Advertisment

கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தல்: ஐகோர்ட் உத்தரவு கூறுவது என்ன?

1993 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் “நீதித்துறை ரீதியாக மதிப்பாய்வு செய்யக்கூடியது” என்று தீர்ப்பளித்தது.

author-image
WebDesk
New Update
Rajya Sabha poll before Kerala Assembly results: EC powers, HC ruling

 Ritika Chopra 

Advertisment

Rajya Sabha poll before Kerala Assembly results: EC powers, HC ruling : கேரளாவில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்வை நடப்பு சட்டமன்றம் முடிவதற்குள் நடத்த வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை முதலில் நிறுத்திய நிலையில் தற்போது ஏப்ரல் 30 அன்று தேர்தலை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி அன்று அறிவிக்கப்படும்.

இந்த விவகாரம் எப்படி உச்ச நீதிமன்றத்தை எட்டியது?

மார்ச் 17ம் தேதி அன்று, ஏப்ரல் 21ம் தேதியோடு நிறைவடையும் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அட்டவணையை அறிவித்தது. வாளையார் ரவி (காங்கிரஸ்), கே.கே. ராகேஷ் (சி.பி.எம்) மற்றும் அப்துல் வஹாப் (யூனியன் முஸ்லீம் லீக்) ஆகியோரின் பதவி காலம் ஏப்ரல் 21ம் தேதி உடன் நிறைவடைகிறது. தேர்தல் மார்ச் 24ம் தேதி அன்று நடத்தப்பட்டு முடிவுகள் ஏப்ரல் 12ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

மார்ச் 24ம் தேதி அன்று தேர்தல் குறித்து அறிவிக்காமல் தேர்தலை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் குறித்து பேசப்பட்ட போது, இது நிலுவையில் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு புதிய அறிவிப்புகள் வரும் வரையில் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பின் உள்ளடக்கம் குறித்து எதுவும் விவரிக்கவில்லை.

கேரள சட்டமன்ற செயலாளர் எஸ்.ஷர்மா, சி.பி.எம். கட்சி எம்.எல்.ஏ., தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

மேலும் படிக்க : பாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்

அமைச்சரவை குறிப்பில் இருந்தது என்ன?

மார்ச் 23ம் தேதி அன்று நீதி அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், புதிய சட்டமன்றம் மே 2ம் தேதி அமையும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியது. அரசு தரப்பில் தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி அன்றே நிறைவுற்றது. அறிவிப்புகள் மே 2ம் தேதி அன்று அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பு ராஜ்யசபை தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுவது மக்களின் விருப்பதை எந்த வகையிலும் பிரதிபலிக்காது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதா?

அமைச்சகம் ஒரு பிரச்சனையை கருத்தில் கொண்டு கவனத்தை ஏற்படுத்தியதால் தற்காலிகமாக தேர்தலை தள்ளி வைத்தது என்றும், சட்ட ரீதியான ஆலோசனை தேவை என்றும் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் யாரிடம் சட்ட ஆலோசனை பெற்றது என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால் நிபுணரின் கோரிக்கையை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது என்று கூறியது.

மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் சட்டமன்றம் நிறைவடைவதற்கு முன்பே நிறைவடைந்ததால் புதிய சட்டமன்றம் தான் புதிய எம்.பிக்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நிபுணர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மூன்று எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைவதற்குள் புதிய தேர்தல் அட்டவணையை வெளியிடுவோம் என்று தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. எந்த சட்டமன்றம் இவர்களை தேர்வு செய்யப் போகிறது எனபது குறித்து அக்கறை இல்லை என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், அவர்களின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்பே விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது அரசியல்சாசன கடமை என்றும் வர்ணித்தது. சட்டமன்றம் நிறைவுறுவது தேர்தலை நிறுத்த ஒரு முக்கிய காரணி என்றாலும் அதுமட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் இதனால் மாநிலங்களவை செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனுதாரரின் வாதம் என்ன?

14வது சட்டமன்றம் இன்னும் நடைமுறையில் உள்ளது. தேர்தலை நிறுத்த நியாமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன்வைக்கவில்லை என்று மனுதாரர் கூறினார். மேலும் மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் கடமைப்பட்டுள்ளது", இல்லையெனில் "மாநில கவுன்சிலில் மாநிலத்திற்கான மூன்று பிரதிநிதிகளின் பற்றாக்குறை இருக்கும்" என்று கூறினார்.

எந்த சட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது?

அரசியல் அமைப்பின் பிரிவு 80(4) கீழ் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி, நோக்கம் இடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதல்ல. ஆனால் உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே தேர்தல் செயல்முறையை முடித்து மாநிலங்களவையில் மாநில பிரதிநிதிகளின் முழு பலத்தையும் கொண்டிருக்க வேண்டும். எந்தவொரு சட்டம் ஒழுங்கு நிலைமை அல்லது எந்தவொரு நடைமுறை சாத்தியமற்ற தன்மையும் இருக்கும்போது மட்டுமே வேறுபட்ட பார்வைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அட்டவணையை திருத்துவதற்கு அல்லது நீட்டிப்பதற்கான அதிகாரம் பொதுவாக கிடையாது என்று நீதிமன்றம் கூறியது.

தங்களுக்கு தரப்பட்டிருக்கும் அரசியல் சாசன கடமையை நன்றாக உணர்ந்திருக்கும் ஆணையம் மாநிலங்களவையில் கேரளாவின் பிரதிநிதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும் கூறியது. காலியிடங்கள் விரைவாக நிரப்பப்படுவதைக் காண்பது தனது கடமை என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்த பின்னரும், அதற்கான எந்த நடவடிக்கையும் ஆணையம் இன்னும் எடுக்கவில்லை என்றும் மேற்கோள்காட்டியது.

தேர்தல் அட்டவணைகளை உருவாக்கூம் பணி தேர்தல் ஆணையத்திற்கு இருக்கும் போது. நீதிமன்றம் எவ்வாறு இந்த விவகாரத்திற்குள் வருகிறது?

அரசியலமைப்பின் 324 வது பிரிவின் கீழ், தேர்தல் அட்டவணையை தீர்மானிப்பது தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக களமாகும், மேலும் இது நாடாளுமன்றத்தால் வடிவமைக்கப்பட்ட எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டது அல்ல. ஒரு அட்டவணை அறிவிக்கப்பட்டதும், அதில் மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் தடையற்றவை அல்ல. 1993 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் “நீதித்துறை ரீதியாக மதிப்பாய்வு செய்யக்கூடியது” என்று தீர்ப்பளித்தது. ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து மறுஆய்வு செய்ய முடியும்.

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment