Advertisment

சமூக ஊடக புதிய விதிமுறைகள்: ஆதரவும் எதிர்ப்பும்!

Central Government New Social Media Rules : பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து கடினமான முடுவுகளை பொது நலன் மற்றும் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்கள் எடுப்பது தான் சிறந்தது

author-image
WebDesk
New Update
சமூக ஊடக புதிய விதிமுறைகள்: ஆதரவும் எதிர்ப்பும்!

கடந்த வியாழக்கிழமை, சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மற்றும் OTT உள்ளடக்க வழங்குநர்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட நெறிமுறைகளை வெளியிட்டது.  இதன் மூலம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் இடைமுகங்களாக செயல்படும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பாதுக்காப்பு அம்சங்கள்  தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisment

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்துடன்  ஏற்பட்ட சமீபத்திய விரக்தியால் தூண்டப்பட்டதா (அ) உலகளாவிய போக்கின் ஒரு பகுதியா? என்பதை தாண்டி.... எது நியாயமான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பதை யார் தீர்மானிப்பார்கள் அரசா (அ) பெரும் தொழிநுட்ப நிறுவனங்களா? என்ற கேள்வி முக்கியதத்துவம் பெருகிறது.

இருதரப்ப்பில் உள்ள  வாதங்களை சக்ரவர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் விவாதிக்கிறார்.  இவர், டஃப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார்.

Explained: The arguments for and against the new social media rules

முதல்வாதம்: வெறுப்பு பேச்சுகளை அகற்றுவதால் பெரு நிறுவனங்கள் வணிக ரீதியாக பயனடையப் போவதில்லை என்ற அனுமாத்தின் கீழ் அரசின் இந்த தலையீட்டை நியாயப்படுத்த முடியும்.

இருப்பினும், மோசமான உள்ளடக்கங்களை அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்களை நிருவனங்கள் அறிந்து தான் செயல்படுகின்றன என தொழில்நுட்ப ஆதரவாளர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இரண்டாவது வாதம்: மக்கள் ஜனநாயகத்தில், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆகவே, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து கடினமான முடுவுகளை பொது நலன் மற்றும் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்கள் எடுப்பது தான் சிறந்தது  என்று கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஆனால், நடைமுறையில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், தங்களை அனைத்து மக்களுக்குமான பொதுவான பிரதிநிதிகளாக கருதுவதில்லை என்ற எதிர் கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.

யார் உண்மையில் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்கள்? என்ற கேள்வி முக்கியத்துவம் பெற வில்லை என்பதை ஒத்துக் கொள்வது மூன்றாவது கண்ணோட்டமாக உள்ளது.

இறையாண்மை பொருந்திய அரசுக்கும், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த  போராட்டத்தின் முடிவுகள், இரு தரப்புக்கும் உள்ள பேரம் பேசும் சக்தியால் மட்டுமே  தீர்மானிக்கப்படும்.

சர்வ வல்லமை பொருந்திய அரசு, தங்கள் எல்லை பகுதிகளுக்குள் சமூக தளங்களையும் நீக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், சில தளங்கள் தற்போது கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருக்கிறது. பயனர்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடம்.

" உலகளாவிய இராஜதந்திரத்தின் ஒரு புதிய சகாப்தத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை என்னால் உணர முடிகிறது. மற்ற நாடுகளை கைப்பற்றுவது, ரத்தம் சிந்துவது என்ற அடிப்படை சொல்லாடல் இங்கு இல்லை என்று ஆசிரியர் தெரிவிக்கிறார்.

மேலும், புவிசார் அரசியல் வளையத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாராகிவிட்டன. புவிசார் அரசியல் சிக்கல்களை தீர்ப்பதற்கும், புது சிக்கல்களை உருவாக்குவதற்கும்   தேவையான பரிமாணங்களை பெறத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் போன்ற காரணங்களால் டிக்டாக் செயலியை  இந்திய அரசால் தடை செய்ய முடியும்.  ஆனால், ட்விட்டர் வலைத்தளத்தை ரத்து செய்தால், பிரதமர் நரேந்திர மோடியை தன்னை பின்தொடரும் 66 மில்லியன் பயனர்களை உடனடியாக இழந்துவிடுவார். இந்த அடிப்பை ட்விட்டருக்கும் தெரியும், அரசாங்கத்திற்கும்  தெரியும், ”என்றும் தெரிவிக்கிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment