Advertisment

ராஜபக்‌ஷே: இலங்கையின் குடும்ப அரசியல் ஒரு பார்வை

2010-15 காலகட்டத்தில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்‌ஷே. அப்போது அமைச்சரவை இல்லாமல், 40க்கும் மேற்பட்ட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அரசு பதவிகளில் பொறுப்பேற்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Rajapaksa clan in Sri Lanka politics

Nirupama Subramanian 

Advertisment

இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் ராஜபக்ஷே குடும்பத்தினர் அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹம்பந்தோட்டாவை சேர்ந்தவர்கள். கோத்தபாய, சமல் மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர் அக்குடும்பத்தில் இருந்து வரும் மூன்றாம் தலைமுறை வாரிசுகள். சமல் மற்றும் மகிந்தவின் மகன்கள் முறையே சசிந்திரா மற்றும் யோசிதா, நமல் ஆகியோர் நான்காம் தலைமுறை அரசியல் வாரிசுகளாக களம் இறங்கியுள்ளனர்.

தெற்காசியாவில் இதுபோன்ற வாரிசு அரசியல் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. 2010-15 காலகட்டத்தில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்‌ஷே. அப்போது அமைச்சரவை இல்லாமல், 40க்கும் மேற்பட்ட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அரசு பதவிகளில் பொறுப்பேற்றனர். மகிந்த ராஜபக்ஷேவின் அரசு முடிவுக்கு வந்த பின்பு அவர்களில் பலரும் மோசடி விசாரணைகளை எதிர்கொண்டனர். அமெரிக்க குடியுரிமை பெற்ற பஸ்ஸில் கைதுசெய்யப்பட்டு அவரது மனைவி மற்றும் மூத்த மகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்க்ஷேவின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றனர். இதர குடும்ப உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் அதிபரின் செயலகத்தில் பணியாற்றினார்கள் ஒருவர் தற்போது இலங்கை தூதராக லாஸ் ஏஞ்சல்ஸில் பணியாற்றிவருகிறார்.

publive-image

ஆரம்பம்

1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் இரண்டு ராஜபக்‌ஷேவினர் இடம் பெற்றனர். அவர்களில் ஒருவர் தற்போதைய அதிபர் மற்றும் பிரதமரின் தந்தை ஆவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SFLP) ஸ்தாபக உறுப்பினரான டொன் அல்வின் ராஜபக்ச இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்போது கட்சி கொழும்பின் புறநகர்ப் பகுதியில் இருந்த வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த SWRD பண்டாரநாயக்கே கையில் இருந்தது. அவர் 1959ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை நெருக்கடி; பெரும்பான்மை இல்லாததால் அதிபர், பிரதமர் பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

மகிந்த மற்றும் கோத்தபாய

1994 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சந்திரிகா குமாரதுங்க பெற்றபோது, ​​மஹிந்த ராஜபக்‌ஷே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவர் குமாரதுங்கவின் தலைமைக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்கவில்லை. சந்திரிகா இரண்டு முறை அதிபராக இருந்த போது மகிந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவருடைய மூத்த சகோதரர் சமல் மற்றும் உறவினார் நிருபாமா உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்கள் பலரும் அரசியலில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.

2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மகிந்தராஜபக்‌ஷே. குமாரதுங்க அரசியலிலிருந்து விலகிய பிறகு இது நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த கோத்தபாயவின் தலைமையில் விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாக தோற்கடிக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தார் மகிந்தராஜபக்‌ஷே.

2009ம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, காணாமல் போன பிறகு ராஜபக்‌ஷேக்களுக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. சகோதரர்களின் தலைமையில், சிங்கள-பௌத்த பேரினவாத நாடான இலங்கை இராணுவமயமாக்கலில் இறங்கியது. இவர்கள் இருவரும் குடும்ப உறுப்பினர்கள் பலரை பல்வேறு பணியிடங்களில் அமர்த்தினார்கள். பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது சண்டேலீடர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்ட பிறகு ஊடகவியலாளர்கள் உயிருக்கு அஞ்சத் துவங்கினார்கள்.

இந்த சமயத்தில் தான் ராஜபக்‌ஷே சீனாவுடனான உறவை ஆழமாக எடுத்துக் கொண்டார். பெய்ஜிங் சிறிமாவோ காலத்தில் இருந்தே ஒரு பெரிய உள்கட்டமைப்பு முயற்சிக்காக இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

புச்சா படுகொலை: ரஷ்யாவை எதிர்க்க துணிந்த இந்தியா.. ஐ.நா.,வில் பேசியது என்ன?

2011ம் ஆண்டு ஹம்பாந்தோட்டா துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அதிவேக நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டது. 2014ம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் ஒரு நீர்மூழ்கி கப்பலை சீன நிறுத்த அது டெல்லிக்கு முதல் எச்சரிக்கை மணியாக ஒலித்தது.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இந்தியாவின் வற்புறுத்தலுக்கு கொழும்புவில் சிறிய வரவேற்பு கிடைத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இருந்த காரணத்தால் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. 2015ம் ஆண்டு தேர்தலில் மகிந்த தோல்வி அடைந்த போது இந்திய ரா அமைப்பு மீது குற்றம் சுமத்தினார். ஆனால் பிரதமராகும் முயற்சியும் அப்போது தோல்வியை தழுவியது.

அரசியலில் மறுபிரவேசம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் களம் காண துவங்கினார். மஹிந்த வருகைக்கு அஞ்சிய முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவிநீக்கம் செய்து மஹிந்தவை பிரதமராக நியமித்தார். ஆனாலும் அந்த ஏற்பாடு அதிக காலம் நீடிக்கவில்லை. மீண்டும் விக்கிரமசிங்கவே ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்படி அமைந்தது. சில மாதங்கள் கழித்து விக்ரமசிங்கே தன்னுடைய பதவியிலிருந்து விலகினார்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்‌ஷேவின் அரசாங்கம் நெருக்கடியின் தீவிரத்தை கண்காணிக்க தவறி விட்டது. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் தற்போது தங்கள் அரசியல் வாழ்வின் நிலையை குறித்து யோசித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment