Advertisment

ராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்?

மாநில போலிஸ் படைகளும், தனியார் பாதுகாப்பு அமைப்புகளும் இராணுவ உருமறைப்பு சீருடை அணிந்தால், இந்திய இராணுவம் நடவடிக்கை எடுக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்?

கும்பல் வன்முறை போன்ற கடமைகளை ஒழுங்குபடுத்தும் மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகள் (சிஏபிஎஃப்) 'போர் சீருடை' என்று குறிப்பிடப்படும் 'ராணுவ முறை' சீருடையை அணியக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு இந்திய ராணுவம் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

 

இராணுவம் ஏன் இந்த வழிகாட்டுதல்களை நாடியது?

பிப்ரவரி 23 அன்று, வடகிழக்கு டெல்லியின் ஜஃப்ராபாத்தில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் சிஏஏ எதிர்ப்பு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர், இந்திய இராணுவத்துடன் ஒத்திருக்கும் போர் முறை சீருடைகளை அணிந்திருந்தனர். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைராலனது. செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ கூட - இப்பகுதியில் இராணுவம் அழைக்கப்பட்டதாக தெரிவித்தது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்

அன்று மாலையே, "மாநில போலிஸ் படைகளும், தனியார் பாதுகாப்பு அமைப்புகளும் இராணுவ உருமறைப்பு சீருடை  அணிந்தால், இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தாக ஏ.என்.ஐ ட்வீட் செய்ததது.

இராணுவத்திற்காக தீர்மானிக்கப்பட்ட உருமறைப்பு சீருடைகளை துணை ராணுவம் மற்றும் மாநில போலீஸ் படைகள்  அணிவதைத் தடுக்கும் கொள்கை வழிகாட்டுதல்கள் இந்தியாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  (டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாதுகாப்புக் காவலர்களும் இராணுவ மாதிரி சீருடைகளை அணிந்திருந்தனர் என்று சமூக ஊடகங்களில் சில பயனர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்)

 

அடுத்த நாள், இராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ,“உள்நாட்டு பாதுகாப்பு கடமைகளுக்கு இந்திய ராணுவம் நிறுத்தப்படவில்லை" என்ற செய்தியை வெளியிட்டது.

மேலும், இராணுவம் அரசாங்கத்திற்கு முறையாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. அதில், "சட்டம் மற்றும் ஒழுங்கு சூழ்நிலைகளை கையாளுவதற்கு பணியமர்த்தப்படுகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நகர்ப்புறங்களில் ஈடுபடுத்தப்படுகையில், நிறுத்தப்படும் துணை இராணுவப் படையினர்  போர் ஆடைகளை  அணியத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காட்டு நிலப்பரப்பில் பணி புரியும் சிஏபிஎஃப் மற்றும் மாநில போலிஸ் படையினர் மட்டுமே  முற்றிலும் மாறுபட்ட  ஆடைகளை (வண்ணம் மற்றும் வடிவத்தில்) பயன்படுத்த வேண்டும்" என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், “சந்தைகளில்  இராணுவ மாதிரி ஆடைகளின் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

ராணுவம் சீருடை அணிவதற்கான விதிகள் என்ன?

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171 (“மோசடியான உள்நோக்கத்துடன், பொதுப் பணியாளரால் பயன்படுத்தப்படும் சீருடையை அணிதல் அல்லது அடையாள சின்னத்தை எடுத்துச் செல்லல்”) இவ்வாறு கூறுகிறது: “எவரேனும், பொதுப் பணியாளர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்திராதபோது, பொதுப் பணியாளர்களின் அந்தப் பிரிவு பயன்படுத்தும் ஏதாவதொரு சீருடை அல்லது அடையாள சின்னத்தைப்போன்று தோற்றமளிக்கிறதை, பொதுப் பணியாளர்களின் அந்தப் பிரிவை அவர் சேர்ந்தவர் என அது நம்பப்படும் என்ற உள்நோக்கத்துடன், அல்லது அது அநேகமாக நம்பப்படும் என்ற தெரிதலுடன் ஏதாவதொரு சீருடையை அணிந்தால் அல்லது அடையாள சின்னத்தை எடுத்துச் சென்றால் மூன்று மாதங்கள் வரைநீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன்  அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

மேலும், தனியார் பாதுகாப்பு முகவர் (ஒழுங்குமுறை) சட்டம், 2005 இன் பிரிவு 21 (“அங்கீகரிக்கப்படாத சில சீருடைகள்   பயன்பாட்டிற்கான அபராதம்”) கூறுகிறது: “எந்தவொரு தனியார் பாதுகாப்புக் காவலரும் அல்லது மேற்பார்வையாளரும் ; இராணுவம், விமானப்படை, கடற்படை  காவல்துறை, போன்ற தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருக்கும்  உடையணிந்திருந்தால் ஒரு வருடம் வரை  நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் , அல்லது ஐந்தாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

போர் சீருடையை இராணுவம் எப்போது ஏற்றுக்கொண்டது?

1947 க்கு முன்பு, இந்திய ராணுவத்தில் ஒரே ஒரு வகை காக்கி சீருடை மட்டுமே இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது வடகிழக்கு மற்றும் பர்மாவின் காடுகளில் சண்டையிடும் அதன் வீரர்கள் அணிந்திருந்த ஆலிவ் பச்சை நிறத்தை இராணுவத்தின் சீருடையாக சுதந்திர இந்தியா ஏற்றுக்கொண்டது.

ஜெர்மனியின் ஜேர்மன் வாஃபென்-எஸ்.எஸ், லுஃப்ட்வாஃப் மற்றும் பசிபிக் தியேட்டரில் அமெரிக்க கடற்படையினர் அணிந்திருந்த உருமறைப்பு 'போர்' சீருடைகள், இந்திய அமைதி காக்கும் படை 1980களின் பிற்பகுதியில் வடக்கு இலங்கையின் காடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட சென்றபோது (எல்.டி.டி.இ) இந்திய இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2005 ஆம் ஆண்டில் ஜெனரல் ஜே.ஜே சிங் இராணுவத் தளபதியாக இருந்தபோது உருமறைப்பு போர் சீருடை சற்று திருத்தப்பட்டது. ‘இந்திய இராணுவம்’ என்ற சொற்களும், ராணுவ சின்னத்தைக் குறிக்கும் இரண்டு வாள்களின் வார்டர்மார்க் சீருடைகளில் பதிக்கப்பட்டது. இதன்மூலம்       ராணுவ சீருடைகளுக்கும், காவல் துறையினர்  சீருடைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை பெரிதுபடுத்த முடிந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  
Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment