Advertisment

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் : அன்றும் இன்றும்!

1999ம் ஆண்டு 7 பேர் மட்டுமே குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு மீதம் உள்ள அனைவரையும் விடுதலை செய்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் : அன்றும் இன்றும்!

Rajiv Gandhi case convicts — then, now : 7 பேர் விடுதலை தொடர்பாக யார் முடிவு எடுப்பார்கள் என்று எழும்பிய முன்னேற்றங்கள் தொடர்பாக ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் பற்றி மீண்டும் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் எழுகின்றன.  ஜனவரி 22ம் தேதி அன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் , ஏ.ஜி. பேரறிவாளன விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கூறியது. மன்னிப்பு கோர பொருத்தமான நபராக இருப்பதால் அவரின் விடுதலை தொடராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கவர்னர் முடிவெடுக்கலாம் என்று 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. ஜனவரி 25ம் தேதி அன்று ஆளுநர் மாளிகை, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவெடுப்பார் என்று கூறியது. கடந்த வாரம், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசால் பெறப்பட்ட திட்டம் சட்டத்தின் படி செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது.

Advertisment

ஏழு பேர் வாழ்நாள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 1999ம் ஆண்டு அதில் நான்கு நபர்களுக்கு மரண தண்டனை விதித்தது. 2000ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உட்பட மூன்று பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக 2014ம் ஆண்டு குறைக்கப்பட்டது. தடா விசாரணை நீதிமன்றம் ஆரம்பத்தில் 26 நபர்களுக்கு மரண தண்டனை விதித்தது. 1999ம் ஆண்டு 7 பேர் மட்டுமே குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு மீதம் உள்ள அனைவரையும் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் இவர்களுக்கும் கொலைக்கு திட்டம் தீட்டிய குழுவினருக்கும் பெரிய தொடர்பு ஏதும் இல்லை என்பதை கவனித்தது. 7 குற்றவாளிகள் மீது வைக்கப்பட்ட குற்றங்கள் என்ன? அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

நளினி

சென்னையை சேர்ந்த செவிலியர் மற்றும் காவலருக்கு மகளாக பிறந்த நளினிக்கு தற்போது வயது 54. சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் கல்வி பயின்றார். குற்றம்சாட்டப்பட்ட ஏழு நபர்களில் இவர் ஒருவர் மட்டுமே குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்தார். பின்பு நளினி, கொலை திட்டம் தீட்டியவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.  கொலை நடைபெற்ற பிறகு நளினியும் முருகனும் சென்னையில் இருந்து சென்று பல்வேறு இடங்களில் மறைந்து வாழ்ந்தனர். ஒரு மாதம் கழித்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது நளினி கர்ப்பிணியாக இருந்தார். சிறையிலேயே குழந்தையை பெற்று வளர்த்தார் நளினி. ஐந்து வயதிற்கு பின்னர் அவரின் சக சிறைவாசி அவரின் பெண் குழந்தையை கோவைக்கு அழைத்து வந்து அவருக்கு தேவையான படிப்பினை வழங்கி வளர்த்து வந்தார். பிறகு முருகனின் தாயாருடன் இலங்கைக்கு சென்ற அவர் பின்னர் அங்கிருந்து இங்கிலாந்திற்கு சென்றார். நளினியும் முருகனும் அவர்களின் மகளை அதன் பின்னர் பார்க்கவில்லை என்று கூறுகிறார் நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். கடித போக்குவரத்து மட்டுமே உள்ளது. மேலும் சிறை விதிமுறைகள் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களுடன் வீடியோ கால் பேசுவதை தடை செய்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க விதிமுறைகள் அமலுக்கு வரும் வரை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நளினியும் முருகனும் 15 நிமிடங்கள் நேரில் சந்தித்து பேசிக் கொள்வதுண்டு. அவருடைய வழக்கறிஞர், நளினி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் என்று கூறியுள்ளார். 1999ம் ஆண்டு அறிவித்த தீர்ப்பில், கட்டளையை நிறைவேற்றும் அமைதியான பங்கேற்பாளராக இருந்தார். அவர் இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்று கூற ஆதாரங்கள் ஏதும் இல்லை. மிகவும் மோசமான சதித்திட்டத்திற்குள் சிக்கிக் கொண்டதால் நளின் போன்ற ஒரு பெண்ணால் துணிவாக பின் வாங்கி இருக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

உச்ச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. கே.டி. தாமஸ் தலைமையில் அமையபெற்ற உச்ச நீதிமன்ற அமர்வில் அவர் மட்டும் மாற்று கருத்தினை கொண்டிருந்தார். ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க நளினியின் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

சாந்தன்

இலங்கை நாட்டை சேர்ந்த சாந்தன் தீவிர இந்து மத பற்றாளர். மேலும் வேலூர் மத்திய சிறையில் உள்ள கோவிலில் பூஜைகளை நடத்தி வருகிறார். இலங்கையில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை அவர். மேலும் தன்னுடைய வழக்கை எடுத்து நடத்த ஒரு சட்டக்குழுவும் அவருக்கு இல்லை.  நீதிமன்ற ஆவணஙக்ளின் படி, சாந்தன் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பகுதியில் இருந்து சிவராசன் (படுகொலை திட்டத்தினை வழிநடத்தியவர்) மற்றும் சிலருடன் படகில் இந்தியாவிற்கு வந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவில், கொலையில் அவருக்கு நேரடி பங்கு இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. நளினி, பேரறிவாளன், முருகன் ஆகியோரோடு இவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

முருகன்

”இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த இலங்கை பிரஜைகளில் முருகனும் ஒருவர். வெளிநாட்டுக்கு செல்லும் நோக்குடன் சென்னையில் சில நாட்கள் அவர் தங்கியிருந்தார். நளினியின் அண்ணனின் நண்பர் என்ற ரீதியில் அவர் நளினி வீட்டில் தங்கி இருந்தார். நளினி தன் தாயாருடன் சண்டை போட்டுக் கொண்டு வெளியேற அவரை தேடி சமாதானம் செய்து அழைத்து வந்தவர் முருகன். அவர்களின் நட்பு பிறகு ஆழமான உருவாக மாறியது. சிவராசனை நளினி முருகன் மூலமாக சந்தித்தார்” என்று நளினி கூறியிருக்கிறார்.  சாந்தனைப் போன்றே முருகனும் தீவிர மத பற்றாளர். இப்போது தாடி வைத்துள்ளார். 2013ம் ஆண்டு செய்தியாளர் ஒருவர் அவரை பேட்டி எடுத்த போது, விடுதலைக்கு பிறகு என்ன செய்வீர்கள் என்று முருகனிடம் கேட்டார், அதர்கு அவர், நான் விடுதலை ஆனால், ஒரு மலை உச்சியில் இடம் வாங்கி 100 பூச்செடிகளையும், மூலிகைகளையும் வளர்ப்பேன் என்று கூறினார்.

ராபர்ட் பயாஸ்

ராபர்ட் பயாஸ் ஒரு இலங்கை பிரஜை. அவருக்கு வயது 55. தன் மனைவி மற்றும் சகோதரிகளுடன் 1990ம் ஆண்டு இந்தியா வந்தார். அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.  சிவராசனுக்கும் பயாஸிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சதியில் அவரின் ஈடுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கவனித்த போது, இலங்கையில் இந்தியாவின் அமைதி காக்கும் படையால் Indian Peace Keeping Force (IPKF) ஏற்பட்ட அட்டூழியங்களுக்கு ஆளானவர். அதில் தன் குழந்தை ஒன்றை இழந்து விட்டதாகவும் கூறினார்.

ஜெயக்குமார்

பயாஸின் மைத்துனர். பயாஸுடன் அவரும் இந்தியாவிற்கு வந்தார். சிவராசுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவருக்கும் இந்த கொலைக்கும் தீவிர தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. IPKF நடவடிக்கையின் போது ஏற்பட்ட கொடுமைகளை ஜெயக்குமாரும் சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன்

இந்தியாவை சேர்ந்த இவர் 1980களில் தமிழ் ஈழ இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாவதற்கு முன்பில் இருந்தே அதன் தலைவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளின் இடங்களுக்கு வருகை புரிந்திருக்கின்றனர். ரவிச்சந்திரனுக்கு எதிரான சதி குற்றச்சாட்டுகள் 1999 இல் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டன, இது தடா விதிகளை வழக்கில் இருந்து இடைநிறுத்தியது. ரவிச்சந்திரனின் தாயார் தாக்கல் செய்த மனுவின் பெயரில் 15 நாட்கள் அவருக்கு பரோல் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

பேரறிவாளன்

அறிவு என்ற பேரறிவாளன் 1991ம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு 19 வயது இருக்கும் போது கைது செய்யப்பட்டார். சிவராசனுக்கு இரண்டு செல்கள் வாங்கி தந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையின் போது மே 7, 1991 அன்று சிவராசன் விடுதலை புலி தலைவர் பொட்டு அம்மனுக்கு அனுப்பிய ரேடியோ செய்தியில் நம்முடைய நோக்கம் நம் மூன்று பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார். நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலருக்கும் எதிரான சதி குற்றச்சாட்டுகள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பேரறிவாளனுக்கு எதிரான சதி குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அவரது தடா ஒப்புதல் வாக்குமூலம் காரணமாக அமர்வு அதனை "நம்பக்கூடியது" என்று அறிந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடா விதிகளின் கீழ் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்தாலும், பேரறிவாளன் தடாவின் கீழ் கொடுத்த வாக்குமூலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டார். அவர் 2014 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை 23 ஆண்டுகள் மரண தண்டனையில் இருந்தார். தீவிர வாசகராக தன்னை மாற்றிக் கொண்ட அவர் சிறையிலேயே கல்வியும் கற்றார். மன அழுத்தத்திற்கு அவர் எப்போதும் ஆளாகவில்லை.  அவர் எப்போதும் குற்றமற்றவர் என்று கூறினார். நவம்பர் 2013, ஓய்வு பெற்ற சி.பி.ஐ. எஸ்.பி. வி. தியாகராஜன், பேரறிவாளனின் அறிக்கையை ஒப்புதல் வாக்குமூலமாக மாற்றினேன் என்று கூறினார். தியாகராஜன் இந்த அறிக்கையை வாக்குமூலமாக உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

2013ம் ஆண்டு பேரறிவாளனுடன் சிறையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில், மரண தண்டனை விதிக்கப்படது தொடர்பாக நிரூபரின் கேள்விக்கு பதில் அளித்த அவர். எங்களுக்கு தண்டனை அளித்த அமைப்பின் குற்றவாளிகள் ஏன் என்றால் எங்களின் பெயர்கள் மிகப்பெரிய குற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment