Advertisment

ராகுல் காந்தி யாத்திரை; புதிதாக கொரோனா அதிகரிக்க காரணமாக இருக்க முடியுமா?

உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்; ராகுலின் யாத்திரையை இடைநிறுத்த அறிவுறுத்திய மத்திய அரசு; யாத்திரை புதிய கோவிட் 19 எழுச்சிக்கு வழிவகுக்க முடியுமா?

author-image
WebDesk
New Update
ராகுல் காந்தி யாத்திரை; புதிதாக கொரோனா அதிகரிக்க காரணமாக இருக்க முடியுமா?

Anonna Dutt

Advertisment

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாயன்று காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் பாரத் ஜோடோ யாத்ராவின் போது அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் அல்லது "தேசிய நலன் கருதி" அதை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கடிதத்தில், “அனைத்து கோவிட்-19 வழிகாட்டுதல்களும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதையும், முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் பயன்படுத்தப்படுவதையும், கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்பதையும் உறுதி செய்யவும். யாத்திரைக்கு முன்னும் பின்னும் மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: ஓமிக்ரான் பி.எஃப்.7 என்றால் என்ன? இந்தியாவில் பாதிப்பை உண்டாக்குமா?

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். ராகுலும் பாரத் ஜோடோ யாத்ராவும் தனித்து காட்டப்படுவதாகவும், அதே நேரத்தில் ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் பா.ஜ.க.,வின் யாத்திரைகள் நடைபெற்று வருவதாகவும் மற்றும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடர்வதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.

இந்தியாவில் தற்போதைய கோவிட்-19 நிலைமை என்ன?

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது, டிசம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தினமும் சராசரியாக 158 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

சீனா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பு எதிரொலியாக, செவ்வாயன்று மரபணு வரிசைமுறைக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும் அனுப்புமாறு மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மற்றும் புதன்கிழமை சுகாதார அமைச்சரின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கடந்த ஆறு வாரங்களில் உலகளவில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, டிசம்பர் 19 உடன் முடிவடைந்த வாரத்தில் தினசரி சராசரியாக 5.9 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பாதிப்புகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படவில்லை, அந்த நேரத்தில் சிங்கப்பூரில் தொற்று எழுச்சி அதிகரிக்க வழிவகுத்த மறுசீரமைப்பு மாறுபாடு XBB இன் நிகழ்வு 8% இலிருந்து 65.6% ஆக அதிகரித்தது.

தற்போது கோவிட்-19க்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன?

மார்ச் 23 அன்று, கோவிட்-19-ஐக் கட்டுப்படுத்துவதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மார்ச் 31க்குப் பிறகு "பொருத்தமாக" நிறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. ஏப்ரல் 1 முதல் முழு இயல்புநிலைக்கு திரும்புவதை இந்த உத்தரவு திறம்பட சமிக்ஞை செய்தது.

முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்த சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைகள் தொடர்கின்றன, ஆனால் அவை சட்டத்தால் செயல்படுத்தப்படாது. நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, ‘சோதனை-தடுப்பு-சிகிச்சை-தடுப்பூசி-கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல்’ என்ற ஐந்து உத்தியைப் பின்பற்றுமாறு அமைச்சகம் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆகஸ்டில் பாதிப்புகளில் சிறிய அதிகரிப்புக்குப் பிறகு, மத்திய சுகாதாரச் செயலர் மாநிலங்களுக்கு, மிகவும் துல்லியமான ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகள் மூலம் போதுமான சோதனைகளை செய்யவும்,  மற்றும் மரபணு வரிசைப்படுத்துதலுக்காக சர்வதேச பயணிகள், சென்டினல் தளங்கள் மற்றும் கிளஸ்டர்களிடமிருந்து மாதிரிகளை அனுப்பவும் அறிவுறுத்தினார்.

அக்டோபர் மாதம் தனது ஆய்வுக் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) அளவைப் பெற வேண்டும் என்றும், அதிகாரிகள் சர்வதேச நுழைவு பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜூன் மாதம், திருவிழாக்கள் மற்றும் மத யாத்திரைகளில் பங்கேற்பவர்கள் அறிகுறியற்றவர்களாகவும் தடுப்பூசிகள் போடப்பட்டவர்களாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும், இந்த நிகழ்வுகளில் போதுமான பரிசோதனை வசதிகளை வைத்திருக்கவும் அமைச்சகம் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது.

கோவிட் -19 இன் மற்றொரு அலை வருமா?

ஆகஸ்ட்-அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல்-மே 2021 போன்ற கொடிய அலைகள் இப்போது சாத்தியமில்லை என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர். BA.1 மற்றும் BA.2 துணை வகைகளால் இயக்கப்படும் ஜனவரி 2022 இன் ஓமிக்ரான் அலை, நாட்டில் அதிக அளவிலான தடுப்பூசிகளுடன், மக்கள் பெரும்பாலும் ஓமிக்ரான் வகைகளுக்கு எதிராக நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் எழுச்சியை உண்டாக்குவதாகக் கருதப்படும் BF.7 மாறுபாடு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது, ஆனால் அது பரவவில்லை. "சமீபத்திய மாறுபாடு மற்ற நாடுகளுக்கான கண்காணிப்பு பட்டியலில் இருந்த பிற வகைகளைப் போலவே இருக்கும், ஆனால் இந்தியாவில் பாதிப்புகள் சிறிய அளவில் அதிகரித்துள்ளன" என்று ஒரு அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Rahul Gandhi Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment