Advertisment

மெதுவாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்

டெல்லி மற்றும் மும்பையில் குறைந்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது. பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை இன்னும் உயர்ந்து வருகிறது

author-image
WebDesk
New Update
மெதுவாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்

Amitabh Sinha 

Advertisment

Explained: Rise in Covid-19 cases, slower growth: புதன்கிழமை நாடு முழுவதும் 2.3 லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது வேகமாக பரவலாகும். இந்த வேகமான பரவல் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் சமீபத்திய பாதிப்பு மந்தநிலையைப் பற்றிய கணிப்பில் இன்னும் தெளிவற்று இருப்பதைக் குறிக்கிறது.

மற்றொரு கவலை என்னவென்றால், நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு உள்ளது. கேரளாவிற்கு வெளியே இறப்பு எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை புதன்கிழமை 170 ஐத் தாண்டியுள்ளது. கேரளா ஒவ்வொரு நாளும் அதன் எண்ணிக்கையில் முன்னர் கணக்கிடப்படாத இறப்புகளை அதிக எண்ணிக்கையில் சேர்த்து வருகிறது, இது நாட்டில் தினசரி இறப்பு எண்ணிக்கைக்கு பங்களிக்கிறது. ஆனால் தற்போது மற்ற மாநிலங்களில் இருந்தும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் புதன்கிழமை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

மந்தநிலை

கடந்த ஐந்து நாட்களில் மும்பையில் புதிய கொரோனா தொற்றுகளின் கூர்மையான சரிவு, நகரம் ஏற்கனவே மூன்றாவது அலையின் உச்சத்தை அடைந்துவிட்டது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவின் ஒரு பகுதி வார இறுதிகளில் பரிசோதனையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இருந்தது, ஆனால் கீழ்நோக்கிய போக்கு செவ்வாய் வரை தொடர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 21,000 புதிய பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், மும்பை அதன் அனைத்து நேர பாதிப்பு எண்ணிக்கைகளிலும் உச்சநிலையை அடைந்துள்ளது. மும்பையில் செவ்வாயன்று 11,647 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் புதன்கிழமை ஒரு கூர்மையான உயர்வு காணப்பட்டது, 16,420 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

மூன்றாவது அலையின் எழுச்சியை காணும் முதல் நகரமான டெல்லி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பாதிப்புகளின் கூர்மையான அதிகரிப்புக்குப் பிறகு மந்தநிலையில் நுழைந்ததாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், புதன்கிழமை, நகரத்தில் 27,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டன, இது இரண்டாவது அலையின் போது அடையப்பட்ட 28,395 என்ற எல்லா நேரத்திலுமான பாதிப்பு எண்ணிக்கைக்கு மிக அருகில் உள்ளது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளில் உள்ள மகாராஷ்டிராவும் இதேபோன்ற சூழ்நிலையில் உள்ளது. ஜனவரி 7 அன்று மாநிலத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் அதன் பிறகு அது கணிசமாக அதிகரிக்கவில்லை, முக்கியமாக மும்பையில் காணப்பட்ட சரிவுக்கு நன்றி. இருப்பினும், புதன்கிழமை, மகாராஷ்டிராவில் 46,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது தற்போதைய அலையில் மிக அதிகம்.

கடந்த ஐந்து நாட்களில், தேசிய அளவிலும் ஒரு மந்தநிலையை கவனிக்க முடியும், தினசரி பாதிப்புகளின் அதிகரிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வேகமாக இல்லை. புதிய பாதிப்புகளின் ஏழு நாள் வளர்ச்சி சராசரி மிகவும் மெதுவான விகிதத்தில் அதிகரித்து வருகிறது (விளக்கப்படத்தைப் பார்க்கவும்). ஆனால், தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 10,000 க்கும் குறைவாக இருந்து ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரிக்க எட்டு நாட்கள் மட்டுமே ஆனது. கடந்த ஐந்து நாட்களில், 1.40 லட்சத்தில் இருந்து 1.95 லட்சமாக மாறியுள்ளது.

publive-image

ஆனால் இது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். புதன்கிழமை ஏற்கனவே பாதிப்புகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. ஒப்பீட்டளவில் பத்து சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இன்னும் அவற்றின் எண்ணிக்கையை அறிவிக்காத நிலையில், பாதிப்புகளின் எண்ணிக்கை ஏற்கனவே 2.3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சில மாநிலங்களில் ஆரம்பநிலையில் அதிகரிப்பு

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மூன்றாவது அலைக்கு ஆரம்பத்தில் சென்றாலும், தற்போது பல மாநிலங்கள் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இதில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற பெரிய மாநிலங்களும் அடங்கும், அவற்றின் மக்கள்தொகை காரணமாக, மிக அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்று பாதிப்புகள் வெளிவரக்கூடிய சாத்தியம் உள்ளது. இரண்டாவது அலையின் போது, ​​உ.பி.யில் 37,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் என்ற உச்சத்தை எட்டியது, அதே சமயம் பீகாரில் 16,000 பாதிப்புகள் இருந்தன. புதன்கிழமை, உ.பி.யில் 13,592 பாதிப்புகளும், பீகாரில் 6,413 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

உண்மையில், பெரிய மாநிலங்களில், மேற்கு வங்கம் மட்டுமே இதுவரை அதன் இரண்டாவது அலை உச்சத்தைத் தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள் இப்போது உச்சத்தை விட கீழே உள்ளன.

ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்புகள்

இந்தியாவின் பாதிப்பு விகிதம் கடந்த இரண்டு வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது, ஆனால் கடந்த ஆண்டு இரண்டாவது அலையின் போது காணப்பட்ட அளவுகளுக்கு அருகில் இல்லை. சோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களில் பாதிப்பு உறுதி செய்யும் நபர்களின் விகிதமான தொற்று பாதிப்பு விகிதம், மக்கள்தொகையில் நோய் பரவலை தெரிந்துக் கொள்வதற்கான ஒரு நல்ல குறிகாட்டியாகும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியாவின் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 9.18% ஆக உயர்ந்துள்ளது, இது ஆண்டின் தொடக்கத்தில் 1% ஆக இருந்தது, இது இந்த நேரத்தில் தொற்றுநோய் விரைவாக பரவுவதைக் குறிக்கிறது.

கடந்த ஆண்டு இரண்டாவது அலையின் உச்சத்தின் போது, ​​வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 22% ஐத் தாண்டியது. ஆனால் அதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீண்ட காலத்திற்கு தொற்று பாதிப்பு உறுதி செய்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் தொகையால், மிகப் படிப்படியான முறையில் உச்சத்தை எட்டியது.

இந்த நேரத்தில், உயர்வு திடீரென, செங்குத்தானது. மேலும், மூன்றாவது அலை தற்போது அதன் உச்சத்தை நெருங்கவில்லை, இருப்பினும், இரண்டாவது அலையின் போது எட்டப்பட்ட 4.14 லட்சத்தை எளிதில் கடக்கும் என்று பல மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்புகள்

எவ்வாறாயினும், இப்போது மிகவும் குறிப்பிடத்தக்க குறிகாட்டியாக இறப்பு எண்ணிக்கை உள்ளது. மூன்றாவது அலையை இயக்கும் ஓமிக்ரான் மாறுபாடு, பெரும்பாலும் லேசான நோய்களை விளைவிப்பதாக அறியப்பட்டதால், அது பல மரணங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் மூன்றாவது அலை இரண்டாவது வாரத்தில் நுழைந்ததால், இறப்பு எண்ணிக்கை மிகவும் தெளிவாக மேல்நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.

கேரளா தவிர்த்த இறப்புகள் ஜனவரி 10 அன்று முதல் முறையாக மூன்று இலக்க எண்ணிக்கையைத் தாண்டியது, அதன் பிறகு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் முறையே 111, 146 மற்றும் 177 இறப்புகள் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை, டெல்லியில் 40 இறப்புகள் பதிவாகியுள்ளன, கேரளாவுக்கு வெளியே அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் முறையே 37 மற்றும் 23 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவைத் தவிர, ஆறு மாநிலங்களில் இப்போது இரட்டை இலக்க இறப்புகள் பதிவாகியுள்ளன. டிசம்பர் கடைசி வாரம் வரை, சுமார் 20 மாநிலங்களில் பூஜ்ஜிய இறப்புகள் பதிவாகியிருந்தன. அது இப்போது பத்துக்கும் குறைவான மாநிலங்களாகக் குறைந்துள்ளது.

பெரும்பாலான இறப்புகள் இன்னும் தற்செயலானவை என்றும், கொரோனா-பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட பிறகு மக்கள் பிற காரணங்களால் இறக்கின்றனர் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகள் இன்னும் மிகக் குறைவு, மேலும் தீவிரமான நோய்வாய்ப்பட்ட நிலைமைகள் உள்ளவர்களிடையே மட்டுமே இறப்பு உள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Explained Covid 19 Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment