Advertisment

அரசு தெலங்கானா எம்.எல்.ஏ சென்னமனேனி ரமேஷ் குடியுரிமையை பறித்தது ஏன்?

வட தெலங்கானாவில் உள்ள வெமுலவாடா தொகுதியின் டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ. சென்னமனேனின் ரமேஷின் குடியுரிமையை உள்துறை அமைச்சகம் புதன்கிழமை ரத்து செய்தது. சுதந்திர போராட்ட பெற்றோருக்கு மகனான ரமேஷ் கடந்த காலங்களில் இருந்து ஜெர்மனியின் குடிமகனாக இருந்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennamaneni ramesh, hennamaneni ramesh citizenship cancelled, chennamaneni ramesh citizenship, தெலங்கானா எம்.எல்.ஏ குடியுரிமை ரத்து, சென்னமனேனி ரமேஷ் எம்.எல்.ஏ குடியுரிமை ரத்து, chennamaneni ramesh telangana mla, chennamaneni ramesh citizenship revoked, who is chennamaneni ramesh, trs mla citizenship, Tamil indian express

chennamaneni ramesh, hennamaneni ramesh citizenship cancelled, chennamaneni ramesh citizenship, தெலங்கானா எம்.எல்.ஏ குடியுரிமை ரத்து, சென்னமனேனி ரமேஷ் எம்.எல்.ஏ குடியுரிமை ரத்து, chennamaneni ramesh telangana mla, chennamaneni ramesh citizenship revoked, who is chennamaneni ramesh, trs mla citizenship, Tamil indian express

தீப்திமான் திவாரி, சீனிவாஸ் ஜன்யாலா,

Advertisment

வட தெலங்கானாவில் உள்ள வெமுலவாடா தொகுதியின் டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ. சென்னமனேனின் ரமேஷின் குடியுரிமையை உள்துறை அமைச்சகம் புதன்கிழமை ரத்து செய்தது. சுதந்திர போராட்ட பெற்றோருக்கு மகனான ரமேஷ் கடந்த காலங்களில் இருந்து ஜெர்மனியின் குடிமகனாக இருந்து வருகிறார். மேலும், அவர் 2009 இல் இந்திய குடியுரிமையையும் பெற்றார். அப்பொழுதிலிருந்து, அவர் அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். அவர் 2009 இல் தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், தெலங்கானா கிளர்ச்சியின் உச்சத்தில் 2010 இல் டி.ஆர்.எஸ் கட்சிக்கு சென்றார்.

2008 ஆம் ஆண்டில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த நேரத்தில் உண்மைகளை தவறாக சித்தரித்ததன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் அவரது குடியுரிமையை ரத்து செய்துள்ளது.

உள்துறை அமைச்சகம் நடவடிக்கை ஏன்?

1993 முதல் ஜெர்மனியில் வசித்து வந்த ரமேஷ், மார்ச் 31, 2008 அன்று இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். பிப்ரவரி 4, 2009 அன்று அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. ஜூன் 15, 2009 அன்று, கரீம்நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஆதி சீனிவாஸ் ரமேஷுக்கு குடியுரிமை வழங்குவதில் ஆட்சேபனை எழுப்பி ஒரு சரிப்பார்ப்பு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். ரமேஷ் தனது ஜெர்மன் குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டதாகவும், இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய ஆண்டு அவர் ஜெர்மனிக்குச் சென்றதாகவும், இது குடியுரிமைச் சட்டம் 1955 -ஐ மீறியது என்றும் சீனிவாஸ் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சரகம் ஒரு குழுவை அமைத்தது. இது ரமேஷ் உண்மையில் மோசடி செய்து குடியுரிமையைப் பெற்றுள்ளார் என்று மார்ச் 2017 இல் தனது அறிக்கையில் சமர்ப்பித்தது. உள்துறை அமைச்சகம் அதற்கு முன் இந்த விவகாரத்தை ஒன்பது ஆண்டுகள் விசாரித்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ரமேஷின் குடியுரிமையை மத்திய உள்துரை அமைச்சகம் ரத்து செய்தது.

ரமேஷ் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அது டிசம்பர் மாதம் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றம் அவருக்கு 2019 ஜூலையில் நிவாரணம் வழங்கியதுடன், உள்துறை அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொன்னது.

உள்துறை அமைச்சகம் நவம்பர் 20 ஆம் தேதி ரமேஷுக்கு வழங்கப்பட்ட ஒரு உத்தரவில், ரமேஷ் மார்ச் 31, 2008 அன்று தாக்கல் செய்த குடியுரிமைக்கான விண்ணப்பத்தில், விண்ணப்பித்த தேதிக்கு 12 மாதங்களுக்கு முன்னர் அவர் இந்தியாவில் வசிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் ஜெர்மனிக்கு பலமுறை பயணம் மேற்கொண்டார். இது, குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் அதன் கீழ் உள்ள விதிகளை மீறுவதாக உள்ளது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நவம்பர் 2008 இல் ரமேஷிடம் அவருடைய வெளிநாட்டு பயணம் குறித்து விளக்கம் கோரப்பட்டபோது, அவர் தான் வெளிநாடுகளுக்கு எந்த பயணத்தையும் செய்யவில்லை என தொடர்ந்து கூறிவந்தார் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

“அவர் இவ்வாறு, மோசடி, தவறான பிரதிநிதித்துவம், உண்மைகளை மறைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் பிரிவு 5 (1) (எஃப்) இன் கீழ் குடியுரிமையைப் பதிவுசெய்தார். மேலும், அவரது நடவடிக்கை சட்டத்தின் 10 (2) பிரிவின் விதிகளுக்கு உள்ளாகிறது. அது அவரது இந்திய குடியுரிமையை இழக்கச் செய்கிறது”என்று உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிரிவு 5(1)(எஃப்) மற்றும் 10(2) என்ன கூறுகிறது?

இந்த பிரிவுகள் குடியுரிமை வழங்குவதையும், அதை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் அதிகாரத்தையும் கையாளுகின்றன. பிரிவு 5 (1) (எஃப்) இன் படி, “… குடியுரிமை சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு விண்ணப்பத்தின் பேரில், மத்திய அரசு எந்தவொரு நபரையும் இந்திய குடிமகனாக பதிவு செய்யலாம்… விண்ணப்பித்தவர் 18 வயதை முழுமையாக பூர்த்தியடைந்திருக்க வேண்டும். முழுமையான மன நலத்துடன் இருக்க வேண்டும். அவரது பெற்றோர்களில் ஒருவர், முன்னர் சுதந்திர இந்தியாவின் குடிமகனாக இருந்திருக்க வேண்டும் அல்லது அவர் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பு இந்தியாவில் தொடர்ந்து ஒரு ஆண்டு வசித்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிவு 10 (2): “மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது எந்தவொரு பொருளின் உண்மையையும் மறைத்தல் மூலம் பதிவு அல்லது சான்றிதழ் பெறப்பட்டதாக உறுதியானால் இந்த பிரிவின் விதிகளுக்கு உட்பட்டு, மத்திய அரசு எந்தவொரு இந்திய குடிமக்களின் குடியுரிமையையும் பறிக்கலாம்.” என்று கூறுகிறது.

இருப்பினும், குடியுரிமை தன்னிச்சையாக ரத்து செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் 10 (3) பிரிவு கூறுகிறது, “அந்த நபர் தொடர்ந்து இந்திய குடிமகனாக இருப்பது பொது நன்மைக்கு உகந்ததல்ல என்று கருதினால் அன்றி, அதுவரை இந்த பிரிவின் கீழ் ஒரு நபரின் குடியுரிமையை மத்திய அரசு பறிக்காது”

ரமேஷ் தரப்பு வாதம்

விண்ணப்பிக்கும் நேரத்தில், விண்ணப்பிக்கும் தேதிக்கு 12 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பாகக் கோரவில்லை என்ற அடிப்படையில் ரமேஷ் குற்றமற்றவர். இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னர் அவர் ஒரு ஜெர்மன் குடிமகனாக இருந்ததால், ஜெர்மனிக்கு அந்நிய நாட்டுக்கு செல்வதாக அவர் கருத்தில் கொள்ளவில்லை என்றும் எனவே அவர் வெளிநாடுகளுக்கு எந்த பயணமும் செய்யவில்லை என்றும் கூறினார்.

சீனிவாஸின் சரிப்பார்ப்பு மனு காலம் கடந்தது என்றும் அவர் வாதிட்டார். 30 நாட்களுக்குள் ஆட்சேபனை எழுப்பப்பட வேண்டும் என்று சட்டம் கோருகிறது. மேலும், அந்தக் காலத்தைத் தாண்டி அரசாங்கம் அதை அனுமதித்தால், மனுதாரர் சரியான நேரத்தில் விண்ணப்பம் செய்வதைத் தடுத்தார் என்று கருதியிருக்க வேண்டும்.

“டாக்டர் ரமேஷ் சென்னமனேனி தற்போது எம்.எல்.ஏ.வாகா இருக்கிறார். அவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. எனவே குடியுரிமை சட்டத்தின் பிரிவு 10 (3) அவர் மீது நடவடிக்கை எடுக்க திருப்தியில்லை. அவர் தனது தொகுதி மக்களால் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் செயல்திறன் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளால் திருப்தி அடைந்திருக்கிறார்கள். அவர் பயங்கரவாதம், உளவு, அமைப்பாக்கப்பட்ட கடுமையான குற்றம், போர்க்குற்றம் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகியவற்றில் ஈடுபடவில்லை. மாறாக, அவர் நிறைய பொது நன்மைகளைச் செய்து வருகிறார்.” என்று ரமேஷ் அமைச்சகத்துக்கு பதில் அளித்துள்ளார்.

ரமேஷ் தனது ஜெர்மனி பயணம் குறித்த தகவல்களை நிறுத்தி வைத்திருப்பதாக உயர் நீதிமன்றம்கூட ஒப்புக் கொண்டதாகவும், அது தனக்கு ஒரு அந்நிய நாடு அல்ல என்று அவர் உணர்ந்தால், அவர் அதை அமைச்சகத்திற்கு குறிப்பிட்டு அதிகாரிகள் முடிவு செய்யட்டும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“ஒரு பொது பிரதிநிதியாக, டாக்டர் ரமேஷ் சென்னமனேனி தனது சமர்ப்பிப்புகளில் நியாயமாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு அதிக பொறுப்பு உள்ளது. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு அவரது நடத்தை ஒரு முன்மாதிரியாக இருக்கும். ... ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’என்பது நன்கு அறியப்பட்ட சட்டமாகும்.”

உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி, “குற்றவியல் குற்றச்சாட்டு இல்லாததால், தவறாக சித்தரிக்க விரும்பும் நபர் நல்லது செய்வார் என்று அர்த்தமல்ல. உண்மையில், பொது பிரதிநிதிகளுக்கு ஒரு மிகப் பெரிய செயல்பாடு உள்ளது, இதுபோன்ற சத்தியத்தின் செல்வம் பொது நன்மைக்கு தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும்.”

இது ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தாத வகையில் முடிவெடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.

ரமேஷுக்கு இருக்கும் வாய்ப்புகள்

ரமேஷ் மீண்டும் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று இந்த முடிவை எதிர்க்கலாம். அதன்பிறகு, அவர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம். இருப்பினும் உள்துறை அமைச்சகத்தின் முடிவில்லி தடையுத்தரவு வழங்கப்படாவிட்டால் அவர் தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழப்பது உறுதி. ஒருவேளை அவர் நீதிமன்றத்தில் இருந்து தடையுத்தரவு நிவாரணம் பெறாவிட்டால், அவர் மீண்டும் முழு செயல்முறையையும் கடைபிடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார். அதைத் தொடர்ந்து அவர் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வாராயின் அவருக்கு குடியுரிமை வழங்குவது அரசாங்கத்தின் விருப்பப்படி இருக்கும்.

Telangana Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment