Advertisment

Explained : ToTok செயலி எமிரேட்ஸ் அரசின் உளவு கருவியாகவும் இருக்கலாம்

ToTok செயலி மக்களை உளவு பார்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான சீன நிறுவனத்தின் TikTok செயலியின் பெயரையும் ஒத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained : ToTok செயலி எமிரேட்ஸ் அரசின் உளவு கருவியாகவும் இருக்கலாம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டுடோக் (ToTok)  என்ற செயலி (வாய்ஸ் கால் மற்றும் சாட் வசதி கொண்ட) ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மக்களை உளவு பார்க்கும் நோக்கில்  இந்த செயலி உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவின் உளவுத்துறை தனது மதிப்பீட்டில் கண்டறிந்ததாக , ஞாயிற்றுக்கிழமையன்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

இந்த செய்தியை, ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்  

இதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) அரசாங்கம், இந்த ToTok செயலியை பதிவிறக்கம் செய்பவர்களின்- ஒவ்வொரு உரையாடலையும், நகர்வையும், உறவையும், ஒலி மற்றும் புகைபடத்தையும்  கண்காணிக்க முயற்சித்திருக்கின்றது .

வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் போன்ற பிரபலமான செய்தியிடல் சேவைகளை தடை விதித்திருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வீடியோ சேட் போன்ற வசதிகளுக்காக "வேகமான, இலவசமான மற்றும் பாதுகாப்பான ToTok  " என்று இந்த செயலியை விளம்பரப்படுத்தியது.

அதனை பெரும்பாலும் எமிரேட்ஸில் மக்கள் பயன்படுத்தி வந்தாலும், நாளடைவில் மத்திய கிழக்கு, ஐரோப்பா , ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவிலும் பிரபலமானது இந்த செயலி.

அமெரிக்காவில், கடந்த வாரத்தில் சமூக பயன்பாடு செயலியில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒன்றாக இந்த ToTok  செயலி உள்ளதாக 'ஆப் அன்னி'  என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையையும்  தி நியூயார்க் டைம்ஸ் சுட்டிக் காட்டிகிறது. சவுதி அரேபியா, இங்கிலாந்து, இந்தியா, சுவீடன் மற்றும் பிற நாடுகளில் சிறந்த 50 இலவச செயலியில் ஒன்றாக இந்த ToTok  இடம் பெற்றுள்ளதாக அந்த அறிக்கை மேற்கோள் காட்கிறது.

'FrogPhone' என்றால் என்ன?    -

TOTOK எவ்வாறு வேலை செய்கிறது :

சீனாவில் இலவச வீடியோ கால்களை வழங்கும் செயலியான YeeCall - ன் நகலாகவே தோன்றுகிறது. என்ன......  இந்த ToTok செயலி, ஆங்கிலம் மற்றும் அரபு வாடிக்கையாளர்களுக்காக சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று தி நியூயார்க் டைம்ஸால்  நியமிக்கப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு கூறுகிறது.

பயனர்களின் இருப்பிடம் மற்றும் தொடர்புகளைக் கண்காணிக்கும் எண்ணற்ற செயலியை ( பிற ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு )போலவே இதுவும் செயல்படுகிறது. இந்தியாவில் மிகவும் பிரபல சீனா நிறுவனமான TikTok செயலியின்  பெயரை ஒத்தியுள்ளது இந்த TOTOK  செயலி. சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹவாய், சமீபத்தில் இந்த Totok செயலியை விளம்பரப்படுத்தியது.

TOTOK செயலி பின்னணியில் யார் : தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இந்த செயலியின் பின்னால் இருக்கும் நிறுவனத்தின் பெயர் ப்ரீஜ் ஹோல்டிங் (Breej Holding) அபுதாபியை தளமாகக் கொண்ட டார்க்மேட்டர் (Darkmatter) என்ற நிறுவனத்தின் ஷெல் கம்பெனியாக இந்த ப்ரீஜ் ஹோல்டிங் விளங்குகிறது.

சைபர் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஹேக்கிங் போன்றவைகளில் பெயர்போன இந்த டார்க்மேட்டர் நிறுவனத்தில் எமிராட்டி உளவுத்துறை அதிகாரிகள், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை ஊழியர்கள் மற்றும்  முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு செயற்பாட்டாளர்கள் வேலை செய்கின்றனர்.

சைபர் கிரைம் போன்ற குற்றங்களுக்காக டார்க்மேட்டர் தற்போது எஃப்.பி.ஐ விசாரணையில் உள்ளது என்று முன்னாள் ஊழியர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது என்ன நடக்கிறது: உலகெங்கிலும் உள்ள ஊடகங்களில், தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கை விரிவாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, கூகிள் குறிப்பிடப்படாத கொள்கைகளை ToTok  மீறியதாகக் கூறி பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியது. ஆப்பிள் வெள்ளிக்கிழமை தனது ஆப் ஸ்டோரிலிருந்து ToTok  செயலியை அகற்றியது. மேலும், இது குறித்த ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.  செயலியை  ஏற்கனவே பதிவிறக்கம் செய்த பயனர்கள் அதை தங்கள் தொலைபேசிகளிலிருந்து அகற்றும் வரை அதைப் பயன்படுத்த முடியும்.

Tiktok
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment