Advertisment

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்... சபாநாயகர் அதிகாரம் என்ன?

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு மீதான திங்கள்கிழமை இடைக்கால உத்தரவில், மகாராஷ்டிர துணை சபாநாயகரிடம் உச்ச நீதிமன்றம் எதிர் பிரமாணப் பத்திரத்தை கோரியுள்ளது. சட்டத்தின் கீழ் சபாநாயகரின் அதிகாரங்கள் என்ன, உச்ச நீதிமன்றத்தின் விளக்கங்கள் என்ன?

author-image
WebDesk
New Update
அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்... சபாநாயகர் அதிகாரம் என்ன?

Apurva Vishwanath 

Advertisment

Explained: Speaker’s powers in a rebellion: திங்களன்று சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு வழங்கும் போது, ​​அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் சபாநாயகரின் அதிகாரங்கள் மீது கேள்விகளை எழுப்பும் ஒரு முக்கியமான ஆனால் வழக்கத்திற்கு மாறான நீதித்துறை தலையீட்டை உச்ச நீதிமன்றம் செய்தது. பத்தாவது அட்டவணையின் கீழ் சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தாலே முன்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; சபாநாயகர் முடிவெடுத்தவுடன் மட்டுமே நீதித்துறை மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது, மேலும் அதற்கான செயல்முறையில் தலையிடுவதையும் நிராகரித்துள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்பட உள்ளது. பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை செவ்வாய்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

இதையும் படியுங்கள்: கட்சி தாவல் தடைச் சட்டத்தில் 2/3 விதி என்பது என்ன?

இடைக்கால உத்தரவு என்ன சொல்கிறது?

இந்த இடைக்கால உத்தரவு, ஜூலை 11-ம் தேதி வரை, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நோட்டீசுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்கிறது. இது அவர்களிடமிருந்து பிரமாணப் பத்திரங்களையும், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையின்படி, துணை சபாநாயகரை நீக்குவது குறித்து துணை சபாநாயகரிடமிருந்து எதிர் பிரமாணப் பத்திரத்தையும் கோருகிறது.

மேலும் கால அவகாசம் வழங்குவதன் மூலம், உச்சநீதிமன்றம் தகுதி நீக்க நடவடிக்கையை தாமதப்படுத்தியுள்ளது, இது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போதெல்லாம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

துணை சபாநாயகரையே நீக்குவது குறித்து பரிசீலிக்கும் விவகாரம் மிகவும் சிக்கலானது மற்றும் பத்தாவது அட்டவணையின் புனிதத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

பத்தாவது அட்டவணை என்ன சொல்கிறது?

1985 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பத்தாவது அட்டவணை அல்லது கட்சித் தாவல் தடைச் சட்டம், கட்சியிலிருந்து ‘மாறும்’ சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை சபாநாயகருக்கு வழங்குகிறது. 1992-ல் கிஹோடோ ஹோலோஹான் எதிர் சச்சில்ஹு என்ற முக்கிய வழக்கில், சபாநாயகருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது மற்றும் சபாநாயகரின் இறுதி உத்தரவு மட்டுமே நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்று கூறியது.

சட்டமன்ற செயல்பாட்டில் தலையிடுவதை நீதிமன்றங்கள் தவிர்க்கின்றன.

இருப்பினும், 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பு, சபாநாயகரின் அதிகாரங்கள் மீதான சமநிலையை மாற்றியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் அரசியல் சாசன நெருக்கடி தொடர்பாக நபம் ரெபியா எதிர் பெமாங் பெலிக்ஸ் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சபாநாயகரின் அதிகாரங்களை கட்டுப்படுத்தியது.

நபம் ரெபியா வழக்கில் தீர்ப்பு என்ன?

நபம் ரெபியா வழக்கின் தீர்ப்பில் உள்ள பெரிய சட்ட சிக்கல் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் வரம்புகளின் வரையறைகளில் இருந்தபோது, ​​​​கட்சி தாவல் எதிர்ப்பு பிரச்சினையும் வந்தது. அந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருந்தால், சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கையை தொடர "அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து சபாநாயகரையே நீக்குவதற்கான தீர்மான நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் நிலையில், பத்தாவது அட்டவணையின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிநீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கையை தொடர்வது நியாயமற்றது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை ஒரு சபாநாயகர் உண்மையாகவும் உரிமையாகவும் பெற்றிருந்தால், அவர் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தகுதி நீக்க நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படும் போது, ​​சபாநாயகரை நீக்கக் கோரி, பத்தாவது அட்டவணையைத் தடுத்து நிறுத்த அல்லது தவிர்க்க, அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு வழியை வழங்கியது. இந்த தீர்ப்பு சபாநாயகரின் கைகளை திறம்பட கட்டிப்போடுகிறது.

இந்த சட்ட வழியை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தியுள்ளார்களா?

ஆம், 2016 ஆம் ஆண்டு முதல், இந்த சட்ட வழியானது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பழக்கமான பிளேபுக் ஆகும்.

2016 ஆம் ஆண்டில், கட்சி மாறுதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக பா.ஜ.க.,வுக்கு அணி மாறிய, விஜய் பகுகுணா உள்ளிட்ட காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், உத்தரகாண்ட் சட்டமன்ற சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வாலை பதவி நீக்கம் செய்ய முயன்றனர்.

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கருணாஸ் மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வந்த நிலையில், சபாநாயகர்  தனபாலை பதவி நீக்கம் செய்யக்கோரி 2018ஆம் ஆண்டு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கருணாஸ் தமிழக சட்டப்பேரவை செயலாளர் கே.சீனிவாசனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

ஜூன் 2020 இல், மணிப்பூரில் உள்ள காங்கிரஸ் அதன் ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.க.,வுக்கு சென்றதால், சபாநாயகர் ஒய் கேம்சந்தை நீக்குவதற்கான நோட்டீஸ் அனுப்பியது.

சபாநாயகரை எப்படி நீக்க முடியும்?

அரசியலமைப்புச் சட்டத்தின் 179வது பிரிவின் கீழ், சபாநாயகர் ஒருவரை "அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில்" பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் நீக்க முடியும். இந்தச் செயல்முறை குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் அறிவிப்புடன் தொடங்க வேண்டும்.

2016 நபம் ரெபியா வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் 179 வது சட்டப் பிரிவை விளக்கியது, குறிப்பாக “அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்”, என்பது சபாநாயகரை நீக்குவதற்கான அறிவிப்பை வழங்கிய தேதி/நேரத்தில் அவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். சபாநாயகர் பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து சட்டப்பேரவையின் அமைப்பை மாற்ற முடியாது என்றும், எனவே சபாநாயகரின் நீக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் வரை, சபாநாயகர் பத்தாவது அட்டவணையின் கீழ் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் இந்த விளக்கம் கூறுகிறது.

மகாராஷ்டிர நிலைமை குறித்த விசாரணையின் போது, ​​சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், 2016 ஆம் ஆண்டு நபம் ரெபியா வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டு, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து, துணை சபாநாயகரை நீக்குவது குறித்த முடிவு நிலுவையில் உள்ள நிலையில், சட்டமன்ற துணை சபாநாயகர் முடிவு செய்ய முடியாது என்று வாதிட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் 2016 தீர்ப்புக்கான காரணங்கள் என்ன?

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் போது, ​​சபாநாயகர் பத்தாவது அட்டவணையின் கீழ் செயல்பட தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் காரணம், சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகர் சட்டசபையின் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

“எல்லாவற்றிற்கும் மேலாக, பிரிவு 179 (சி) இன் கீழ் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் சபாநாயகரை அகற்றுவதற்கு நேரம் எடுக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டவுடன், சபையின் அரங்கில், அதன் மீதான முடிவு உடனடியாக வெளிவரும். பெரும்பான்மையில் நம்பிக்கை வைத்துள்ள சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அஞ்சுவது ஏன்? சபாநாயகர் பதவி உறுதி செய்யப்பட்ட பிறகு, பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மனுக்களை அவர் உறுதியுடனும், தகுதியுடனும் கையாள்வார். மேலும், ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வதில் நம்பிக்கை இல்லாத சபாநாயகர், அவரை நீக்க கோரிய மனு நிலுவையில் உள்ள நிலையில், தகுதி நீக்க மனுக்கள் மீது பத்தாவது அட்டவணையின் கீழ் தீர்ப்பளிக்க ஏன் உரிமை வேண்டும்?" என நபம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த விளக்கமானது, பத்தாவது அட்டவணையின் நடவடிக்கைகள் அல்ல, உடனடியான நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்த விலகல் என்று பொருள்படும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கான இறுதிப் படி ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகும், ஆனால், 2016 ஆம் ஆண்டின் விளக்கம், "உண்மையான பெரும்பான்மையை" கண்டறிய வழிவகுக்காது என்று சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment