Advertisment

2021 ஐ.பி.எல்: தோனியும் சிஎஸ்கே-வும் தொட்டதெல்லாம் துலங்குவது எப்படி?

கடந்த ஆண்டு எங்களிடம் இல்லாத அனைத்து அம்சங்களையும் இந்த ஆண்டு முழுமையாக சேர்த்திருப்பதாக ஃப்ளெமிங் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
2021 ஐ.பி.எல்: தோனியும் சிஎஸ்கே-வும் தொட்டதெல்லாம் துலங்குவது எப்படி?

இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கியது. தற்போது அனைத்து அணிகளும் இன்றுடன் தங்களது 4-வது போட்டியை நிறைவு செய்யும் நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) மீண்டும் ஒரு முறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று +1.142 ரன்ரேட்டுடன்  புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Advertisment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற தொடரில் முதல்முறையாக பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தவறவிட்டது. இதனால் தொடரில் வீரர்கள் தேர்வின் தாக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் தோனியின் புத்திசாலித்தனமான தலைமை ஆகியவை ஆகியவை குறித்து பெரும் கேள்வி எழுந்த நிலையில், அந்த கேள்விகளுக்கு இந்த தொடர் திருப்புமுனை பதிலாக அமைந்துள்ளது.

தாக்கத்தை ஏற்படுத்துவது யார்?

மொயீன் அலி. 2021 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, ஒரு சிஎஸ்கே அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, சுழல்-பந்துவீச்சு ஆல்ரவுண்டரை தேர்வு செய்வதற்கு தயாராவதாக கூறினர். இதில் அவர்களின் முதல் தேர்வாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் 2-வது தேர்வாக இங்கிலாந்து அணியின் மொயின் அலி இருந்தார்.

ஆனால் ஏலத்தில், மேக்ஸ்வெல்லின் மதிப்பு அவர்களின் மதிப்பு அவர்களின் வரவு செலவுத் திட்டத்திற்கு அதிகமாக உயர்ந்தது. இதனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான ஏலப்பாதையில் இருந்து சிஎஸ்கே விலகியது. இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மேஸ்வெல்லை ரூ .14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்த்து. அதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அதிகாரிகளின் கவனம் மொயின் அலி பக்கம் திரும்பியது. இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் 5,000 ரன்களுக்கும் 292 விக்கெட்டுகளுக்கும் மேலாக குவித்துள்ள நிலையில் சென்னை அணி இவரை 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

தற்போது சிஸ்கே அணியில் 3-வது இடத்தில் களமிறங்கும் மொயீன் 152 ஸ்ட்ரைக் வீதத்தில் நான்கு போட்டிகளில் இதுவரை 133 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஒரு ஓவருக்கு 6.5 ரன்கள் விகிதத்தை விட்டுக்கொடுத்துள்ள மொயின் அலி 4 போட்டிகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கடந்த ஆண்டு சென்னையின் மோசனமான செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறுகையில், "கடந்த ஆண்டு எங்களிடம் இல்லாத அனைத்து அம்சங்களையும் இந்த ஆண்டு முழுமையாக சேர்த்திருப்பதாக கூறினார்.

ஸ்திரத்தன்மை எவ்வாறு உதவியது?

ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பு, சி.எஸ்.கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “நாம் நமது செயல்முறையை நம்ப வேண்டும், நமது செயல்முறையைச் சரியாகச் செய்தால், சிறப்பாக முடிவுகள் கிடைக்கும். என்று எம்.எஸ். தோனி சீசனுக்கு முந்தைய முகாமில் எளிமையாக கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஒரு மோசமான சீசனாக அமைந்த்து. ஆனால் இது ஒரு மோசமான அணியால் உருவாக்கவில்லை என்பதில் சிஎஸ்கே  நிர்வாகம் முழு தெளிவாக இருந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னரே சுரேஷ் ரெய்னா திடீரென வெளியேறியது பெரும் காயத்தை ஏற்படுத்தியது.  ஆனால் அவரின் இந்த முடிவு சிஎஸ்கே அமைப்பில் யாருக்கும் வெறுப்பை ஏற்படுத்தவில்லை. "சிஎஸ்கே ஒரு குடும்பத்தைப் போன்றது" என்று விஸ்வநாதன் கூறினார்.

மேலும் தற்போதைய சீசனில் ரெய்னா மீண்ம் அணிக்கு திரும்பியதை தொடர்ந்து அவர்கள் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனை மீண்டும் வரவேற்றனர். இதனால் அணியின் தீவிர மாற்றத்திற்கு செல்லவில்லை. மேலும் கடினமான தாக்கும், சுழல்-பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என சிஎஸ்கே அணியின் ஏல உத்தி தெளிவாக இருந்தது. மொயீனைத் தவிர, சி.எஸ்.கே அணி மேலும் ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக கே.கவுதமை ரூ .9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்த்து. ஆனால் கவுதம் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் கேப்டன் தோனி அவரை எப்போது, ​​எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய தெளிவான திட்டத்தைக் வைத்தள்ளார்.

தொடக்க ஆட்டகாரர் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இளைஞர்கள் ஸ்திரத்தன்மையால் பயனடைந்து வருகின்றனர். இதில் முதல் 3 போட்டிகளில் ரன்கள் குவிக்க தவறிய அவர், பெரும் அழுத்தத்திற்கு ஆளானார். ஆனால் கேப்டன் தோனி இளம் தொடக்க வீரர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கேற்று நடைபெற்ற கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

இந்த சுழற்சியில் தீபக் சாஹர் எப்படி முக்கிய பந்துவீச்சாளராக மாறினார்?

கடந்த ஆண்டு ஐபிஎல்-க்கு முன்பு தீபக் சாஹர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் விளையாடுவதற்கு முன்பு குணமடைந்தாலும், நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் அவருக்கு இணையாக இல்லை. சாஹருக்கு அணியில் ஒரு குறிப்பிட்ட பங்கு உண்டு, அவர் பவர் பிளேஸில் நன்றாக பந்து வீசுகிறார். இது தற்போது தெளிவாக தெரிந்துள்ளது. ஏற்கனவே ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த  சாஹர், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் 4 விக்கெட்டுகளை வீழத்தி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது விக்கெட் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தியுள்ளார்.

தோனியின் தலைமை திருப்புமுனையை எவ்வாறு ஏற்படுத்தியது?

தோனியின் தலைமை அணி வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்கிறது. இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தோனி தன்னை எவ்வாறு ஆதரித்தார் மற்றும் அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தின்  வீரராக வளர அனுமதித்தது பற்றி இன்னும் பேசுகிறார். களத்தில், சிஎஸ்கே கேப்டன் இன்னும் கூர்மையான மனதில் இருக்கிறார்.

ராயல்ஸுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜாவை அவர் கையாண்டது சிறப்பான விஷயமாகும். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா, ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தினார். மேலும் தனது முதல் இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதன் பின்னர், பனி நனைத்த பந்தை ஜடேஜாவுக்கு கொடுத்த தோனி, அதே ஓவரில் பட்லர் மற்றும் சிவம் டூபே ஆகியோரை வெளியேற்ற வழி செய்தார்.

தொடர்ந்து அந்த போட்டியில், தோனி 13 வது ஓவரில் மட்டுமே உலர்ந்த பந்து மூலம் மொயீனை அழைத்தார். ஆஃப் ஸ்பின்னரான மொயீன் அலி,  தனது முதல் இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 39 வயதில், தோனி ஒரு பேட்ஸ்மேனாக தனது பிரதமத்தை கடந்திருக்கிறார். ஆனால் அவர் கே.கே.ஆருக்கு எதிராக விளையாடியதைப் போலவே கூர்மையான கேமியோக்களை விளையாட வேண்டும். 8 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் குவித்தார். மேலும் கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணாவை ஆட்டமிழக்க 30-கெஜம் ஓடி சென்று கேட்ச் செய்த விதம், அவரின் உச்ச உடற்தகுதியை உறுதிப்படுத்தியது.

சிஎஸ்கே- இன் நன்மைக்காக இந்திய பிட்சுகள் செயல்படுகின்றனவா?

இது நீண்ட காலமாக அணியின் வார்ப்புரு, தோனியின் ஸ்பின்-சோக். கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புதிய பிட்ச்களில், இந்த முறையைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த காலப்பகுதியில் நடுநிலை இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டாலும், இந்திய பிட்சுகள் மேட்ச் சென்டர்களைக் குறைந்து மெதுவாக உள்ளன. இதுவே சென்னை அணியின் நடப்பு சீசனில், திருப்பத்திற்கு உதவுகின்றன. “பந்து இந்திய பிட்ச்களை இயக்கும். ஒரு இடம் பல போட்டிகளை நடத்துவதால், பிட்சுகள் சுழல் நட்பாக மாறும் ”என்று விஸ்வநாதன் கணித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Sports Update Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment