Advertisment

முன்னாள் ஆளுனரின் ஊழல் குற்றச்சாட்டு; ஐம்மு காஷ்மீரில் சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலை என்ன?

சத்ய பால் மாலிக், கடந்த ஆண்டு ஜே & கே கவர்னராக இருந்தபோது, இரண்டு கோப்புகளை அழிக்க தனக்கு ரூ. 300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக குற்றம் சாட்டினார், அவை "அம்பானி" மற்றும் "ஆர்எஸ்எஸ் அதிகாரி" தொடர்பானது. அவரது குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு என்ன நடந்தது? விசாரணை நிலை என்ன?

author-image
WebDesk
New Update
முன்னாள் ஆளுனரின் ஊழல் குற்றச்சாட்டு; ஐம்மு காஷ்மீரில் சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலை என்ன?

Deeptiman Tiwary

Advertisment

Ex-Governor Satya Pal Malik’s bribery allegations: what CBI is probing in J&K: ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் தொடர்பான கோப்பு உள்ளிட்ட இரண்டு கோப்புகளை அழிப்பதற்காக தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக ஜம்மு & காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக் கூறிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, சிபிஐ கடந்த வாரம் இரண்டு வழக்குகளை பதிவு செய்து 14 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் (ஆர்ஜிஐசி) மற்றும் செனாப் வேலி பவர் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (சிவிபிபிபிஎல்) அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சத்ய பால் மாலிக் கூறியது என்ன?

தற்போது மேகாலயாவின் ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக், கடந்த ஆண்டு ஜே & கே கவர்னராக இருந்தபோது, “அம்பானி” மற்றும் “ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்” ஒருவர் தொடர்பான இரண்டு கோப்புகளை பெற்றதாக கூறினார். மேலும், இது தொடர்பாக செயலாளர் ஒருவர், "இவை ஒரு மோசமான ஒப்பந்தங்கள், ஆனால் தலா 150 கோடி பெறலாம் என்று என்னிடம் கூறினார். உடனே, ஊழலில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்று என்னிடம் கூறிய பிரதமர் நரேந்திர மோடியிடம் இது குறித்து நான் எச்சரித்தேன்" என்று ராஜஸ்தானில் ஜுன்ஜுனு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சத்ய பால் மாலிக் கூறினார்.

அவை என்னென்ன கோப்புகள் என்று சத்ய பால் மாலிக் குறிப்பிடவில்லை என்றாலும், அவற்றில் ஒன்று அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் தொடர்பானது. சத்ய பால் மாலிக் அக்டோபர் 2018 இல் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மற்றொன்று கிரு நீர் மின் திட்டம் தொடர்பான குடிமராமத்து பணிகளைப் பற்றியது.

மாலிக்கின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு என்ன நடந்தது?

கடந்த மாதம், ஜே & கே லெப்டினன்ட்-கவர்னர் மனோஜ் சின்ஹா, விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இரண்டு வழக்குகளும் மார்ச் 23 அன்று சிபிஐக்கு பரிந்துரைக்கப்பட்டன. “ஜே&கே அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது, மற்றும் கிரு நீர்மின் திட்டத்தின் குடிமராமரத்து பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது ஆகிய இரண்டு ஒப்பந்தங்களிலும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரங்களில் நிதித் துறை மற்றும் ஊழல் தடுப்புப் பணியகத்திடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டன... ஜே & கே அரசாங்கத்தில் உள்ள தகுதி வாய்ந்த அதிகாரி, இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார், ”என்று ஜே & கே நிர்வாகம் சிபிஐக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் மீதான வழக்கு என்ன?

இரண்டு எஃப்ஐஆர்களில் ஒன்றில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் டிரினிட்டி ரீஇன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. டிரினிட்டி ரீஇன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பிற அறியப்படாத அரசு ஊழியர்களின் சதி மற்றும் உடந்தையுடன் ஜே & கே அரசாங்கத்தின் நிதித் துறையின் அறியப்படாத அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் நபர்கள் கிரிமினல் சதி மற்றும் கிரிமினல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களைச் செய்து, தங்களுக்குப் பண ஆதாயத்தை ஏற்படுத்திக் கொண்டு, அரசின் கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்று ஜே & கே நிர்வாகத்தின் முதற்கட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது..."

அரசு ஊழியர்களுக்கு குழு மருத்துவக் காப்பீட்டிற்கான டெண்டர்களை அரசாங்கம் நடத்தியது, ஆனால் ஒரு ஏலம் மட்டுமே பெறப்பட்டது. பின்னர், அரசாங்கம் அதன் சார்பாக டெண்டர்களை வெளியிட காப்பீட்டு தரகர் டிரினிட்டியை நியமித்தது. ஏழு காப்பீட்டு நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துக் கொண்ட நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஏலம் பெற்றது. இது தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 61 கோடிக்கு மேல் பிரீமியமாக மாநில நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: பாக்ஸ்லோவிட் என்றால் என்ன? தீவிர கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக WHO பரிந்துரைக்கிறதா?

சத்ய பால் மாலிக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியப் பிறகு, இந்த விவகாரம் மாநில ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் நிதித் துறையால் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகள் கண்டுபிடித்தது என்ன?

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டில், டெண்டர் செயல்முறையின் நடுவில் தகுதிக்கான அளவுகோல் மாற்றப்பட்டது, காப்பீட்டு தரகரின் வெளிப்படையான தேர்வு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பலன்களை வழங்குவதற்காக செயற்கையாக உயர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து சிக்கல்களையும் ஆராய்ந்த பிறகு, நவம்பர் 27, 2021 தேதியிட்ட ஏசிபி தனது அறிக்கையில், “ஏசிபியால் சரிபார்க்கப்பட்டதில் எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை” என்று கூறியது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து கூடுதல் பிரீமியமான ரூ.44 கோடியை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க ஏபிசி பரிந்துரைத்தது.

ஆனால், இந்த ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிதித்துறை கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. இ-டெண்டர் செயல்முறை பின்பற்றப்படாதது, முதல் டெண்டரில் ஒரு நிறுவனம் மட்டும் கலந்துக் கொண்ட நிலையில், மறு டெண்டருக்கான அளவுகோல் மாற்றம், ஏற்கனவே கையெழுத்திட்ட பிறகு டிரினிட்டியுடன் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே, பிரீமியத்தின் முதல் தவணையை வெளியிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.

கிரு நீர்மின் திட்டம் தொடர்பான வழக்கு என்பது என்ன?

இந்த வழக்கு, 2019 ஆம் ஆண்டில் சிவிபிபிபிஎல் மூலம் ஜம்முவில் உள்ள கிரு நீர்மின் திட்டத்தில் ரூ.22,000 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பானது.

அப்போதைய சிவிபிபிபி தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான நவீன் சவுத்ரி, எம்.டி.எம்.எஸ்.பாபு மற்றும் படேல் இன்ஜினியரிங் நிறுவனத்தைத் தவிர இயக்குநர்கள் எம்.கே.மிட்டல் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜே & கே ஏசிபி மற்றும் மின் துறையால் விசாரணை நடத்தப்பட்டதாக எஃப்ஐஆர் கூறுகிறது.

“இந்த அறிக்கைகளை ஆய்வு செய்வதன் மூலம், கிரு நீர்மின் திட்டத்தின் குடிமராமத்து பணி தொகுப்பு வழங்குவதில், இ-டெண்டர் தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்பதும், CVPPPL இன் 47வது வாரியக் கூட்டத்தில் ரிவர்ஸ் முறை இ-டெண்டர் மூலம் மறு டெண்டர் எடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், நடப்பு டெண்டர் செயல்முறை ரத்து செய்யப்பட்ட பிறகு, மறு டெண்டருக்கும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை மற்றும் இறுதியாக M/s படேல் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது,” என்று FIR கூறுகிறது.

ரூ.4,287 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மீது, தரமற்ற பணி மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. சிவிபிபிபிஎல்-ன் 47வது போர்டு மீட்டிங்கில் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதையும், 48ல் மீண்டும் புத்துயிர் பெற்று படேல் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதையும் ஏசிபி விசாரணை கண்காணித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment