Advertisment

நியூயார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஏன் தியோடர் ரூஸ்வெல்ட் சிலையை அகற்ற விரும்புகிறது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
george floyd, george floyd death, george floyd protests, black lives matter, george floyd statues pulled, slavery statues, colonialism statues, former us president, theodore roosevelt, theodore roosevelt statue, theordore roosevelt american museum of natural history, american museum of natural history, உலக செய்திகள், அமெரிக்கா, the equestrian statue of theodore roosevelt, new york city mayor,

george floyd, george floyd death, george floyd protests, black lives matter, george floyd statues pulled, slavery statues, colonialism statues, former us president, theodore roosevelt, theodore roosevelt statue, theordore roosevelt american museum of natural history, american museum of natural history, உலக செய்திகள், அமெரிக்கா, the equestrian statue of theodore roosevelt, new york city mayor,

Neha Banka

Advertisment

அமெரிக்காவில் போலீஸ் பிடியில் இருந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர், கடந்த மே மாதம் 25-ம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியதால், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்தின் பிரதிநிதிகளாக இருந்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை போராட்டக்காரர்கள் உடைக்கத் தொடங்கினர். இந்த வார இறுதியில், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு வெளியே நிற்கும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் பெரிய சிலை விரைவில் அகற்றப்படும் என்று நியூயார்க் நகர அரசாங்கம் அறிவித்தது. இந்த சிலை நகர அரசாங்கத்தின் சொத்தாகும். சென்ட்ரல் பார்க் வெஸ்டில் அருங்காட்சியகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ளது.

இந்தியா- சீனா உறவு: பரஸ்பர சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறதா?

ரூஸ்வெல்ட்டின் சிலை ஏன் அகற்றப்படுகிறது?

1901 முதல் 1909 வரை பதவியில் இருந்த அமெரிக்காவின் 26 வது ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட்டின் சிலையை அகற்றுமாறு அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நியூயார்க் நகர அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. கடந்த ஆண்டு, அருங்காட்சியகம் சார்பில் 'Addressing the Statue' என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சி குறிப்பிட்ட இந்த சிலையை மையமாகக் கொண்டது. இது அதிகாரப்பூர்வமாக "தியோடர் ரூஸ்வெல்ட்டின் குதிரையேற்றம் சிலை" என்று அழைக்கப்படுகிறது. ரூஸ்வெல்ட் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சிலை 1925 ஆம் ஆண்டில் அருங்காட்சியகத்தின் படிகளில் வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, இந்த சிலை நியூயார்க் மாநில நினைவுச்சின்னத்தின் ஒரு பகுதியாகும். ரூஸ்வெல்ட் ஜனவரி 1, 1899 முதல் டிசம்பர் 31, 1900 வரை நியூயார்க் மாநில ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ரூஸ்வெல்ட் இயற்கை வரலாறு மற்றும் பாதுகாப்பிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார், மேலும் அவரது தந்தை தியோடர் ரூஸ்வெல்ட் சீனியரும் அருங்காட்சியகத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். அப்போது, அருங்காட்சியகம் "ரூஸ்வெல்ட் குடும்பத்துடனான வரலாற்று தொடர்பைப் பற்றி பெருமிதம் கொள்கிறது" என்று கூறியது. ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோவின் ஒரு அறிக்கையில், ரூஸ்வெல்ட்டின் இந்த சிலையை அகற்ற அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏனெனில் “இது கருப்பு மற்றும் பழங்குடி மக்களை அடிபணிந்த மற்றும் இனரீதியாக தாழ்ந்தவர்கள் என்று வெளிப்படையாக சித்தரிக்கிறது”.

ரூஸ்வெல்ட்டின் சிலை ஏன் சிக்கலானது?

இந்த சிலை, ஒரு குதிரையின் மேல் அமர்ந்துள்ள ரூஸ்வெல்ட்டில் ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதனின் உருவங்களையும், அவரது இருபுறமும் ஒரு பூர்வீக அமெரிக்க மனிதனின் உருவங்களையும் சித்தரிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியின் போது, அருங்காட்சியகம் ஒரு சிக்கலை ஒப்புக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. "அதே நேரத்தில், சிலை ஒரு இனரீதியான படிநிலையைத் தொடர்பு கொள்கிறது, இது அருங்காட்சியகம் மற்றும் பொதுமக்களின் நீண்டகால தொந்தரவாக இருப்பதைக் கண்டறிவதாக" அருங்காட்சியகம் கூறியது. கண்காட்சியை பார்ப்பதன் மூலம் சிலை தொந்தரவாக இருக்கிறதா என்று பார்வையாளர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும், கண்காட்சியின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு கண்ணோட்டங்களை இந்த அருங்காட்சியகம் விளக்கமளித்தது.

இந்த சிலையைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் புதிதல்ல. அதைச் சுற்றியுள்ள ஆரம்ப உரையாடல்கள் 1999 இல் வெளியிடப்பட்ட ஜேம்ஸ் லோவனின் 'லை அக்ராஸ் அமெரிக்கா: வாட் எவர் ஹிஸ்டோரிக் சைட்ஸ் கெட் ராங்' புத்தகத்தில் காணலாம். அதில், ரூஸ்வெல்ட் அமர்ந்திருக்கும் குதிரைக்கு ஒருபுறம் ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதனும், மற்றொரு புறம் பூர்வீக அமெரிக்க மனிதரும் இடம்பெற்றிருப்பதே, வெள்ளை மக்களின் மேலாதிக்க வெளிப்பாடு என்று புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக, வரலாற்றாசிரியர்களும் விமர்சகர்களும் இந்த சிலை பல காரணங்களுக்காக சிக்கலானது என்று கூறியுள்ளனர்.

காலனித்துவ நினைவுச்சின்னங்கள் குறித்து நியூயார்க்கின் நிலைப்பாடு என்ன?

செப்டம்பர் 2017 இல், நியூயார்க் நகர அரசுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய பப்ளிக் ஆர்ட், நினைவுச்சின்னங்கள் பற்றி Mayoral Advisory Commission மேயருடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக அறிவித்தது. இந்த ஆணைக்குழு அதன் குறிக்கோள்களில் ஒன்று "இந்த வரலாறுகளின் பிரதிநிதித்துவங்களை முழுவதுமாக அகற்றுவதற்கு பதிலாக - விவரம் மற்றும் நுணுக்கத்தை சேர்ப்பதில் கவனம் செலுத்துவதாகும்" என்று கூறியிருந்தது. ரூஸ்வெல்ட்டின் இந்த சிலை சில ஆண்டுகளாக அருங்காட்சியக அதிகாரிகளுக்கும் நகர அரசாங்கத்திற்கும் இடையில் விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது, ஆனால்இரு தரப்பிலும் சிலையின் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எட்ட முடியவில்லை.

நியூயார்க் நகர அரசாங்கத்தின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அருங்காட்சியகம் “புதிய சூழல் மற்றும் முன்னோக்குகளை வழங்க முயற்சிக்கிறது, (ரூஸ்வெல்ட்) சிலைக்கான வரலாறு மற்றும் பகுத்தறிவை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது" என 2019 ஆம் ஆண்டில், அருங்காட்சியகம் தனது இணையதளத்தில் கூறியது.

மும்பையை முந்தி கொரோனா தலைநகர் ஆகிறதா டெல்லி?

இந்த சிலை அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்து எப்போது அகற்றப்படும்? அது எங்கும் மாற்றப்படும்? என்பது உடனடியாகத் தெரியவில்லை. ரூஸ்வெல்ட் குடும்பத்தின் நட்பு அருங்காட்சியகத்துடன் இன்று வரை தொடர்கிறது, ரூஸ்வெல்ட்டின் பேரன் நிறுவனத்தின் அறங்காவலர்களில் ஒருவராக இருக்கிறார். ரூஸ்வெல்ட்டின் சிலையை அகற்றுவதற்கான இழப்பீடாக, அருங்காட்சியகத்தின் பல்லுயிர் மண்டபத்துக்கு அவரது பெயர் இடப்படும் என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

ரூஸ்வெல்ட் இனவெறியரா?

1905 ஆம் ஆண்டில், ரூஸ்வெல்ட் யூஜெனிக்ஸின் ஆதரவாளராக இருந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள், 1905 ஆம் ஆண்டில், அவர் ஒரு உரையை நிகழ்த்தினார், அங்கு அவர் "இன தற்கொலை" என்று கூறப்படும் அச்சுறுத்தல்களின் கதைகளை கூற முயன்றார். ரூஸ்வெல்ட்டின் அடையாளத்தின் இந்த அம்சங்கள் அருங்காட்சியகத்தால் கவனிக்கப்படவில்லை அல்லது பரவலாக குறிப்பிடப்படவில்லை என்று அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 2019 கண்காட்சியின் விமர்சகர்கள் அப்போது கூறியிருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment