Advertisment

கோவிட் -19 சோதனையில் சி.டி மதிப்பு என்றால் என்ன?

The CT value in a covid test Tamil News சி.டி மதிப்பு 35-க்கும் குறைவான அனைத்து நோயாளிகளும் பாசிட்டிவாக கருதப்படலாம்.

author-image
WebDesk
New Update
The CT value in a covid test Tamil News

The CT value in a covid test Tamil News

The CT value in a Covid test Tamil News : கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஒரு நோயாளி பாசிட்டிவாக இருக்கிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் ஒன்று ‘சி.டி மதிப்பு’.

Advertisment

அண்மையில், மகாராஷ்டிரா அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐ.சி.எம்.ஆர்) அனுப்பிய வேண்டுகோளுக்கு இது உட்பட்டது. சி.டி மதிப்பு 24-ஐ விட அதிகமாக இருந்தால், அந்த நபர் அறிகுறியற்றவராக இருந்தால், அந்த நபரை கோவிட்-19-க்கு எதிர்மறையாகக் கருத அறிவுறுத்தலாமா என்று அரசு தெளிவுபடுத்தியது. பல்வேறு ஐ.சி.எம்.ஆர் ஆவணங்கள் வெவ்வேறு சி.டி மதிப்புகளைக் குறிப்பிட்டுள்ளதாகவும், நிதி ஆயோக் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் கூட மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகவும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு, ஐ.சி.எம்.ஆர் டி.ஜி மீண்டும் மாநில சுகாதார செயலாளருக்குக் கடிதம் ஒன்று எழுதினார். நாடு முழுவதும் உள்ள வைராலஜி ஆய்வகங்களிலிருந்து சி.டி மதிப்பு கட் ஆஃப்க்கு வருவதற்கு  ஐ.சி.எம்.ஆர் உள்ளீடுகளை எடுத்துள்ளது. சி.டி மதிப்பு 35-க்கும் குறைவான அனைத்து நோயாளிகளும் பாசிட்டிவாக கருதப்படலாம். அதே நேரத்தில் 35-க்கு மேல் சி.டி மதிப்பு உள்ளவர்கள் நெகட்டிவாக கருதப்படலாம் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்தது.

சிடி மதிப்பு என்றால் என்ன?

சி.டி என்பது ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் போது வெளிப்படும் ஒரு மதிப்பு. இது SARS-CoV-2 கொரோனா வைரஸைக் கண்டறிவதற்கான தங்கத் தரம். ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில், நோயாளியிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஸ்வாபிலிருந்து ஆர்.என்.ஏ எடுக்கப்படுகிறது. பின்னர் அது டி.என்.ஏவாக மாற்றப்படுகிறது. அதன் பின்னர் அது பெருக்கப்படுகிறது. பெருக்கம் என்பது மரபணுப் பொருளின் பல நகல்களை உருவாக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. அதாவது இந்த விஷயத்தில் அது டி.என்.ஏ. இது, வைரஸ் இருப்பதைக் கண்டறியும் சோதனையின் திறனை மேம்படுத்துகிறது. தொடர்ச்சியான சுழற்சிகள் மூலம் பெருக்கம் நடைபெறுகிறது. ஒரு நகல் இரண்டு ஆகிறது, இரண்டு நான்கு ஆகிறது மற்றும் பல சுழற்சிகளுக்குப் பிறகுதான், கண்டறியக்கூடிய அளவு வைரஸ் உருவாகிறது.

ஐ.சி.எம்.ஆர் ஆலோசனையின் படி, ஒரு ஆர்டி-பி.சி.ஆர் எதிர்வினையின் சி.டி மதிப்பு என்பது பி.சி.ஆர் தயாரிப்பின் ஃப்ளோரசன்ஸை பின்னணி சிக்னல் வைத்துக் கண்டறியக்கூடிய சுழற்சிகளின் எண்ணிக்கை. எளிமையாகச் சொல்வதானால், Ct மதிப்பு வைரஸைக் கண்டறியக்கூடிய சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

அது ஏன் முக்கியமானது?

இந்தச் சூழலில், ஐ.சி.எம்.ஆர் ஆலோசனை மற்றும் ஐ.சி.எம்.ஆருக்கு மகாராஷ்டிராவின் கடிதம் ஆகியவற்றைப் பார்ப்போம். ஐ.சி.எம்.ஆரின் கூற்றுப்படி, சி.டி மதிப்பு 35-க்குக் குறைவாக இருந்தால் ஒரு நோயாளி கோவிட்-பாசிட்டிவ் என்று கருதப்படுகிறார். வேறுவிதமாகக் கூறினால், 35 சுழற்சிகளுக்குப் பிறகு அல்லது அதற்கு முந்தைய வைரஸ் கண்டறியப்பட்டால், நோயாளி பாசிட்டிவாகக் கருதப்படுகிறார்.பெஞ்ச்மார்க் 24-ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்றால், மகாராஷ்டிராவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 25-34 வரம்பில் உள்ள சிடி மதிப்புகள், பாசிட்டிவாக கருதப்படாது என்று அர்த்தம். ஆகவே, 35 என்பது ஒரு பெஞ்ச்மார்க் என்றால், பெஞ்ச்மார்க் 24-ஐ விட அதிகமான நோயாளிகள் நேர்மறையானவர்களாகக் கருதப்படுவார்கள் என்று பொருள்.

சி.டி மதிப்பை, பரிமாற்ற ஆற்றலின் ஒரு நடவடிக்கையாக ஒருவர் நினைக்கலாம் என்று முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறினார். "எனவே இப்போது என் தொண்டை மற்றும் மூக்கில் அதிக வைரஸ் இருந்தால், நான் அதைச் சிறப்பாகப் பரப்புவேன்" என்று அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி பள்ளி உயிரியல் அறிவியல் இயக்குநரான டாக்டர் ஜமீல் கூறினார்.

ஐ.சி.எம்.ஆர் தொடக்கநிலை 35-ன் முக்கியத்துவம் என்ன?

உலகளவில், சோதனை சாதனங்களின் அந்தந்த உற்பத்தியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பொறுத்து, கோவிட் -19-க்கான சி.டி மதிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்-ஆஃப் 35 முதல் 40 வரை இருக்கும். ஆய்வக அனுபவங்கள் மற்றும் பல வைராலஜி ஆய்வகங்களிலிருந்து எடுக்கப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர், சி.டி மதிப்பு 35-ஐ அடைந்துள்ளது.

புதிய ஆலோசனை எதுவும் இல்லை. ஆனால் குறைந்த சுழற்சி அளவுருவைப் பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஐ.சி.எம்.ஆர் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு அறிவித்தது. ஏனெனில், பல தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை இழக்கவும் மற்றும் நோய் பரவுதலை அதிகரிக்கவும் செய்யும் என்று ஐ.சி.எம்.ஆரின் டி.ஜி டாக்டர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

சி.டி மதிப்புக்கும் நோயின் தீவிரத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

இல்லை. சி.டி மதிப்பு வைரஸ் சுமைகளுடன் நேர்மாறாக தொடர்புடையது என்றாலும், இது நோயின் தீவிரத்தை பாதிக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நோயாளி குறைந்த சி.டி மதிப்பைக் கொண்டிருக்கலாம். அதாவது அவருடைய வைரஸ் சுமை விரைவாகக் கண்டறியும் அளவுக்கு அதிகமாக இருக்கலாம். ஆனால், அறிகுறியில்லாமல் கூட இருக்கலாம்.

இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் மைக்ரோபயாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சி.டி மதிப்புகள் மற்றும் நோயின் தீவிரத்தன்மை அல்லது இறப்பு ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது. மேலும், நோயின் தீவிரத்தோடு ஒப்பிடும்போது அறிகுறிகள் தோன்றியதிலிருந்து சி.டி மதிப்புகளுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதாக அது கண்டறிந்தது.

சி.டி மதிப்பு தொண்டையில் உள்ள வைரஸ் சுமை பற்றியதுதான். நுரையீரலில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது என்று புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் தொற்று நோய்களுக்கான ஆலோசகர் டாக்டர் பரிக்ஷித் பிரயாக் கூறினார். "Ct மதிப்பு, தீவிரத்தோடு தொடர்புப்படுத்தாது. தொற்றுநோயுடன் மட்டுமே தொடர்புப்படுத்த முடியும். முதல் அறிக்கையில் நான் உண்மையில் Ct மதிப்பைப் பார்ப்பதில்லை. ஆனால், மருத்துவமனையில் நோயாளிகளைப் பின்தொடர்வதற்கு, நான் Ct மதிப்பைக் கருதுகிறேன். அப்போது நோயாளியை கோவிட் அல்லாத கட்டிடத்திற்கு மாற்றலாமா இல்லையா என்பதை என்னால் தீர்மானிக்க முடியும். தொற்றுநோய்க் கண்ணோட்டத்தில், இது தீவிரமான விஷயமல்ல”என்று டாக்டர் பிரயாக் கூறினார்.

அதிக சிடி மதிப்பு எப்போதும் குறைந்த வைரஸ் சுமை என்று அர்த்தமா?

இது வெளிப்படையான அனுமானமாக இருக்கும்போது, ​​சில நோயாளிகளுக்கு அதிக சி.டி மதிப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால் கோவிட் -19 நோய்த்தொற்றின் மிகச் சிறிய அளவைக் கொண்டிருக்கலாம் என்று சில வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை விளக்குவதில் பல காரணிகள் முக்கியம். மேலும், முடிவுகள் மாதிரி சேகரிப்பு முறை, தொற்றுநோயிலிருந்து சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு வரையிலான நேரத்தையும் சார்ந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், சி.டி மதிப்புகள் மாதிரி எவ்வாறு சேகரிக்கப்பட்டன என்பதைப் பொறுத்தது என ஒரு ஐ.சி.எம்.ஆர் ஆலோசகர் குறிப்பிட்டார். மோசமாக சேகரிக்கப்பட்ட மாதிரி பொருத்தமற்ற Ct மதிப்புகளைப் பிரதிபலிக்கும். தவிர, Ct மதிப்புகள் சோதனையைச் செய்யும் நபரின் தொழில்நுட்பத் திறன், உபகரணங்களின் அளவுத்திருத்தம் மற்றும் உரைபெயர்ப்பாளர்களின் பகுப்பாய்வு திறன் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன.

மீண்டும், Ct மதிப்புகள் ஒரே நபரிடமிருந்து சேகரிக்கப்பட்ட நாசி மற்றும் oropharyngeal மாதிரிகளுக்கு இடையில் வேறுபடலாம். போக்குவரத்தின் வெப்பநிலை, அத்துடன் ஆய்வகத்தில் சேகரிப்பிலிருந்து ரசீது வரை எடுக்கப்பட்ட நேரம் ஆகியவை Ct மதிப்புகளை மோசமாக பாதிக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment