Advertisment

5700 ஆண்டுகளுக்கு முன்பே “குடும்ப கல்லறை”; உலகின் மிக பழமையான குடும்ப உறுப்பினர்களின் எலும்புகள் மீது ஆய்வு

கல்லறையில் புதைக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையானோர், ஒரு ஆணுடன் சேர்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட நான்கு பெண்களின் வம்சாவளியினர் என்கிறது ஆய்வு முடிவு.

author-image
WebDesk
New Update
world's oldest family tree

5700 ஆண்டுகளுக்கு முன்பு அந்த குடும்ப கல்லறை எப்படி இருந்திருக்கும்? Courtesy of Corinium Museum (Copyright Cotswold District Council)

world's oldest family tree : சுமார் 5700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த 35 நபர்களின் எச்சங்கள் மீது சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய தொல்லியல் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சிகள் ஆச்சரியம் தரும் தகவல்களை வெளியிட்டுள்ளன. அந்த 35 நபர்களும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisment

இந்த 35 நபர்களின் எலும்புக்கூடுகளும், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இங்கிலாந்தில் முதன்முறையாக விவசாயம் அறிமுகம் செய்யப்பட்ட போது கண்டறியப்பட்டது.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த வாரம் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மனிதனிடம் எழுத்தறிவு அற்ற காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் குடும்ப அமைப்புகள் எப்படி இருந்தன என்பதை விவரிக்கிறது. புதிய கற்காலத்தில் மக்களிடம் நிலவிய புதைகாடு மற்றும் குடும்ப உறவுகள் குறித்த நுண்ணறிவை காண இந்த ஆராய்ச்ச்சி முடிவுகள் உதவுகிறது என்றும் நேச்சர் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்காலத்தின் போது, வரலாற்றுக்கு முந்தைய ஐரோப்பிய சமூகங்கள் நவீன அப்சர்வர்களுக்கு நன்றாக பரீட்சையமானதாக தோன்ற துவங்கியது. இந்த காலத்தில் மக்கள் வேட்டையாடி உண்ணும் பழக்கத்தை நிறுத்திவிட்டனர் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பீட்டர் புகுக்சி தன்னுடைய என்சைக்ளோபெடியா ஆஃப் ஆர்க்கியாலஜி (Encyclopaedia of Archaeology) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

இங்கிலாந்தில் அமைந்திருக்கும் காட்ஸ்வூல்ட்ஸ் - செவெர்ன் (Cotswolds-Severn) பகுதியில் அமைந்திருக்கும் ஹஜெல்டோன் நார்த் கைர்ன் (Hazelton North cairn) பகுதியில் புதைக்கப்பட்ட 35 நபர்களின் பற்கள் மற்றும் எலும்புகளை வைத்து டி.என்.ஏ. பகுப்பாய்வு நடத்தப்பட்டது. 35 நபர்களில் 27 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என்பது உறுதியானது.

ஆனால் மீதம் இருக்கும் 8 நபர்களின் டி.என்.ஏ. அந்த குடும்பத்துடன் ஒத்துப்போகவில்லை. எனவே ஒரு குடும்ப கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட ரத்த சொந்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை 5700 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் உணர்ந்து செயல்பட்டிருக்கின்றனர் என்கிறது ஆராய்ச்சி முடிவு.

இது தாங்க டைனோசர் குட்டி; உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய யிங்லியாங் முட்டை

இந்த ஆய்வு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

கல்லறையில் புதைக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையானோர், ஒரு ஆணுடன் சேர்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட நான்கு பெண்களின் வம்சாவளியினர் என்கிறது ஆய்வு முடிவு. அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் இறந்த போது, வடக்கு மற்றும் தெற்காக பிரிக்கப்பட்ட கல்லறைகளில் அவர்கள் புதைக்கபப்ட்டனர். ஆண்கள் அவர்கள் தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதரர்கள் அருகே புதைக்கப்பட்டனர். ஆனால் வயதுக்கு வந்த பெண்களின் உடல்கள் அங்கே கிடைக்கவில்லை. ஒருவேளை தங்களின் துணைகளுடன் தனி குடும்பத்தை உருவாக்கியிருக்கும் அப்பெண்கள் வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

publive-image

தகப்பன் வழி சொந்தங்களுக்கு மட்டுமே புதைகாடுகளை பயன்படுத்தும் உரிமை இருப்பதும் இதன் மூலம் புலப்பட்டுள்ளது. தனிநபர்களை வடக்கு அல்லது தெற்கு அறைகளில் அடக்கம் செய்வதற்கான முடிவு ஆரம்பத்தில் அவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பெண்ணைப் பொறுத்தது. ”முதல் தலைமுறை பெண் என்பது பெண்களுக்கு இந்த சமூகம் அளித்துள்ள முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது என்று நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆராய்ச்சியாளரும் இந்த கட்டுரையின் இணை ஆசிரியருமான இன்கோ ஒலால்டே, கல்லறையில் சிறந்த டிஎன்ஏ பாதுகாப்பு மற்றும் பண்டைய டிஎன்ஏ மீட்பு மற்றும் பகுப்பாய்வு புகுத்தப்பட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களின் பயன்பாடு உலகின் பழமையான குடும்ப உறுப்பினர்களின் ஃபேமிலி ட்ரீயை மறுகட்டமைப்பு செய்ய உதவியது. இந்த பண்டைய குழுக்களின் சமூக கட்டமைப்பில் ஆழமான ஒன்றை புரிந்து கொள்ள, அதை பகுப்பாய்வு செய்ய இந்த தொழில்நுட்பங்கள் அனுமதி தந்தன என்று கூறினார். அவர் University of the Basque Country பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment