Advertisment

விரிசல் அடையும் திரிணாமுல் காங்கிரஸ்: காரணம் என்ன?

கட்சிக்குள் ஒற்றுமை என்ற செய்தியை வலுவாக அனைவருக்கும் சென்று சேரும்படி, மமதா பானர்ஜி ஞாயிறு அன்று ஒரு கூட்டத்தை கூட்டி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களை நியமித்தார். அபிஷேக் பானர்ஜியின் தேசிய பொதுச்செயலாளர் உட்பட டிஎம்சியில் தற்போதுள்ள அனைத்து தேசிய அளவிலான இலாகாக்களும் கலைக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
விரிசல் அடையும் திரிணாமுல் காங்கிரஸ்: காரணம் என்ன?

Atri Mitra

Advertisment

Trinamool Congress’ internal crisis : திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்கனவே விரிசல்கள் நிலவி வருகின்ற நிலையில், தன்னுடைய அண்ணன் மகன், அபிஷேக் பானர்ஜியின் தேசிய பொதுச் செயலாளர் இலாகா உள்ளிட்ட கட்சியின் அனைத்து தேசிய அளவிலான இலாகாக்களையும் கலைத்தார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. . கட்சியில் அபிஷேக் பானர்ஜியின் வளர்ந்து வரும் அந்தஸ்து, மற்றும் ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கை மீது எழுந்து வரும் கேள்விகள் மற்றும் ஐ.பேக் நிறுவனர் ப்ரஷாந்த் கிஷோரின் பங்கு ஆகியவற்றை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார் முதல்வர் மமதா பானர்ஜி.

அபிஷேக் பானர்ஜி என்ற ஒரு காரணம்

கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு டிஎம்சியில் அதிகாரப்பூர்வமற்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக், கடந்த சில மாதங்களில் அதிகாரபூர்வக் கொள்கைக்கு முரணான முடிவுகளை பலமுறை எடுத்துள்ளார். மமதா பானர்ஜி மறுப்பு தெரிவித்த பிறகும், உள்ளாட்சித் தேர்தலில் தலைவர்களின் உறவினர்கள் மற்றும் குற்றப்பின்னணி உடையவர்களுக்கு வாய்ப்பு வழங்க மறுத்தது, மேற்கு வங்க அரசு கங்காசாகர் மேளா நடத்த முற்பட்ட போது கொரோனா காரணங்களைக் காட்டி அரசியல் அல்லது மத சார்பான கூட்டங்களை நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்தது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றங்களை சுமத்திய போது, வற்புறுத்தல்கள் இல்லாத உள்ளாட்சி தேர்தலக்ளை நடத்த வேண்டும் என்று அவர் கூறியது, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் என்ன என்று மத்திய அரசு கேள்வி எழுப்பிய போது தன்னுடைய தொகுதியில், “ரெக்கார்ட் - பதிவு” செய்யும் வகையில் கொரோனா சோதனைகளை நிகழ்த்தியது போன்றவை இதில் குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுக்கு சவாலானதாக இருக்கிறது அபிஷேக்கின் அறிக்கைகள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி கூறினார். மேலும் 34 வயது மதிக்கத்தக்க அபிஷேக்கை தன்னுடைய தலைவராக அவர் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். இவரின் கருத்துக்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அபிஷேக்கின் உறவினரான ஆகாஷ் பானர்ஜி, ஸ்ரீராம்பூருக்கு ஒரு புதிய எம்.பி. தேவை என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

இருப்பினும் அபிஷேக் கொரோனா குறித்த ஒரு அளவிடப்பட்ட முடிவை அவர் எடுத்தார். ஒமிக்ரான் தொற்று உச்சம் பெறும் போது, அது பகுத்தறிவின் காரணங்களுக்கான ஒரு குரலாக தென்பட்டது. எனவே மமதாவின் அரசு அதனை பின்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குமறிக் கொண்டிருந்த கங்காசாகர் மேளா அறிமுக விழாவின் போது இது குறித்து அறிவித்தார் மமதா. கொரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில் பல்வேறு தடைகளை அறிவித்ததோடு, ஜனவரி 22ம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார். மூன்று வாரங்கள் தேர்தலை ஒத்திவைக்க மாநில அரசு ஒப்புக் கொண்டது.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்ள வேறுபாடுகள் என்ன?

108 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் பட்டியல் தொடர்பாக அபிஷேக்குக்கும், கட்சியின் பழைய தலைவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திரிணாமுல் செயற்குழு கூட்டத்தில் மம்தா அவரை கட்சியின் பொதுச் செயலாளராக அறிவித்தார். அதே சமயத்தில் ஆளும் கட்சியின் ஒரு அடிப்படை பிரச்சினை குறித்து முடிவு செய்தது.

அதாவது ஒரு நபர், ஒரு பதவி. மருமகன் அபிஷேக் இப்போது அறிவிக்கப்படாத வாரிசு மற்றும் கிட்டத்தட்ட கட்சியின் அடுத்த தலைமுறையின் முகமாக இருப்பதால், முதல்வர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து பழைய தலைவர்களை சமாதானப்படுத்த முயன்றார். சில பெயர்கள் மீதான எதிர்ப்புகளுக்கு பிறகு இந்த விவகாரம் கட்சி முழுவதும் சென்று சேர்ந்தது.

தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தலைவர்கள்

அபிஷேக் மற்றும் மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே சமீபத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் உருவானது. மூத்த தலைவர்கள் பார்த்தா சாட்டர்ஜீ, ஃபிர்ஹாத் ஹாலிம் , அரூப் போஸ்வாஸ் மற்றும் சுப்ரதா பக்‌ஷி ஆகியோர் முதல் பட்டியலை வெளியிட்டனர். அக்கட்சியின் இணையத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது பட்டியல் ஐபேக் மூலமாக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

பாஜகவிற்கு நல்ல வரவேற்ப்பை அளித்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஐபேக்கின் ஈடுபாடானது அபிஷேக்கின் ஆதரவால் ஏற்பட்டுள்ளது. ”கட்சிக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் தொழில்முறை அணுகுமுறை தேவை என்று அபிஷேக் நினைத்தார். அதனால் ஐபேக்கை கொண்டு வந்தார். ஆனால், எந்த ஒரு அரசியல் போட்டியிலும் மாற்றங்களை உருவாக்கும் மமதா பானர்ஜீ மீதே அதிகப்படியாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்று மூத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு நபர், ஒரு பதவி

மூத்த திரிணாமுல் தலைவரும் அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சார்யாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு, ஒரு பதவிக் கொள்கையை நான் ஆதரிக்கிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால் அந்த பேனர் ஐபேக்கால் மாற்றப்பட்டது என்று பின்பு அதற்கு அவர் விளக்கம் கொடுத்தார். மேலும் அவருடைய ட்விட்டர் பக்கம் ஐபேக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்றும் கூறினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐபேக் நிறுவனம், அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அல்லது அந்த கட்சியின் தலைவர்களின் கணக்கு எதையும் நாங்கள் நிர்வகிக்கவில்லை என்று தெளிவுப்படுத்தியது. . அத்தகைய கூற்றை கூறும் எவரும் உண்மையில் ஒன்றும் அறியாதவர் அல்லது பொய் கூறுபவர் என்றும் குறிப்பிட்டிருந்தது. தலைவர்களின்ன் சமூக வலைதளங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பார்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மமதாவின் தலையீடு

கட்சிக்குள் ஒற்றுமை என்ற செய்தியை வலுவாக அனைவருக்கும் சென்று சேரும்படி, மமதா பானர்ஜி ஞாயிறு அன்று ஒரு கூட்டத்தை கூட்டி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களை நியமித்தார். அபிஷேக் பானர்ஜியின் தேசிய பொதுச்செயலாளர் உட்பட டிஎம்சியில் தற்போதுள்ள அனைத்து தேசிய அளவிலான இலாகாக்களும் கலைக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற மூத்த கட்சித் தலைவர் இது குறித்து பேசிய போது, கடந்த சில நாட்களாக மூத்த உறுப்பினர்கள் மற்றும் அபிஷேக் பானர்ஜீ இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது என்பதற்கான யூகங்கள் இருந்தன. தன்னுடைய முடிவு தான் இறுதி முடிவு. மேலும் இனி வருங்காலத்தில் எப்போதும் ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கை இடம் பெறாது என்றும் தெளிவான ஒரு செய்தியை மமதா கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். அபிஷேக் பானர்ஜீ, டேரேக் ஓப்ரையான் மற்றும் சௌக்தா ராய் ஆகியோரின் பங்களிப்பை குறைத்து, மேற்கு வங்க கட்சியின் தினசரி அலுவலில் ஐபேக் பங்கேற்காமல் இருப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம், தற்போதைக்கு நின்றுவிட்டதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் வெடிக்கலாம் என்றும், மம்தா பானர்ஜி எந்தளவுக்கு தன் கட்டுப்பாட்டை தன்னிச்சையாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பார்க்க வேண்டும் என, மூத்த தலைவர்கள் சிலர் நினைக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tmc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment