Advertisment

உலகில் பெரிதான அகமதாபாத் ஸ்டேடியம் பிஸியான மைதானமாக மாறியது எப்படி?

டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு அகமதாபாத் மைதானம் தேர்வு செய்யப்பட்டது எப்படி? பிஸியான மைதானமாக மாறியது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உலகில் பெரிதான அகமதாபாத் ஸ்டேடியம் பிஸியான மைதானமாக மாறியது எப்படி?

வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இறுதிப் போட்டிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனென்றால் அகமதாபாத் தற்போது இந்திய கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக மாறியுள்ளதுடன்,  இந்தியாவின் முழு கிரிக்கெட் நிர்வாகமும் குஜராத்திலிருந்து இயங்குகிறது. பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா – தான் இதற்கு முக்கிய காரணம்.

Advertisment

டி 20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த எத்தனை இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன?

2021-ம் ஆண்டு டி20 உலககோப்பை தொடருக்காக இந்தியாவில் மும்பை, அகமதாபாத், லக்னோ, பெங்களூரு, சென்னை, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் டெல்லி என மொத்தம் 9 கிரிக்கெட் மைதானங்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது.  இதில் டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான அகமதாபாத்தின் மோட்டேரா ஸ்டேடியம் ஏன்?

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதனமாக அகமதாபாத் மைதானத்தில் ஒரே நேரத்தில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்திற்கு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது. தற்போது இந்த மோட்டேரா கிரிக்கெட் மைதானம் இந்திய கிரிக்கெட்டின் தாயகமாக உள்ளது.  பிசிசிஐ தலைமையகம் மும்பையில் இருந்தாலும், அகமதாபாத்தில் இருந்து பச்சை சிக்னல் கிடைக்கும் வரை இந்திய கிரிக்கெட்டில் எதுவும் செயல்படாது. இதற்கு முக்கிய காரணம் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த நபரான கிரிக்கெட் போர்டு செயலாளர் ஜெய் ஷா. இவரது தந்தையும், தற்போது மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜி.சி.ஏ) தலைவராக இருந்தார். தொடர்ந்து பிரதமர் மோடியும் ஒரு காலத்தில் ஜி.சி.ஏ தலைவராக இருந்தார்.

இன்றுவரை மோட்டேரா எத்தனை சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளது?

2020 க்கு முன்பு அகமதாபாத் ஸ்டேடியத்தில் 12 டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 1 டி 20 போட்டி நடைபெற்றுள்ளது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய காலிறுதி போட்டி இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை கடந்தது போன்ற சில முக்கிய தருணங்களை இந்த ஸ்டேடியம் கண்டுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தனது 432 வது விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை தகர்த்த பெருமை அகமதாபாத் ஸ்டேடியத்தையே சாரும். ஜவகல் ஸ்ரீநாத்தின் தனது ஸ்விங்கிங் பந்துவீச்சில் அசத்தியதும், நான்காவது இன்னிங்ஸ் இலக்கை, நோக்கி பேடடிங் செய்த ராகுல் டிராவிட்டின் 11,000டெஸ்ட் ரன் கடந்ததும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தனது 30,000 வது சர்வதேச ரன்னை எடுத்து தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய பெருமை இந்த ஸ்டேடியத்திற்கு உண்டு.

ஜெய் ஷா இந்திய வாரிய செயலாளராக ஆனதால் அகமதாபாத் எவ்வாறு பயனடைந்தது?

ஜெய் கிரிக்கெட் வாரிய செயலாளராக வந்ததிலிருந்து, அகமதாபாத் இந்திய கிரிக்கெட்டின் மையமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் சையத் முஷ்டாக் அலி டி 20 தொடரில் நாக் அவுட் ஆட்டங்கள் இந்த மைதானத்தில்தான் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக பிங்க்-பந்து டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி, அடுத்து வந்த ஐந்து டி 20 போட்டிகளும் இதே ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இறுதிப்போட்டி உட்பட அனைத்து பிளே-ஆஃப் போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் நகரங்களுக்கு நிறைய போட்டிகளை பெறுகிறார்களா?

ஆம், அது நிச்சயமாக உதவுகிறது. பி.சி.சி.ஐ ராஜீவ் சுக்லா மற்றொரு மூத்த பிசிசிஐ செயல்பாட்டாளர். அவர் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர் (யுபிசிஏ). யுபிசிஏ தலைமையகம் கான்பூரில் உள்ளது, ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டுகளை லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் விளையாட முடிவு செய்துள்ளது. பி.சி.சி.ஐ அத்தகைய சக்தி மாற்றத்தைக் கண்டது இது முதல் தடவை அல்ல,  ஷரத் பவார் மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்தபோது, ​​மும்பையின் வான்கடே ஸ்டேடியம் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்தியது.

கடந்த காலத்தில், அதிகாரத்தில் இருந்த பி.சி.சி.ஐ அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் ஒரு பெரிய போட்டியைப் பெறுவதை உறுதி செய்தனர். கடந்த காலங்களில் வாரியம் நிலையான டெஸ்ட் போட்டி இடங்களைக் கொண்டிருந்தது, ஆனால் சமீபத்திய காலங்களில், டெஸ்ட் கிரிக்கெட் சிறிய நகரங்களுக்குச் செல்வதை உறுதிசெய்ய புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment