Advertisment

'புது மசோதா': சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

இந்தியாவில் செயல்பட்டு வரும் மூன்று சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை, மத்திய பல்கலைக்கழகங்களாக இந்த மசோதா மாற்றுகிறது.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'புது மசோதா': சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா, 2019 ஐ மாநிலங்களவையில் நேற்று (மார்ச் 2) அறிமுகப்படுத்தினார்.

Advertisment

மக்களவையில் இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் மூன்று நிகர்நிலை சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை, மத்திய பல்கலைக்கழகங்களாக இந்த மசோதா மாற்றுகிறது.

மூன்று சமஸ்கிருத பல்கலைக்கழகங்களின் பெயர்கள் பின்வருமாறு:

  •   ராஷ்டிரிய சமஸ்கிருத சனஸ்தான், புது தில்லி,
  •  ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத், புது தில்லி,
  •  ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத், திருப்பதி

 

முன்மொழியப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் என்ன செய்யும் ?

(i) சமஸ்கிருதம் மொழி மேம்படுத்துவதற்கான அறிவைப் பரப்புதல் மற்றும் மேம்படுத்துதல்,

(ii) மனிதநேயம், சமூக அறிவியல், அறிவியல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த சமஸ்கிருத படிப்புகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தல்,

(iii) சமஸ்கிருதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்களை பாதுகாப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் மனித வளத்தை மேம்படுத்துதல்.

How the Centre’s planned Sanskrit universities will function

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் :

(i) படிப்புக்கான பாடத்திட்டங்களை பரிந்துரைத்தல், பயிற்சித் திட்டங்களை நடத்துதல்,

(ii) பட்டங்கள், டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல்,

(iii) தொலைதூர கல்வி முறைக்கான வசதிகளை வழங்குதல்,

(iv) ஒரு கல்லூரி அல்லது ஒரு உயர்க்கல்வி நிறுவனத்திற்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்குதல்,

(v) சமஸ்கிருதம் கல்விக்கான வழிமுறைகளை அளித்தல்.

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : 'ராப் இசை' பாடலை வெளியிட்ட சிபிஎஸ்இ

அதிகார கட்டமைப்பு:

பல்கலைகழக நீதிமன்றம்: இது பல்கலைக்கழகத்தின் கொள்கைகளை மறுஆய்வு செய்து அதன் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.

நிர்வாக சபை: 15 பேர்க கொண்ட இந்த சபை முதன்மை நிர்வாக அமைப்பாக செயல்படும். மத்திய அரசால் நியமிக்கப்பப்ட்ட துணைவேந்தர், இந்த சபையின் தலைவராக இருப்பார்; மனித வள மேம்பாட்டு அமைச்சின் இணை செயலாளர், சமஸ்கிருத அல்லது அதனுடன் தொடர்புடைய பாடங்களில் சிறந்த விளங்கும் இரண்டு கல்வியாளர்களும் இதன் உறுப்பினர்களாக இருப்பர். பல்கலைக்கழகத்தின் வருவாய் மற்றும் சொத்துக்களை நிர்வகிப்பது இவர்களின் முதல் வேலை. கல்விப் பணிகளை உருவாக்குவதும், நியமனிப்பதும் இவர்கள் நெறிமுறை படுத்துவார்கள்.

கல்வி மற்றும் செயல்பாட்டு கவுன்சில்: இது கல்விக் கொள்கைகளை மேற்பார்வையிடும்.

ஆய்வு வாரியம்: இது ஆராய்ச்சிக்கான பாடங்களை அங்கீகரிக்கும்.மேலும், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.

பார்வையாளர்: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களையும் போலவே, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக இந்திய ஜனாதிபதி செயல்படுவார் .

பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்கலாம். ஆய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நிர்வாக சபை நடவடிக்கை எடுக்கலாம்.

University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment