Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக அரசு பாஜகவைப் பற்றி அச்சம் கொள்வது ஏன்?

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ஏன் பிளவு ஏற்பட்டுள்ளது? 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் அதிமுக அரசு எவ்வாறு உள்ளது?

author-image
WebDesk
New Update
aiadmk, admk, Tamil Nadu, aiadmk tamil nadu, Tamil Nadu politics, TN elections, TN Assembly elections, AIADMK, அதிமுக, பாஜக, தமிழக சட்டப்பேரவை தேர்தல், சசிகலா விடுதலை, Sasikala release, BJP in TN, Tamil Indian Express, tamil nadu elections explained

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே விரிசல் உருவாகத் தொடங்கியுள்ளது. இந்த விரிசல் அதிமுகவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது, தேசியக் கட்சியின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்துள்ளது. மேலும், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அடுத்த 3 மாதங்களில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர் பார்க்கப்படுவதால் அவருடைய மறு பிரவேசம் ஆகியவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவாதிக்கப்படுகிறது.

Advertisment

அதிமுக அரசு மாநிலத்தில் எவ்வாறு உணரப்படுகிறது?

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியின் அரசு செல்வாக்கற்றதும் இல்லை அல்லது அது தீவிர மக்கள் கோபத்தையும் எதிர்கொள்ளவில்லை. முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா தொடங்கி வைக்கப்பட்ட ரூ.2,000 பொங்கல் பரிசு போன்ற சமூக நலத் திட்டங்கள் பெரும்பாலானவற்றை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.

பழைய சிறந்த ‘மெட்ராஸ் கேடரின்’ அனைத்து பெருமைகளுடனும் மாநிலத்தில் உள்ள அரசு இயந்திரம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு முக்கிய விதிவிலக்காக, 2017ம் ஆண்டில் அமைதியான ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் பொது சொத்துக்கள் சேதமடைந்த விதம், 2018ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, சமீபத்தில், காவல்துறையில் நடந்த தொடர் உயிரிழப்புகள் மற்றும் வலதுசாரி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம், ஆன்லைனில் பல பெண்களையும் முக்கிய பத்திரிகையாளர்களையும் குறிவைத்து தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி துன்புறுத்துவது ஆகியவை உள்ளன.

இருப்பினும், வறண்டு தூர்ந்து கிடக்கும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடிமராமத்து திட்டங்கள், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் பராமரிப்பு மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம் போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அதிமுக அரசு நன்றாக செயல்பட்டு வருகிறது. பெரிய முதலீட்டு திட்டங்களைத் தொடங்குவதில் அரசாங்கத்தின் கைகள் கட்டியிருந்தாலும் அது மாநிலம் முழுவதும் பல வளர்ச்சி திட்டங்களையும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது.

அரசு ஏன் இன்னும் இறுக்கமாக நடந்துகொள்கிறது?

அதிமுக மேலும் சில பெரிய சவால்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட முயற்சியால் கட்சியின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் அடுத்த முதலமைச்சர் யார், பழனிசாமியா அல்லது பன்னீர்செல்வமா என்பது குறித்து ஏற்கனவே விவாதங்கள் உள்ளன. இந்த குழப்பம் இருந்தபோதிலும், பழனிசாமி கட்சி தலைமையாக இருப்பார் என்பதை பல மூத்த தலைவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். ஓ.பி.எஸ் முகாம் அவரது முக்கியத்துவத்தைத் வலியுறுத்தக்கூடும். ஆனால், அவர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வாக்கை இழந்து வருகிறார். “நாங்கள் இணைந்தபோது, ​​அவருக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களில் ஐந்து பேர் இப்போது அவருடன் இல்லை” என்று மூத்த அதிமுக அமைச்சர் ஒருவர் கூறினார்.

கட்சியின் முறையான மற்றும் முறைசாரா சொத்துக்கள் மற்றும் செல்வத்தின் மீது இருக்கும் சசிகலாவின் கட்டுப்பாட்டைத் தவிர, அவரது அண்ணன் மகன் டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலில் 4 சதவீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கி ஆதரவை நிரூபித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு, அவர் மிகவும் கொந்தளிப்பான அரசியலில் இருந்து விலகி ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்த அவர் தேர்வு செய்வாரா அல்லது அதிக ஆதரவைப் பெற தினகரனின் கட்சியைப் பலப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எந்த வழியிலும் சேதம் அதிமுகவுக்குதான். அமமுக மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிமுகவின் வாக்குத் தளத்திலிருந்துதான் பெறப்படுவார்கள். மே 2021க்கு முன்னர் அதிமுகவின் சக்தி மற்றும் வளங்களை ஒருங்கிணைப்பதற்காக சசிகலாவுடனான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து கட்சிக்குள் சில முணுமுணுப்புகள் உள்ளன. சசிகலா மற்றும் இ.பி.எஸ் ஒப்புக் கொண்டால் இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். பா.ஜ.க.விற்கும் இது விரும்பமானது. அத்துடன் அதிமுகவை பலப்படுத்துவது திமுகவை தோற்கடிப்பதற்கான ஒரே வழியாகும்.

அதிமுக - பாஜக கூட்டணி சாத்தியத்திற்கு பின்னணியில் உள்ள கட்டாயங்கள் என்ன?

பல அதிமுக தலைவர்கள் பாஜகவுடனான கூட்டணி, கட்சிக்கு நீண்டகால தீங்கு விளைவிப்பது என்று நம்புகின்றனர். இருப்பினும், ஒரு வகையில் இப்போது கட்சி இருப்பதற்கு கட்சி பாஜகவுக்கு கடன்பட்டுள்ளது. பாஜக மற்றும் சில ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பங்கு இல்லாமல், இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தலைமையிலான அணியை இணைப்பது 2017இல் நடந்திருக்காது. இந்த இணைப்பு இல்லாதிருந்தால், திமுக தலைமையிலான சக்திவாய்ந்த எதிர்க்கட்சிகளுக்கு முன்னர் சட்டமன்றத்தில் ஆளும் கட்சி தங்கள் பலத்தை இழந்திருக்கும்.

அதிமுகவின் தலைமை நிலையாக இருப்பதற்கான தந்திரமாக, தேசியக் கட்சியை அதன் இருப்புக்காக மகிழ்ச்சியாக வைத்திருந்தது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் நடத்திய பல சோதனைகள் தொடர்பாக, ஆட்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் உட்பட அனைத்து உயர்மட்ட அமைச்சர்களும் மத்திய ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு ஆளாக நேரிடும். சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சிபிஐ விசாரணை, கட்சியில் உள்ள மூத்த தலைவர்களைக் குறிப்பிடும் ஆதாரங்களை அவரது இல்லத்தில் இருந்து மத்திய விசாரணை அமைப்பு பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. சுரங்கத் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கட்டுக்கட்டான பணமும் அதிமுக உயர்மட்ட தலைவர்கள் அவருடன் நெருங்கிய தொடர்புள்ளதற்கான சான்றுகளும், தற்போதைய அதிமுக தலைமையால் டெல்லியில் ஒரு சக்திவாய்ந்த தேசியக் கட்சியுடன் ஜெயலலிதா தைரியமாக செயல்பட்டதைப் போன்று செயல்பட முடியாது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Bjp Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment