Advertisment

டி 20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியா - ஓமன் அணிகள் ஏன் தொடக்க நாள் ஆட்டத்தில் மோதின!

why it is Papua New Guinea vs Oman on Day 1 Tamil News: பப்புவா நியூ கினியாவின் டி 20 தரவரிசையில் 15 வது இடத்திலும், ஓமான் 18 வது இடத்திலும் உள்ளன. இந்த அணிகள் பாரம்பரிய கிரிக்கெட் நாடுகள் அல்ல.

author-image
WebDesk
New Update
T20 World Cup Tamil News: why it is Papua New Guinea vs Oman on Day 1

T20 World Cup Tamil News: 7வது ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா - ஓமன் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் சேர்த்து. தொடர்ந்து களமிறங்கிய ஓமன் அணி விக்கெட் இழப்பின்றி 13.4 வது ஓவரிலேயே 131 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

Advertisment

டி 20 உலகக் கோப்பை அதிகாரப்பூர்வமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகள் மோதும் லீக் சுற்றை காண அக்டோபர் 23 வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

டி 20 உலகக் கோப்பை தொடரின் வடிவம்தான் என்ன?

நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் பிரிவில் பிரிக்கப்பட்டுள்ள 8 அணிகளுக்கு தான் தற்போது தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தகுதிச் சுற்றில் தகுதி பெறும் 4 அணிகள் 2வது பிரிவில் உள்ள 8 அணிகளுடன் சேர்க்கப்பட்டு 'சூப்பர் 12'-க்குள் செல்லும்.

சூப்பர் 12 -க்குள் இடம் பெற்றுள்ள அணிகள் குழு 1 மற்றும் குழு 2 என பிரிக்கப்பட்டு, இரண்டு குழுக்களிலும் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இரண்டு இறுதிப் போட்டியாளர்களும் நவம்பர் 14 அன்று துபாயில் சந்திப்பார்கள்.

இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் முதல் தகுதிச் சுற்றில் இடம் பெற காரணம்?

கடந்த மார்ச் 20 அன்று ஐசிசி டி 20 தரவரிசை அடிப்படையில் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கவில்லை. எனவே அந்த அணிகள் முதல் தகுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ளன.

சூப்பர் 12 இல் எத்தனை அணிகள் உள்ளன?

ஐசிசி டி 20 தரவரிசை அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் நேரடியாக சூப்பர் 12 க்குள் நுழைந்துள்ளன.

2016 பதிப்பிலிருந்து நடப்பு தொடர் எவ்வாறு வேறுபடுகிறது?

ஐசிசி உலக டி 20 கடைசி பதிப்பு சூப்பர் 10 வடிவத்தில் விளையாடபட்டது. இந்த 'சூப்பர் 10' தகுதிச் சுற்றில் 8 அணிகள் நேரடி பங்கேற்பாளர்களாக களமிறயது. அதே நேரத்தில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் முறையே குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகியவற்றிலிருந்து தகுதி பெற்றன. இதையே தான் ஐசிசி நடப்பு தொடரிலும் விரிவுபடுத்தியுள்ளது.

16 அணிகள் கொண்ட போட்டி ஒரு மாதத்திற்கு ஏன் விளையாடப்படுகிறது?

16 அணிகள் பங்கேற்கும் நடப்பு தொடரில் 45 ஆட்டங்கள் உள்ளன. இவையனைத்தும் 28 நாட்கள் நடைபெறுகின்றன. இது ஒருவேளை மிக நீண்டதாக இருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு, ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடி யூஃபா கால்பந்து தொடரில் (யூரோ 2020) 24 அணிகள் 51 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன. இந்த போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெற்றது.

ரஷ்யாவில் 2018 ஃபிஃபா உலகக் கோப்பை, 32 அணிகள் மற்றும் 64 போட்டிகளுடன், ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெற்றது. காலம் வாரியாக, அக்டோபர் 17 முதல் நவம்பர் 14, டி 20 உலகக் கோப்பை கிட்டத்தட்ட பெரிய (பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்) கால்பந்து போட்டிகளுடன் பொருந்துகிறது.

"போட்டியின் தொடக்கம் நிகழ்வின் குறைபாடு" மற்றும் "நான்கு குழுக்கள் (தலா ஒவ்வொரு அணியும்) இருக்க வேண்டும்" என்று ஒப்புக்கொண்டுள்ள ஐசிசி-யின் ஒரு அதிகாரி தொடர் நியாயமாக இருக்கவே இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் நடைபெறவிருந்த 7வது டி 20 உலகக் கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. சூப்பர் 12 விளையாட்டுகளை நடத்த இங்கு 3 மைதானங்கள் (துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா) மட்டுமே உள்ளன. எனவே 'சூப்பர் 12' தகுதி சுற்றில் மோதவுள்ள அணிகளுக்கு போட்டிகளுக்கு இடையே நீளமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அக்டோபர் 24 அன்று இந்தியாவின் முதல் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக உள்ளது. முன்னதாக விராட் கோலியின் தலைமையில்ந அந்த அணி நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்குகிறது. ஏழு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 31 அன்று தங்கள் அடுத்த ஆட்டத்திற்கு இந்திய அணி வரும். டி 20 விளையாட்டு என்பது மூன்று மணி நேர போட்டி என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் தொடரில் தரவரிசை பட்டியலில் கீழே இடம்பெற்றுள்ள அணிகள் இருக்க வேண்டுமா?

பப்புவா நியூ கினியாவின் டி 20 தரவரிசை 15 வது இடத்திலும், ஓமான் 18 வது இடத்திலும் உள்ளது. இந்த அணிகள் பாரம்பரிய கிரிக்கெட் நாடுகள் அல்ல. இதைப் பற்றி கேட்டபோது, ​​ஒரு ஐசிசி செய்தித் தொடர்பாளர் 2018 ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தை சுட்டிக்காட்டினார். "உங்கள் கருத்தின் அடிப்படையில், 2018 ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டமும் மோசமாக இருந்தது-ரஷ்யாவிற்கு எதிராக சவுதி அரேபியா, நிகழ்வில் குறைந்த தரவரிசையில் உள்ள இரண்டு அணிகள்" என்று செய்தித் தொடர்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "டி -20 உலகக் கோப்பை தொடரை ஒருங்கிணைக்கும் நாடு தொடரில் பங்கேற்க வேண்டும். இதன்படி நடப்பு தொடரை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து ஓமன் ஒரு ஒருங்கிணைப்பாளர்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் ஃபிஃபா உலகக் கோப்பை ஒப்புமை ஒரு முக்கிய புள்ளியாகும். 2018 ஃபிஃபா உலகக் கோப்பையை ஒருங்கிணைத்த ரஷ்யா ஒரு பாரம்பரிய கால்பந்து நாடு. அந்நாட்டு தேசிய அணியில் லெவ் யாஷின் மற்றும் இகோர் நெட்டோ போன்ற புகழ்பெற்ற வீரர்கள் உள்ளனர். மேலும் அந்நாட்டில் ஸ்பார்டக் மாஸ்கோ, ஜெனிட் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் லோகோமோடிவ் மாஸ்கோ போன்ற பாரம்பரிய ஐரோப்பிய கிளப்புகள் உள்ளன. கிரிக்கெட் மற்றும் டி 20 உலகக் கோப்பையை பொறுத்தவரை ​​ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இரண்டும் ஐசிசி முழு உறுப்பினர்கள் அணிகள் கூட இல்லை.

ரசிகர்களின் பார்வையில் நடப்பு தொடர் எப்படி இருக்கிறது?

பப்புவா நியூ கினியா - ஓமன் அணிகள் மோதிய தொடக்க ஆட்டம் ஓமனில் உள்ள அல் -அமரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கு உள்ளூர் ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. "இது உலகக் கோப்பை, எனவே ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். தற்போது களத்தில் இறங்கும் அணிகள் இந்த தகுதி சுற்று ( தரவரிசை பட்டியலில் கீழே இடம்பெற்றுள்ள அணிகள்) கருத்துடன் உடன்படவில்லை என்று நான் நினைக்கிறேன் " என்று ஐசிசி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

நடப்பு தொடரை ஐசிசி ஏன் விரிவுபடுத்தியுள்ளது (சூப்பர் 12)?

ஜூன் 2018 இல், ஐசிசி அனைத்து 104 உறுப்பினர்களுக்கும் டி 20 சர்வதேச அந்தஸ்தை வழங்கியது. விளையாட்டின் உலகளாவிய அமைப்பு 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கு கடுமையாக முயற்சித்து வருகின்றன.

டி -20 கிரிக்கெட் என்பது நான்கு ஆண்டுகால ஷோபீஸில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வடிவமாகக் கருதப்படுகிறது. விரிவாக்கம் இதை ஒரு கண் கொண்டு செய்யப்படுகிறது. உண்மையில், ஐசிசி 2021 மற்றும் 2022 இல் மீண்டும் மீண்டும் டி 20 உலகக் கோப்பைகளை இணைப்பதற்காக 2021 சாம்பியன்ஸ் கோப்பையை ரத்து செய்துள்ளது (முதலில் 2020 மற்றும் 2021 இல் திட்டமிடப்பட்டது).

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket T20 Worldcup Sports Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment