக்குதலுக்கு ஆளான போனின் உரிமையாளர் குறித்த அனைத்து தரவுகளையும் சேகரித்து மாஸ்டர் செர்வருக்கு அனுப்புகிறது. வெளிநாட்டு அரசுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இதனை விற்பனை செய்வதாக என்.எஸ்.ஒ. நிறுவனம் கூறியுள்ளது.

publive-image

இது ஒரு மிகவும் அடிப்படையான அமைப்பு. இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு சாதனத்திலும் இது ஊடுருவி வேவு பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘zero-click’ attack என்ற முறையில், இலக்குகள் ஒரு தவறான இணைய இணைப்பை க்ளிக் செய்யாமல் கூட ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பெகாசஸை விலைக்கு வாங்கியதா இந்திய அரசு? - அன்றும் இன்றும் பதில் சொல்லாமல் நழுவும் மத்திய அரசு

publive-image

வாட்ஸ்ஆப், ஐமெசேஜ் மற்றும் எஸ்.எம்.எஸ் போன்ற செயலிகளில் இருக்கும் பலவீனமாக சாத்தியக் கூறுகளை பயன்படுத்தி உள்ளே நுழையும் இந்த ஸ்பைவேர் எந்த ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தாத வகையில் மிகவும் அமைதியாக செயல்படும். மிகவும் குறைவாகவே பேட்டரி திறனை செலவு செய்யும். எனவே உரிமையாளர் தங்களின் போன் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதை உணருவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.

publive-image

குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளை உளவு பார்க்க 1400 மொபைல் போன்கள் மற்றும் டிவைஸ்களுக்கு, அமெரிக்கா மற்றும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் மல்வேரை அனுப்பியதாக என்.எஸ்.ஒ. மீது குற்றம் சாட்டி சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது வாட்ஸ்ஆப் நிறுவனம். நான்கு கண்டங்களில் உள்ள 20 நாடுகளில் இந்த பயனர்களின் செயல்பாடுகள் ஏப்ரல் 2019 முதல் மே 2019 வரை உளவு பார்க்கப்பட்டுள்ளது என்று வாட்ஸ்ஆப் தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pegasus Spyware
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment