Advertisment

பாகிஸ்தானின் பொருளாதார நிலை

ஹேக்கர் ஒருவர், பாகிஸ்தான் தூதரகத்தின் ட்வீட் மூலம், சமீபத்தில் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் வரவிருக்கும் பொருளாதார நெருக்கடிகளைப் போக்க அந்நாடு என்ன செய்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
State of Pakistan, Pakistan's economy, Pakistan current and impending economic crises, பாகிஸ்தானின் பொருளாதார நிலை, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நிலை, பாகிஸ்தான், Pakistan, IMF, tamil indian express explained

பெல்கிரேடில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு ஹேக்கர் வெள்ளிக்கிழமை ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில், பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்க அதிகாரிகளுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி, பிரதமர் இம்ரான் கானிடம் இதைதான் "நயா பாகிஸ்தான்" என்று அவர் உறுதியளித்தாரா? என்று கேலி செய்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அலுவலகம் இந்த ட்வீட்டில் உள்ள தகவல் “ஆதாரமற்றது மற்றும் உண்மை இல்லை” என்று கூறியுள்ளது.

Advertisment

ஜூன், 2022-ல் முடிவடையும் நிதியாண்டில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 ஆண்டுகளில் அதிகபட்சமாக 5%-ஐத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது - அதே நேரத்தில், உயரும் பணவீக்க அபாயங்கள் மற்றும் உடனடியான கொடுப்பனவு நெருக்கடிகள், மிதமிஞ்சிய வெளிநாட்டுக் கடனைச் சார்ந்திருப்பது ஆகியவற்றால் அந்நாடு சிக்கலில் தத்தளிக்கிறது.

அந்நிய செலாவணி மற்றும் பண நெருக்கடிகள்

பாக்கிஸ்தான் பலமுறை பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளது: கட்டுக்கடங்காத பணவீக்கம், நடப்புக் கணக்கு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் பண மதிப்பிழப்புகள் இருந்துள்ளன. அந்நாடு இந்த சிக்கல்களின் கலவையை மீண்டும் எதிர்கொள்கிறது.

நாட்டின் 263 பில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு இரண்டு உடனடி அச்சுறுத்தல்களான, பணவீக்க அழுத்தங்களின் உருவாக்கம், உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகளின் கலவையிலிருந்து உருவாகும் ஒரு கொடுப்பனவு நெருக்கடி - தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள சிக்கல்கள் ஆகியவற்றில் இருந்து வந்திருக்கிறது. பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு பல வருடங்களில் இல்லாத அளவுக்கு 2018-ல் சரிந்த நெருக்கடியைப் போலவே நிலைமை மோசமாக உள்ளது.

நவம்பர் 19ம் தேதி நிலவரப்படி, பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டு பணம் கையிருப்பு 22.773 பில்லியன் டாலராக உள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) தெரிவித்துள்ளது. இதில் 16.254 பில்லியன் டாலர்கள் SBP வசம் இருந்தது; மீதமுள்ளவை வணிக வங்கிகளிடம் இருந்தன. நவம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், முதன்மையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானின் கையிருப்பு 691 மில்லியன் டாலராக குறைந்துள்ளது என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் குறிப்பிட்டுள்ளபடி, 2018 காலண்டர் ஆண்டில் பாகிஸ்தானின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக இருந்தது. ஆனால், ஒரு வருடம் கழித்து 0.99% ஆகவும், மேலும் 2020-ல் 0.53% ஆகவும் குறைந்தது. இது நடப்புக் கணக்கில் பற்றாக்குறையை உருவாக்க வழிவகுத்தது - இது ஒரு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையேயான வேறுபாட்டைக் கைப்பற்றுகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு உதவி போன்ற நிகர பரிமாற்றங்களையும் உள்ளடக்கியது.

ஒரு நிலையான உயர் பற்றாக்குறை அதன் அந்நிய செலாவணி சந்தையில் ஒரு நாட்டின் பணத்தை அதிகப்படியான விநியோகத்திற்கு வழிவகுக்கும். இது இறுதியில் பணத்தின் மதிப்பை எதிர்மறையாக பாதிக்கிறது. இது பாக்கிஸ்தானின் ரூபாய் பின்னடைவில் இருப்பதற்கு ஒரு காரணம்.

ஐ.எம்.எஃப் கடன் உதவி

வளர்ச்சி வீழ்ச்சி மற்றும் கடன் சேவைகளின் வேண்டுகோள்கள் அதிகரித்ததால், நாடு, கடந்த பல முறைகளைப் போலவே, கடன் நெருக்கடியை எதிர்கொண்டது. ஒரு நாடு அதன் இறக்குமதி பில்களுக்கு நிதியளிக்கவோ அல்லது அதன் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தவோ முடியாதபோது கடனை செலுத்த முடியாமல் நெருக்கடியால் தூண்டப்படுகிறது. பாக்கிஸ்தான் உள்நாட்டு நுகர்வுக்கான பெரும்பாலான பொருட்களை இறக்குமதி செய்கிறது. அது இந்த அழுத்தங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது; அதிகரித்து வரும் கடன் சேவை வேண்டுகோள்கள் அழுத்தத்தைச் சேர்த்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் 13 முறை செய்ததைப் போல, 2019ம் ஆண்டில், பாக்கிஸ்தான் ஐ.எம்.எஃப் -லிருந்து மீட்பு உதவியை நாடியுள்ளது. 6 பில்லியன் டாலர் நிதிப் பிரச்னைக்கு ஈடாக, பாகிஸ்தான் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், பொதுக் கடனைக் குறைக்க வேண்டும். ஆனால், சீர்திருத்த உறுதிப்பாடுகள் தொடர்பான சிக்கல்களால் நிதியுதவி திட்டம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடங்கியது. மேலும் நவம்பர் 22ம் தேதிதான் உடன்பாடு எட்டப்பட்டது.

“பாகிஸ்தான் அதிகாரிகளும் ஐ.எம்.எஃப் ஊழியர்களும் ஆறாவது ஆய்வை முடிக்க தேவையான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்” என்று ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறியது. ஆய்வு முடிந்ததும், 750 மில்லியன் டாலர் ஐ.எம்.எஃப் சிறப்பு நிதி பெறும் உரிமையாக (சுமார் 1 பில்லியன் டாலர்) பாகிஸ்தானுக்குக் கிடைக்கும். அது மொத்தப் பணம் சுமார் 3 பில்லியன் டாலர் பெறும்.

அதே நாளில், பாகிஸ்தானின் நிதியமைச்சருக்கு நிகரான ஷௌகத் தாரின் நான்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்: வரி விலக்குகள் மற்றும் மானியங்களை திரும்பப் பெறுதல், பெட்ரோ பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு, அதிக மின் கட்டணங்கள் மற்றும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஏப்ரல், 2020-ல் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் நிதிகளில் $1.4 பில்லியன் தணிக்கை செய்யப்பட்டது ஆகியவை குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பாகிஸ்தானின் அரசாங்கப் பத்திரங்கள் ஒப்பந்தம் முடிவடைந்த நாளில் அமெரிக்க டாலரில் 1.3 முதல் 2.8 சென்ட் வரை உயர்ந்தது. இது இந்த ஆண்டில் பாகிஸ்தானின் மிகச் சிறந்த நாளாகும்.

சவுதி ஒப்பந்தம்

நவம்பர் 27ம் தேதி பாகிஸ்தான் சவுதி அரேபியாவிடமிருந்து 3 பில்லியன் டாலர் கடனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், அதன் அமைச்சரவை அந்தத் தொகையை மத்திய வங்கியில் வைத்திருப்பதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. நவம்பர், 2018-ல், பாகிஸ்தான் 3 பில்லியன் கடனில் கையெழுத்திட்டது, அதில் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதிய ஏற்பாட்டின் கீழ், சவுதி அரசாங்கத்தின் 3 பில்லியன் டாலர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானின் டெபாசிட் கணக்கில் ஒரு வருடத்திற்கு இருக்கும் என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. பிரதமர் நிதி ஆலோசகரின் செய்தித் தொடர்பாளர் முஸம்மில் அஸ்லம், அடுத்த 60 நாட்களில் மூன்று ஆதாரங்களில் இருந்து 7 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. இதில் சவுதி அரேபியாவிலிருந்து 3 பில்லியன் டாலர் வைப்புத்தொகை, 1.2 பில்லியன் டாலர் சவுதி எண்ணெய் வசதி, ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் 800 மில்லியன் டாலர் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி எண்ணெய் வசதி நிதி ஆதாரங்கள் அடங்கும். இந்த டாலர் வரத்துகள் அனைத்தும், நாட்டின் இறக்குமதி கட்டணங்கள் மீதான அழுத்தத்தைத் தணிக்க போதுமானதாக இருக்கும் என்றார். ஆனால் சவுதி அரேபியாவுடனான கடன் ஒப்பந்தம் மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் வருகிறது. இதில் பதிவுசெய்யப்பட்ட 4% அதிக வட்டி விகிதங்கள், மிகக் கொடூரமான இயல்புநிலை விதிகள் மற்றும் எந்தவொரு சவுதி உரிமைகோரலுக்கு எதிராகவும் பாகிஸ்தானின் சட்டப்பூர்வ ஆதரவின் மீதான கட்டுப்பாடுகள் அடங்கும்.

பணவீக்கம் உயர்வு

பாகிஸ்தானின் பணவீக்கம் அதிகரித்து வரும் அமைதியின்மை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தினசரி உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாதத்தில் 9.2% ஆக இருந்த மொத்த பணவீக்கம் நவம்பரில் 11.5% ஆக இருந்தது.

2019ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலான மாதங்களில் வருடாந்திர உணவுப் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் உள்ளது. இது ஜனவரி, 2020-ல் 23.6% ஆகவும், ஜூலை, 2020-ல் 17.8% ஆகவும், ஏப்ரல், 2021-ல் 15.9% ஆகவும் உயர்ந்துள்ளது என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளதாக நவம்பர் 17-ம் தேதி உலக வங்கி அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. நவம்பர் மாதம் அது இரட்டை இலக்கங்களுக்கு திரும்புவதைக் குறிப்பிட்டுள்ளது.

பாக்கிஸ்தானின் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் கவ்கப் இக்பால் கருத்துப்படி: “உணவுப் பொருட்களின் விலை உயர்வு, குறிப்பாக புதிய பழங்கள், பால் மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அளவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அதிக விலைகள் புரதம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை அவர்களின் கைக்கு எட்டாததால், அதன் சுமையின் பெரும்பகுதி ஏழைகள் மீது விழுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

பணவீக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகளால் உந்தப்பட்டாலும், பிற்போக்குத்தனமான உள்நாட்டுக் கொள்கைகளும் விஷயங்களுக்கு உதவவில்லை, இஸ்லாமாபாத் கோதுமை மற்றும் கரும்புக்கு ஆதரவாக அதிக மதிப்புள்ள பொருட்களின் உற்பத்திக்கு முறையாக அபராதம் விதித்துள்ளது என்று டவுட் கான், நமாஷ் நாசர் மற்றும் வில்லெம் ஜான்சென் எழுதிய உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக, பாகிஸ்தான் தோட்டக்கலைப் பொருட்கள், பால் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதியாளராக உள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான விலங்குகளை உற்பத்தி செய்யும் திறனும், உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்கு மூலப் பொருட்களை அளிக்க பருத்தி உற்பத்தி குறைவாக உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

செப்டெம்பர் மற்றும் அக்டோபரில் பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இது எண்ணெய் மற்றும் பொருட்களின் விலை உயர்வு உள்நாட்டு தேவையை மேம்படுத்துகிறது. நவம்பரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானின் நிதிக் கொள்கை அறிக்கை குறிப்பிட்டது போல, இந்த வெளிப்புற அழுத்தங்களை சரிசெய்வதற்கான சுமை பெரும்பாலும் ரூபாயின் மீது விழுந்துள்ளது. அபாயங்களின் இருப்பு வளர்ச்சியிலிருந்து விலகி பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கை எதிர்பார்த்ததை விட வேகமாக மாறியுள்ளது.

எதிர்பார்ப்பு

2021-22 நிதியாண்டில் (ஜூலை-ஜூன் வருடாந்திர சுழற்சி) பாகிஸ்தான் சுமார் 5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 24ம் தேதி ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் கவர்னர் ரீசா பக்கீர் சி.என்.பி.சி-யிடம் கூறினார். “இது நான்கு வருட உயர்வு, இந்த வளர்ச்சி பாகிஸ்தானில் எரிசக்தி அல்லாத இறக்குமதிகளில்கூட வலுவான மற்றும் விறுவிறுப்பான தேவையில் பிரதிபலிக்கிறது. ” என்று அவர் கூறினார்.

செப்டம்பரில், ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் ஜூலை 22-ல் முடிவடைந்த நிதி ஆண்டில் 4.2% வளர்ச்சியைக் கணித்துள்ளது. இது பக்கீர் மதிப்பீட்டை விட மிகக் குறைவு. அவரது கருத்துப்படி, அரசாங்கத்தின் இலக்கான 4.8% ஐ விட மிகவும் நம்பிக்கையானவை இது.

நவம்பர் 24ம் தேதி ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் அதன் கொள்கை விகிதத்தை 150 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 8.75% ஆக உயர்த்தியுள்ளது. பணவீக்கம் தொடர்பான அபாயங்கள், பணவீக்கம் மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு ஆகியவை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், வளர்ச்சிக்கான கண்ணோட்டம் தொடர்ந்து மேம்படுகிறது. வணிக வங்கிகளுக்கான ரொக்க கையிருப்புத் தேவையை வங்கி ஒரு சதவீதம் உயர்த்தியுள்ளது. இது பத்தாண்டில் முதல் நடவடிக்கையாகும்.

ஆனால், “அடிப்படை பொருட்களுக்கான பதுக்கல் அல்லது விலை ஊகங்கள் இல்லை” என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் உட்பட, பணவீக்கத்தைக் குறைக்க அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று பக்கீர் வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pakistan Economy Pakistan Pm Imran Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment