Advertisment

பிசிசிஐ தலைவரான கங்குலி : பிசிசிஐ அதன் தலைவரை எப்படி தேர்வு செய்கிறது?

பி.சி.சி.ஐயின் முழு உறுப்பினர்கள் 29 இந்திய மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச கிரிக்கெட் சங்கங்களை கட்டுப்படுத்தும் அமைப்புகளாக உள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sourav Ganguly to head BCCI how does the BCCI cricket board choose its president - பிசிசிஐ தலைவராகும் கங்குலி : பிசிசிஐ அதன் தலைவரை எப்படி தேர்வு செய்கிறது?

Sourav Ganguly to head BCCI how does the BCCI cricket board choose its president - பிசிசிஐ தலைவராகும் கங்குலி : பிசிசிஐ அதன் தலைவரை எப்படி தேர்வு செய்கிறது?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisment

பிசிசிஐ தனது சங்கத் தலைவரை எப்படி தேர்வு செய்கிறது என்பதை இங்கே பார்ப்போம்,

பி.சி.சி.ஐ.யின் அலுவலக பொறுப்பாளர்கள் யார்?

பி.சி.சி.ஐ.யின் ஐந்து அலுவலர்கள் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆவர். பி.சி.சி.ஐ.யின் சங்கம் மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி, அவர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், தங்கள் பிரதிநிதிகளில் வாரியத்தின் முழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பி.சி.சி.ஐயின் முழு உறுப்பினர்கள் 29 இந்திய மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச கிரிக்கெட் சங்கங்களை கட்டுப்படுத்தும் அமைப்புகளாக உள்ளனர். குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைத் தவிர, ஒவ்வொரு மாநிலமும் (மற்றும் டெல்லி) முழு உறுப்பினர்களாக உள்ளன.

பிசிசிஐ-யின் முழு உறுப்பினர் கிரிக்கெட் சங்கங்கள்

ஆந்திர கிரிக்கெட் சங்கம்

அருணாச்சல் கிரிக்கெட் சங்கம்

அசாம் கிரிக்கெட் சங்கம்

பரோடா கிரிக்கெட் சங்கம்

பீகார் கிரிக்கெட் சங்கம்

சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம்

வங்காள கிரிக்கெட் சங்கம்

மிசோரம் கிரிக்கெட் சங்கம்

புதுச்சேரி கிரிக்கெட் சங்கம்

உத்தரகண்ட் கிரிக்கெட் சங்கம்

டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கம்

கோவா கிரிக்கெட் சங்கம்

குஜராத் கிரிக்கெட் சங்கம்

ஹரியானா கிரிக்கெட் சங்கம்

இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம்

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம்

ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம்

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்

கேரள கிரிக்கெட் சங்கம்

மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம்

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம்

மணிப்பூர் கிரிக்கெட் சங்கம்

மேகாலயா கிரிக்கெட் சங்கம்

மும்பை கிரிக்கெட் சங்கம்

நாகாலாந்து கிரிக்கெட் சங்கம்

ஒடிசா கிரிக்கெட் சங்கம்

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்

ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம்

சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம்

சிக்கிம் கிரிக்கெட் சங்கம்

சர்வீஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

திரிபுரா கிரிக்கெட் சங்கம்

யூனியன் பிரதேச கிரிக்கெட் சங்கம்

உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம்

விதர்பா கிரிக்கெட் சங்கம்

இதில் குஜராத் கிரிக்கெட் சங்கம் மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றிற்கு மட்டும் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

குஜராத் - பரோடா கிரிக்கெட் சங்கம், குஜராத் கிரிக்கெட் சங்கம், மற்றும் குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம்.

மகாராஷ்டிரா - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட் சங்கம் , மற்றும் விதர்பா கிரிக்கெட் சங்கம்.

இப்படி இரு கிரிக்கெட் சங்கங்களிலும் மூன்று உறுப்பினர்கள் இருப்பதால், பிசிசிஐ விதிப்படி சுழற்சி முறையில், இவைகளில் ஒரு கிரிக்கெட் சங்கம் மட்டும், பிசிசிஐ-யின் முழு உறுப்பினராகும். அவை மட்டுமே பிசிசிஐயின் சலுகைகளை பெறும்.

இந்திய ரயில்வே, ஆயுதப்படைகள் / சேவைகள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றிற்கு பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் வாக்களிக்க உரிமையுண்டு. பி.சி.சி.ஐ.க்கு சில இணை உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.

வாக்களிக்க உரிமையில்லாத பிசிசிஐ இதர இணை உறுப்பினர்கள்

கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (Cricket Club of India)

தேசிய கிரிக்கெட் சங்கம் (National Cricket Club)

தேர்தல்கள் பொதுவாக ஒரு சம்பிரதாயமாகும். உறுப்பினர்களின் நம்பகத்தன்மை நன்கு அறியப்பட்டதாகும். தேர்தல் எனும் போட்டி இருந்தால் கூட, அதன் முடிவுகள் பெரும்பாலும் முன்பே தீர்மானிக்கப்படுகிறது.

பி.சி.சி.ஐ தலைவரின் பணி என்ன?

பி.சி.சி.ஐ யின் சங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் "அலுவலர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்" படி, பிசிசிஐ தலைவர் பொதுக்குழு மற்றும் முக்கிய கூட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். மேலும் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர கணக்குகளில் கையெழுத்திடும் மூன்று நபர்களில் ஒருவராக, உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ.யின் தலைவர் விளங்குகிறார்.

பி.சி.சி.ஐ.யின் தலைவர் நாட்டின் மிக சக்திவாய்ந்த கிரிக்கெட் அதிகாரி ஆகிறார். இந்த பதவி நாட்டின் விளையாட்டு அமைப்புகளில் மிகவும் மதிப்புமிக்கது. இது நீண்ட காலமாக அரசியல்வாதிகள், வணிகர்கள் மற்றும் முந்தைய ராயல்டிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில், சமீபத்திய ஆண்டுகளில் சில உறுதியற்ற தன்மை நிலவுகிறது: ஜக்மோகன் டால்மியா 2015 ல் பதவியில் இருந்த போதே இறந்த பின்னர் பிசிசிஐ தலைவரான ஷஷாங்க் மனோகர் 2016 ல் ராஜினாமா செய்தார். தொடர்ந்து பதவியேற்ற அனுராக் தாக்கூர், 2017ல் நீக்கப்பட்டார். சி.கே.கன்னா இடைக்கால தலைவராக பதவி வகித்து வருகிறார்.

பிசிசிஐ தலைவரின் பதவிக் காலம் என்ன?

பிசிசிஐ விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி, "ஒரு அலுவலக பொறுப்பாளரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். மேலும் "எந்தவொரு நபரும் மூன்று முறைக்கு மேல் அலுவலக பொறுப்பாளராக இருக்கக்கூடாது". மீண்டும், "ஒரு மாநில சங்கத்தில் அல்லது பி.சி.சி.ஐ.யில் (அல்லது இரண்டிலும்) தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் எந்தவொரு பதவியையும் வகித்த ஒரு அலுவலக பொறுப்பாளர், மூன்று ஆண்டு Cooling-off காலத்தை நிறைவு செய்யாமல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.

சவுரவ் கங்குலி கடந்த மாதம் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டால்மியா காலமான பிறகு 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன், அவர் 2014 இல் CABன் இணை செயலாளரானார். இதனால் 2020 ஜூலை மாதத்தோடு அலுவலக பொறுப்பாளராக அவருக்கு ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த குறுகிய காலத்தைப் பற்றி கங்குலியிடம் கேட்டபோது, "ஆம், அதுதான் விதி, நாங்கள் அதைச் சமாளிப்போம்." என்றார்.

Bcci Sourav Ganguly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment