Advertisment

அமெரிக்காவில் ஹெச் 1பி விசாதாரர்களின் மனைவி, குழந்தைகளுக்கு தானாகவே பணி அனுமதி.. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!

ஹெச் 1 பி விசாவில் அமெரிக்க வருவோரின் மனைவி அல்லது கணவன் மற்றும், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எச் 4 விசாவை உடனடியாக வழங்க பைடன் அரசு முடிவு செய்துள்ளது. இது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்காவில் ஹெச் 1பி விசாதாரர்களின் மனைவி, குழந்தைகளுக்கு தானாகவே பணி அனுமதி.. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!

அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசாவில் செல்வோரின் மனைவி, அங்கு பணி செய்வதற்கான அனுமதியை வழங்கிட ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment

பணி அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்றும் வகையில் குடியேற்றக் கொள்கையை திருத்த வலியுறுத்தி ‘ஹெச் 1 பி’ விசாதாரர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்பைடியில், இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது.

ஏனென்றால், பெரும்பாலானோர் பணி அனுமதி உத்தரவு கிடைக்காமல் வேலையிழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எல்-1 மற்றும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிக்கான பணி அனுமதியை 180 நாட்கள் வரை தானாக நீட்டிக்க அனுமதிக்குமாறு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கு (யுஎஸ்சிஐஎஸ்) அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், எல்-1 விசா வைத்திருப்பவர்களின் மனைவிக்கு விண்ணப்பிக்காமலேயே விசா நீட்டிப்பு வழங்கப்படும். அதே போல், H-4 விசா வைத்திருப்பவர்களின் மனைவி, வேலை அனுமதி முடிவடைந்ததும் நீட்டிக்க மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஹெச் 4 - எல் 2 விசா வேறுபாடு

அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய புலம்பெயர்ந்தோருக்கான கொள்கைத் திருத்தத்தின்படி, ஹெச்-1 பி அல்லது எல்-1 விசாக்களை வைத்திருக்கும் இந்தியப் பெண்கள் பலனடைவார்கள்.

ஹெச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு (மனைவி மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள்) ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. இந்த விசா வைத்திருப்பவர்களில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். அவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாம்.

எல்-1 விசாக்கள் குறுகிய காலத்திற்கு செல்லுபடியாவது ஆகும். பெரும்பாலும், இந்த விசா மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அமெரிக்க அலுவலகங்களுக்கு தற்காலிக அடிப்படையில் சிறப்பு பணிகளுக்காக பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த விசா வைத்திருப்பவரின் 21 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது திருமணமாகாத குழந்தைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எல்-2 விசாக்கள் வழங்கப்படுகின்றன. எல்.2 விசா வைத்திருப்பவர்கள் வேலைவாய்ப்பைக் கண்டறிய EAD (வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள்) பெற வேண்டும்.

இந்த புதிய திருத்தம் மூலம் எல்-1 மற்றும் ஹெச்.1-பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகள் பலரை வேலையில் இருந்து வெளியேற்றிய USCIS கொள்கைகளில் மாற்றம் ஏற்படும். ஹெச்-1 பி விசாவில் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர்.

ஹெச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் வேலை பார்க்க2014 வரை அனுமதி வழங்கப்படவில்லை.

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது ஹெச் 4 விசா வைத்திருப்போர், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைப் பெற அனுமதியளித்தார். இதனால் ஹெச் 4 விசா பெற்று, அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக பெண்கள், அங்கு வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க அதிபராக 2017ல் டிரம்ப் பொறுப்பேற்ற பின், ஹெச் 1பி விசா மற்றும் ஹெச் 4 விசாக்கள் வழங்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.ஹெச்4 விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரியில் பதவியேற்றார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்திய பல்வேறு தடைகளை அதிரடியாக ரத்து செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக, எச் 4 விசாதாரர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த தடையும் ரத்து செய்யப்பட்டது.

‘ஹெச் 4’ விண்ணப்பதாரர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்திய பெண்கள் என புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன

கொள்கை மாற்றத்தின் அவசியம்

அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கம் (AILA) ஷெர்கில் மற்றும் பலரது விஷயத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வை எட்டியுள்ளது. ஷெர்கில், மார்ச் 2021 இல் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய நிலுவையில் உள்ள வழக்கின் நீட்டிப்பாகும்,

ஷெர்கில் வழக்கில், பணி அனுமதிக்கான உத்தரவு தாமதங்கள் காரணமாக, ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா வைத்திருப்பவர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்று AILA வாதிட்டது.

அப்போது, திவ்யா ஜெயராஜ் என்பவரை சுட்டிக்காட்டிய ஏஐஎல்ஏ, அமெரிக்காவிற்குப் படிக்க வந்து H-1B விசா வைத்திருப்பவரின் மனைவியாக திரும்ப வந்தார். அப்போது, அவர் பணி அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அங்கீகார உத்தரவு கிடைப்பதில் தாமதம் ஆனதால், திவ்யா வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறினர்.

எனவே, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் ஹெச் 1 பி விசாவில் அமெரிக்க வருவோரின் மனைவி அல்லது கணவன் மற்றும், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எச் 4 விசாவை உடனடியாக வழங்க பைடன் அரசு முடிவு செய்துள்ளது. இது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America Usa H1b Visa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment