Advertisment

கிராமப்புற வீடுகளுக்கான சொத்து அட்டை: SVAMITVA என்றால் என்ன?

2023-24 நிதியாண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து 6.62 லட்சம் கிராமங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்முறைப்படுத்துவதே முதன்மை நோக்கம்.

author-image
WebDesk
New Update
Rural household svamitva card modi tamil news

Rural household svamitva card modi tamil news

SVAMITVA update Tamil News: கடந்த அக்டோபர் 11-ம் தேதி, SVAMITVA திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை விநியோகிப்பதை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் இதுபோன்ற சொத்து அட்டைகளை வழங்கவேண்டும் என்பதில் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisment

SVAMITVA அட்டை என்றால் என்ன?

Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas என்பதுதான் SVAMITA-வின் விரிவாக்கம். அதாவது, கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் விவரணையாக்கம். இது, கிராமப்புறங்களில் வீடுகள் வைத்திருக்கும் கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு ‘உரிமைகளின் பதிவை’ வழங்குவதையும், சொத்து உரிமையாளர்களுக்குச் சொத்து அட்டைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட மத்திய திட்டம். இது, ட்ரோன்களைப் பயன்படுத்தி அனைத்து கிராமப்புற சொத்துக்களையும் ஆய்வு செய்து ஒவ்வொரு கிராமத்திற்கும் GIS அடிப்படையிலான வரைபடங்களைத் தயாரிக்கத் திட்டம் தீட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டது. மேலும், அக்டோபர் 11-ம் தேதி சொத்து அட்டைகளின் விநியோகம் தொடங்கப்பட்டிருக்கிறது.

நடப்பு நிதியாண்டில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் சுமார் 1 லட்சம் கிராமங்களில் இந்த திட்டம் ஓர் பைலட் திட்டமாகச் செயல்படுத்தவிருக்கிறது. 2023-24 நிதியாண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து 6.62 லட்சம் கிராமங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்முறைப்படுத்துவதே முதன்மை நோக்கம்.

SVAMITVA சொத்து அட்டை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் உறுதி செய்யப்பட்ட SVAMITVA திட்டம், சர்வே ஆஃப் இந்தியா (SoI) மற்றும் அந்தந்த மாநில அரசாங்கங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட பல கட்ட செயல்முறைகளைக் கொண்டுள்ளது. அனைத்து அளவீடுகளிலும் தேசிய இடவியல் தரவுத்தளத்தைத் தயாரிப்பதற்கும், வான்வழி photographydrones, செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான வாகனங்கள் (Unmanned Air Vehicles (UAV)) அல்லது ட்ரோன் இயங்குதளங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகளில் நிலப்பரப்பு வரைபடத்திற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் சர்வே ஆஃப் இந்தியா பொறுப்பு எடுத்துக்கொள்ளும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) முடிந்ததும், Continuously Operating Reference System (CORS) நிறுவப்படும். இது, விர்ச்சுவல் அடிப்படை நிலையம் வாயிலாக நீண்ட தூர உயர் துல்லிய நெட்வொர்க் RTK (long-range high-accuracy Network RTK ) திருத்தங்களை அணுக அனுமதிக்கும் நெட்ஒர்க். "நில கட்டுப்பாட்டுப் புள்ளிகளை நிறுவுவதில் CORS நெட்வொர்க் ஆதரிக்கிறது. மேலும், துல்லியமான புவி-குறிப்பு, நிலத்தின் உண்மைத்தன்மை மற்றும் நிலங்களின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான முக்கியமான செயல்" என்று இந்த கட்டமைப்பு கூறுகிறது.

அடுத்ததாக, பைலட் கட்டத்தில் கணக்கெடுக்கப்பட வேண்டிய கிராமங்களை அடையாளம் காண்பது மற்றும் அதனை வரைபடமாக்கும் செயல்முறை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடங்கும். கிராமத்தின் அபாடி பகுதி (குடியிருப்பு பகுதி) எல்லை நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமப்புற சொத்துக்களும் சுண்ணாம்புக் கல் மூலம் குறிக்கப்படும். பின்னர், கிராமப்புற அபாடி பகுதிகளின் பெரிய அளவிலான வரைபடத்திற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். இந்த படங்களின் அடிப்படையில், 1: 500 அளவில் GIS தரவுத்தளம், மற்றும் கிராம வரைபடங்களான கிராம மஞ்சித்ரா வரையப்படுகின்றன. வரைபடங்களை உருவாக்கிய பிறகு, ட்ரோன் கணக்கெடுப்பு குழுக்களின் தரை சரிபார்ப்பு செயல்முறை பின்பற்றப்படும். இந்த கட்டத்தில், விசாரணை / ஆட்சேபனை செயல்முறை - மோதல் / தகராறு உள்ளிட்டவை தீர்க்கப்படும். இதற்குப் பிறகு, இறுதி சொத்து அட்டைகள் / தலைப்புச் செயல்கள் அல்லது “சம்பட்டி பட்ராக்” உருவாக்கப்படுகின்றன. இந்த அட்டைகள் டிஜிட்டல் தளங்களில் அல்லது கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு நகல்களாக வழங்கப்படும்.

SVAMITVA சொத்து தரவு மற்றும் வரைபடங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

இந்த கட்டமைப்பில், “6.62 லட்சம் கிராமங்கள் உள்ளடக்கிய GIS தரவுத்தளம் தயாரிக்கப்பட்டதும், எதிர்கால கணக்கெடுப்புகளை நடத்துவதற்கும், GIS தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கும் மாநில அரசுகள் பொறுப்பேற்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறு கணக்கெடுப்பின் புதுப்பிப்பு அதிர்வெண்ணையும் அவர்கள் தீர்மானிப்பார்கள்.

SVAMITVA தரவை யார் வைத்திருப்பார்கள்?

இந்த கட்டமைப்பின் படி, orthorectified செய்யப்பட்ட அடிப்படை வரைபடங்களை இந்திய சர்வே, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் மாநில அரசு ஆகியவை இணைந்து மேற்பார்வையிடும். GIS தரவுகளும் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து கண்காணிக்கும். இருப்பினும், சொத்து விவரங்கள் தொடர்பான தரவு மாநில வருவாய்த் துறைக்குச் சொந்தமானது. ஏனென்றால், பதிவு செய்யும் உரிமையை (Right of Records (RoRs)) மாற்றுவதற்கும் வரைபடங்களைப் புதுப்பிப்பதற்கும் அதிகாரம் இவர்களுக்கே உள்ளது. எனவே, மாநில வருவாய்த் துறை இந்த தரவின் உரிமையாளராக இருக்கும். மற்றவர்களுக்கு இவற்றைப் பார்க்க உரிமை உண்டு. பிற புதுப்பிக்கப்பட்ட GIS  தரவு அடுக்குகள் “தலதி / பட்வாரி” நிலை அதிகாரியால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை முந்தைய 12 மாதங்களில் செய்யப்பட்ட புதுப்பிப்புகளை இணைத்துப் பகிரப்படும்.

SVAMITVA சொத்து அட்டை வழங்குவதன் நன்மை என்ன?

இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்குப் பல வழிகளில் பயனளிக்கும் என்று SVAMITVA-வை இயக்கும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் குறிப்பிடுகிறது. முதலாவதாக, கிராமப்புற குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை, கடன்கள் மற்றும் பிற நிதி சலுகைகளுக்கு நிதிச் சொத்தாகப் பயன்படுத்த உதவும். இரண்டாவதாக, சொத்து வரியை நிர்ணயிக்க இது பெரிதும் உதவும். மேலும், கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரடியாக அத்தகைய வரிகளை வசூலிக்க அதிகாரம் உள்ள மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்கும். இந்த அட்டைகள், சந்தையில் நிலப் பரப்பின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், கிராமத்திற்கு நிதிக் கடன் அதிகரிக்கவும் உதவும். அதுமட்டுமின்றி, கிராமப்புற திட்டமிடலுக்கான துல்லியமான நிலப் பதிவுகளை உருவாக்குவதற்கும் இந்த திட்டம் வழி வகுக்கும்.

GIS நுட்பத்தைப் பயன்படுத்தி சொத்து வரைபடங்கள் தயாரிக்கப்படும். மேலும் சிறந்த தரமான கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்திற்கும் (ஜிபிடிபி) பயன்படுத்தப்படலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment