Advertisment

கட்சித்தாவல் தடை சட்டம் ஏன் உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுப்பதில் தோல்வி அடைந்தது?

எம்.எல்.ஏக்கள் தங்களின் கட்சி விசுவாசத்தில் இருந்து மாறுவதை தடுக்கவும், போட்டி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியால் வாங்கப்படுவதை தடுக்கவும் எம்.எல்.ஏக்கள் ரெசார்ட்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். சமீபத்திய உதாரணங்களாக ராஜஸ்தான் (2020), மகாராஷ்ட்ரா (2019), கர்நாடகா (2019, 2018) மற்றும் தமிழ்நாடு (2017) ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anti-defection law,

Chakshu Roy

Advertisment

anti-defection law : பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முகுல் ராய் மற்றும் இரண்டு இதர பாஜக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி சட்டமன்ற சபாநாயகரிடம் மனு அளித்தார். கல்கத்தா உயர் நீதிமன்றம், வருகின்ற வியாழக்கிழமைக்குள் (அக்டோபர் 7) இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் பீமன் பானர்ஜீக்கு உத்தரவிட்டுள்ளது. முகுல் ராய் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுவேந்து அதிகாரி அளித்த மனுக்கள் அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணையின் கீழ் உள்ளது.

Anti-defection law

கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பிற மாநிலங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜார்கண்டில் முன்னாள் முதல்வர் பாபுல் மராண்டி, அவருடைய கட்சியான ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை (ப்ரஜதந்திரிக்) பாஜகவுடன் இணைத்ததற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானில் 6 பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்ததற்கு எதிராக பி.எஸ்.பி. வழக்கு பதிவு செய்துள்ளது. சமீபத்தில் இந்த இணைப்பிற்கான காரணத்தை விளக்க இறுதி வாய்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கியது.

நாடாளுமன்ற கீழ் அவையில் இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிசிர் அதிகாரி (சுவேந்து அதிகாரியின் தந்தை) உள்ளிட்ட இருவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த தலைவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.

கட்சித் தாவல் தடை சட்டம் என்றால் என்ன? அதன் நோக்கம் எத்தகையது?

தனிப்பட்ட வகையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தண்டிக்கிறது இந்த சட்டம். ஆனால் குழுவாக ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணையும் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி அளிக்கிறது. கட்சி மாறிய தலைவர்களை ஏற்றுக் கொள்ளும் கட்சிக்கும் இந்த சட்டம் எந்தவிதமான தண்டனையையும் வழங்குவதில்லை. நாடாளுமன்றம், இந்த சட்டப்பிரிவை 1985ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணையின் கீழ் இணைத்தது. அதன் நோக்கம், உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுத்து ஆட்சியின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதாக அமைந்தது. 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பல மாநில அரசுகள் எம்.எல்.ஏக்களால் கவிழ்க்கப்பட்டதன் விளைவாக இது உருவாக்கப்பட்டது.

கட்சி தாவல் என்றால் என்ன? அதனை தீர்மானிக்கும் நபர் யார்?

மூன்று வகையான சாத்தியங்கள் இந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒன்று, ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு அந்த கட்சியில் இருந்து விலகுவது அல்லது கட்சியின் விருப்பத்தற்கு மாறாக சட்டமன்றத்தில் வாக்களிப்பது. ட்டமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு மற்றும் நடத்தை அக்கட்சியின் பொறுப்பில் இருந்து அவரை விலக்குவதற்கு காரணமாக அமையும்.

இரண்டாவது சாத்தியம், ஒருவர் சுயேச்சையாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு மற்றொரு கட்சியில் இணைவது. மூன்றாவது சாத்தியம், நியமன சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பானது. இது போன்ற சூழலில், அந்த உறுப்பினர் 6 மாதத்திற்குள் ஒரு கட்சிக்குள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று சாத்தியங்களில் கட்சி தாவல் சட்டத்தை மீறும் பட்சத்தில் உறுப்பினர் தண்டிக்கப்படலாம். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரிகள் (சபாநாயகர், தலைவர்) இது போன்ற வழக்குகளில் தீர்மானிக்கும் அதிகாரிகள். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் முடிவுகளை உயர் நீதிமன்றத்தின் முன் சவால் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

விலகல் வழக்குகளைத் தீர்மானிக்க எவ்வளவு காலம் ஆகும்?

குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்ற கால வரம்பை இந்த சட்டம் கொண்டிருக்கவில்லை. ஆட்சி காலம் முடியும் வரை கட்சி மாறிய எம்.எல்.ஏ மீதான நடவடிக்கை தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் சபாநாயகர் முன் நிலுவையில் இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக மாறிய பிறகு அவர்கள் மீதான கட்சி தாவல் தடை நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாமல் கிடப்பில் இருந்த உதாரணங்களும் உள்ளன. கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் சபாநாயகர், அமைச்சர் மீதான கட்சித் தாவல் வழக்கை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைத்திருந்த காரணத்திற்காக பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது. மூன்று மாதங்களுக்குள் இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

கட்சிகளின் விலகலுக்கு எதிரான சட்டம் அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளதா?

கட்சிகளின் விலகலுக்கு எதிரான சட்டம் அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளதா என்றால் இல்லை தான். எம்.எல்.ஏக்கள் தங்களின் கட்சி விசுவாசத்தில் இருந்து மாறுவதை தடுக்கவும், போட்டி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியால் வாங்கப்படுவதை தடுக்கவும் எம்.எல்.ஏக்கள் ரெசார்ட்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். சமீபத்திய உதாரணங்களாக ராஜஸ்தான் (2020), மகாராஷ்ட்ரா (2019), கர்நாடகா (2019, 2018) மற்றும் தமிழ்நாடு (2017) ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. 2019ம் ஆண்டு கோவாவில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 10 எம்.எல்.ஏக்கள் தங்களின் சட்டமன்ற கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டனர். ராஜஸ்தானில் அதே ஆண்டில் 6 எம்.எல்.ஏக்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சிக்கிமில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் 15 எம்.எல்.ஏக்களில் 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்த சட்டத்தை மேம்படுத்த ஏதாவது ஆலோசனைகள் வழங்கப்பட்டதா?

சில அரசியல் ஆர்வலர்கள், இந்த சட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறி அதனை நீக்க பரிந்துரை செய்தனர். முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுகளை காப்பாற்றவே இது பொருந்தும் என்று கூறினார். தேர்தல் ஆணையம் இது போன்ற விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. பலரும் இந்த விவாரங்களில் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் இந்த மனுக்களை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள். கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சுதந்திரமான தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறியது.

Chakshu Roy is Head of Outreach, PRS Legislative Research

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment