Advertisment

FedEx சிஇஓ ஆகும் இந்தியர்… யார் இந்த ராஜ் சுப்ரமணியம்?

ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், சிஇஓ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ் சுப்ரமணியம், அனைத்து FedEx இயக்க நிறுவனங்களுக்கும் மூலோபாய வழிகாட்டுதலை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
FedEx சிஇஓ ஆகும் இந்தியர்… யார் இந்த ராஜ் சுப்ரமணியம்?

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஃபிரடெரிக் ஸ்மித் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்கர் ராஜ் சுப்ரமணியம், ஃபெடெக்ஸ் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ஃபிரடெரிக் ஸ்மித் ஃபெடெக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிஇஓ பதவியில் இருந்து ஜூன் மாதம் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வருங்கால பயணத்தை பார்க்கையில், ராஜ் சுப்ரமணியம் திறமையான தலைவர். அவர் FedEx-ஐ மிகவும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

யார் இந்த ராஜ் சுப்ரமணியம்?

54 வயதான சுப்ரமணியம், 1991 இல் FedEx இல் பணிக்கு சேர்ந்தார். பின்னர், 2020 இல் FedEx-இன் இயக்குநர்கள் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இயக்குநர்கள் குழுவில் தனது இருக்கையை தக்க வைத்துக் கொள்வார் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியம் இந்த மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, அந்நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் நிறுவனத்தில் நிர்வாக துணைத் தலைவர், தலைமை சந்தைப்படுத்தல், தொடர்பு அதிகாரி போன்ற பல்வேறு தலைமை பதவிகளை வகித்துள்ளார்.

இது தவிர, உலகின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் போக்குவரத்து நிறுவனமான FedEx Express-இன் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

FedEx நிறுவனத்தின் சேர்ந்ததது முதலே, ஆசியா மற்றும் அமெரிக்கா முழுவதும் பல மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் பணிகளில் இருந்த சுப்பிரமணியம், கனடாவில் FedEx Express இன் தலைவராக பணியாற்றியுள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், 1987 ஆம் ஆண்டு ஐஐடி பாம்பேயில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தார். பின்னர், 1989 இல் சைராகுஸ் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் நிதித்துறையில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

தற்போது, FedEx கார்ப்பரேஷனின் தலைவராகவும், CEO-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ் சுப்பிரமணியத்துக்கு, அதன் கீழ் இயக்கும் FedEx Express, FedEx Ground, FedEx Freight, FedEx Services, FedEx Office, FedEx Logistics, and FedEx Dataworks என அனைத்து இயக்க நிறுவனங்களுக்கும் மூலோபாய வழிகாட்டுதலை வழங்குவதற்கான பொறுப்பும் உள்ளது.

நிறுவன கூற்றப்படி, சுப்ரமணியம் FedEx இல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். அவரது சர்வதேச தலைமை அனுபவம், ஆர்வமுள்ள வணிக நுண்ணறிவு மற்றும் உலகமயமாக்கலில் கவனம் செலுத்துவது FedEx இன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், FedEx Corporation, First Horizon Corporation, U.S Chamber of Commerce's China Center Advisory Board, FIRST, U.S.-India Strategic Partnership Forum மற்றும் U.S-China Business Council ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவிலும் சுப்பிரமணியம் பணியாற்றுகிறார். அவர் சர்வதேச வர்த்தக நிர்வாகத்தின் சப்ளை செயின் போட்டித்திறன் பற்றிய ஆலோசனைக் குழுவிலும் (ACSCC) உறுப்பினராக உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment