Advertisment

தேஜஸ்வி சூர்யா சர்ச்சை: விமானத்தில் அவசர கால கதவுகள் இருப்பது ஏன்?

பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானம் தரையில் இருக்கும்போதே இண்டிகோ விமானத்தில் அவசரக் கதவைத் திறந்தார். விமானம் தரையில் இருக்கும்போதோ அல்லது வானத்தில் பறக்கும்போதோ அவசர கால கதவை ஒருபோதும் திறக்க முயற்சி செய்யக்கூடாது.

author-image
WebDesk
New Update
Tejasvi Surya, Tejasvi Surya flight emergency door, indian express, Tejasvi Surya IndiGo, what is aircraft emergency door, emergency door opening, express explained

பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானம் தரையில் இருக்கும்போதே இண்டிகோ விமானத்தில் அவசரக் கதவைத் திறந்தார். விமானம் தரையில் இருக்கும்போதோ அல்லது வானத்தில் பறக்கும்போதோ அவசர கால கதவை ஒருபோதும் திறக்க முயற்சி செய்யக்கூடாது.

Advertisment

பா.ஜ.க யுவ மோர்ச்சா தேசியத் தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.-யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், விமான தரையில் இருந்தபோது, இண்டிகோ விமானத்தின் அவசர வழியை திறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் சூர்யாவின் பெயரை குறிப்பிடவில்லை; “டிசம்பர் 10, 2022 அன்று சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு 6E 7339 விமானத்தில் பயணித்த ஒரு பயணி தற்செயலாக அவசரகால கதவைத் திறந்தார்” என்று மட்டுமே அதில் குறிப்பிட்டிருந்தது.

பயணிகள் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம், (டிஜிசிஏ) வெளியிட்ட ஒரு அறிக்கையில், விமானத்தில் பயணித்த ஒரு பயணியால் ஒரு தவறு நடந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

அவசரகால வெளியேறும் கதவு திறக்கப்பட்டபோது விமானம் புறப்படுவதற்கு மெதுவாகச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், விதிமுறைகளின்படி, பயணிகள் இறக்கிவிடப்பட்டு, முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே விமானம் புறப்பட்டது.

ஒரு பயணி விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சி செய்தது, இது முதல் முறை அல்ல. சிவில் விமானப் போக்குவரத்து வரலாற்றில் பயணிகள், தரையில் மட்டுமல்ல, நடுவானிலும்கூட அவசரக் கால கதவைத் திறக்க முயன்ற சம்பவங்கள் நிறைய உள்ளது.

விமானத்தில் அவசர காலக் கதவுகள் ஏன் இருக்கிறது?

அவசர காலக் கதவுகள், என்பது பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவசரகாலத்தில் விமானத்தி இருந்து விரைவாக வெளியேற உதவும் நோக்கத்திற்காக வைக்கப்பட்டவை. பள்ளம், விபத்து தரையிறக்கம், எரிதல், கேபினில் புகை நிரம்பும்போது, அல்லது உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய பிற நிகழ்வுகளின்போது விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அவசர காலக் கதவுகள் இருக்கிறது.

அவசரகாலத்தின் போது வெளியேறுவதற்கு பணியாளர்களின் குறிப்பிட்ட உத்தரவுகளின் கீழ் மட்டுமே கதவுகள் திறக்கப்பட வேண்டும் - வேறு எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது.

விமான சோதனை மற்றும் சான்றிதழ் பெறும்போது, விமான உற்பத்தியாளர்கள் அனைத்து பயணிகளையும், அதிகபட்சமாக விமானத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளை 90 வினாடிகளுக்குள் வெளியேற்ற முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். அவசரகாலத்தின் போது செயலிழந்த சாதனங்கள் அல்லது அடைக்கப்பட்ட கதவுகளை காரணியாக்கப் படலாம்.

2006-ம் ஆண்டில், ஒரு ஏர் பஸ் விமான ஒரு போலி அவசரநிலையின் போது, 853 பயணிகள் மற்றும் பணியாளர்களை சூப்பர்ஜம்போ ஏர்பஸ் A380 வெறும் 78 வினாடிகளில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என்பதை நிரூபித்தது, இது ஒரு அற்புதமான சாதனை.

விமானத்தில் அவசர கதவுகள் எங்கே அமைந்திருக்கின்றன?

வணிக ஜெட் விமானங்களில், கதவுகள் பொதுவாக விமானத்தின் இறக்கைகளுக்கு மேலே அமைந்துள்ளன, பயணிகள் அணுகலாம். அவசர கதவுகள் விமானத்தின் வழக்கமான முன் மற்றும் பின் கதவுகளிலிருந்து தனித்தனியாக இருக்கும்.

அவசரகால கதவுகளுக்கு அருகில் உட்கார பயப்பட வேண்டுமா?

பயப்படத் தேவையில்லை. உண்மையில், அவசரகால கதவுகளுக்கு அடுத்த இருக்கைகள் கால் வைப்பதற்கு அதிக இடைவெளியைக் கொண்டுள்ளன. எனவே, அவை மிகவும் வசதியாக இருக்கும். இருப்பினும், விமானப் பயணி ஒருபோதும் கதவைத் திறக்க முயற்சி செய்யக் கூடாது. அவசர கால கதவரைத் திறப்பது என்பது விமானப் பாதுகாப்பைப் பாதிக்கிறது. இது ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாகும். மேலும், நீங்கள் நடவடிக்கைக்கு ஆளாவீர்கள்.

இந்த அவசர காலக் கதவுகளுக்கு அடுத்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு அவசரகாலத்தில் அவற்றை எவ்வாறு திறப்பது என்பது குறித்து கேபின் குழுவின் உறுப்பினர் எப்போதும் தனித்தனியாகவும் நேரடியாகவும் விளக்குகிறார். அவசர காலக் கதவுகளுக்கு அடுத்த இருக்கைகள் காலியாக இருந்தால், கேபின் குழு உறுப்பினர்கள் பொதுவாக தன்னார்வலர்களைத் தேடுவார்கள். அவசர காலக் கதவைத் திறப்பதில் சிரமப்படும் அளவுக்கு உள்ள ஒரு குழந்தை அல்லது வயதான பயணியை பொதுவாக அதன் அருகில் உட்காருவதை ஊக்கப்படுத்துவதில்லை.

ஒரு பயணி விமானம் தரையில் இருக்கும்போது அவசரகால கதவைத் திறக்க முடியுமா?

சென்னை சம்பவம் கூறுவது போல, விமானம் தரையில் இருக்கும் போது ஒரு பயணியால் அவசரக் கதவைத் திறப்பது உண்மையில் சாத்தியம்தான். உலகெங்கிலும் ஒரு பயணி அவ்வாறு செய்த பல நிகழ்வுகள் உள்ளன - சிலர் விமானத்தின் இறக்கைகளில் நடந்து சென்றுள்ளனர். பின்னர் சட்ட அமலாக்கத்திடம் கேபின் அடைத்துவிட்டது. அதனால், அவர்கள் கொஞ்சம் சுத்தமான காற்று வேண்டும் என நடந்து சென்றதாக கூறியுள்ளனர்.

இருப்பினும், அவசர காலத்தில் அவ்வாறு செய்ய குழு உறுப்பினர்களால் அனுமதிக்கப்பட்டால் தவிர, அவசர காலக் கதவைத் திறப்பது ஒரு மீறல் ஆகும்.

ஒரு பயணி நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முடியுமா?

நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது விமானத்தின் கதவை திறக்க முடியுமா என்றால், அது சினிமாவில் மட்டுமே நடக்கும். உண்மையில், நடுவானில் விமானம் பறக்கும்போது, பயணிகளோ அல்லது பணியாளர்களோ கதவைத் திறக்க இயலாது. ஏனென்றால், அழுத்தப்பட்ட கேபினில் கதவுக்கு எதிராகத் தள்ளும் மிகப்பெரிய காற்றழுத்தத்தை சமாளிக்க மனிதர்களுக்கு வலிமை இல்லை. பயண உயரத்தில், வெளிப்புறக் காற்று மெல்லியதாகவும், குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டிருக்கும் இடத்திலும், விமான அறைகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,000 அடி உயரத்தில் இருக்கும் சூழ்நிலைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சாதாரணமாக சுவாசிக்க முடியும்.

விமானி பேட்ரிக் ஸ்மித், ‘காக்பிட் கான்ஃபிடன்ஷியல்’ ஆசிரியரும், பிரபல விமானப் போக்குவரத்து இணையதளமான AskThePilot.com-ஐ உருவாக்கியவருமான பேட்ரிக் ஸ்மித்தின் கருத்துப்படி, “ஒரு வழக்கமான பயண உயரத்தில், ஒவ்வொரு சதுர அங்குல விமானத்தின் உள்புறப் பகுதிக்கு எதிராக எட்டு பவுண்டுகள் வரை அழுத்தம் செலுத்துகிறது. இது ஒவ்வொரு சதுர அடி கதவுக்கும் எதிராக 1,100 பவுண்டுகள் ஆகும். குறைந்த உயரத்தில் கூட, கேபின் அழுத்த அளவுகள் மிகக் குறைவாக இருந்தாலும், ஒரு அற்பமான 2 psi வேறுபாடு இன்னும் யாராலும் இடமாற்றம் செய்ய முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது… கதவுகள் தொடர்ச்சியான மின் தாழ்ப்பாள்களால் அல்லது இயந்திரத் தாழ்ப்பாள்களால் மேலும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விமானத்தின் கதவு ‘ஆர்மெட்’ ஆக இருந்தால், அது அவசரகால கதவு பயன்படுத்த தயாராக உள்ளது. ஒரு கதவு ‘டிஸ் ஆர்மெட்’ ஆக இருந்தால், அந்த கதவு மூடப்பட்டது என்று அர்த்தம்.

“ஒரு விமானம் வாயிலை நெருங்கும் போது, சில நேரங்களில் கேபின் குழுவினர் 'டோர் டு மேனுவல்' அல்லது டிஸ்ஆர்ம் டோர்ஸ்' என்று அழைப்பதை நீங்கள் கேட்கலாம். இது கதவுகளின் தானியங்கி செயல்பாட்டை மீறுவதுடன் தொடர்புடையது. அந்த கதவுகள் ஒரு நபரைக் கொல்ல போதுமான சக்தியுடன் விரிவடையும். மேலும், அவர்கள் அந்த ஜெட் பிரிட்ஜில் அல்லது கேட்டரிங் டிரக்கிற்குள் செல்வதை நீங்கள் விரும்பக்கூடாது” என்று ஸ்மித் எழுதுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu India Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment