Advertisment

தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெறும் பஞ்சாப் மக்கள் : எப்படி சாத்தியம்?

Vaccine donations in Punjab how the system works தனிப்பட்ட முறையில், கோவாக்சின் ஒற்றை டோஸ் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. கோவிஷீல்டுக்காக அரசாங்கம் நன்கொடைகளை வாங்கவில்லை.

author-image
WebDesk
New Update
Vaccine donations in Punjab how the system works covid 19 Tamil News

Vaccine donations in Punjab how the system works covid 19 Tamil News

Vaccine donations in Punjab how the system works Covid 19 Tamil News : 18-44 வயதிற்குட்பட்ட பயனாளிகளுக்குத் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கப் பஞ்சாப் அரசு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து, மக்களிடத்திடமிருந்து அதற்கான நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நன்கொடைகளின் முழு அமைப்பும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை காஞ்சன் வாஸ்தேவ் விளக்குகிறார்.

Advertisment

நன்கொடை எவ்வாறு செயல்படுகிறது?

ஒவ்வொரு தடுப்பூசி நன்கொடையாளருக்கும், தடுப்பூசி நன்கொடை கணக்கில் (எண் 50100179681133, எச்.டி.எஃப்.சி வங்கி, பிரிவு 17) பணத்தை டெபாசிட் செய்வதற்கான விருப்பம் கிடைக்கும்.

பல்வேறு மாவட்டங்களுக்கு அந்தந்த துணை ஆணையர்களுடன் பதிவு செய்ய சொந்த ஆன்லைன் இணைப்புகள் உள்ளன. உதாரணமாக, மொஹாலி டி.சி கிரிஷ் தயாளன், sasnagar.nic.in/Vaccination என்ற இணைப்பைப் பயன்படுத்தி வருகிறார். அங்கு நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களின் விவரங்கள் வழங்கப்படுகின்றன.

ஒரு தடுப்பூசிக்கு ஒருவர் எவ்வளவு நன்கொடை வழங்க வேண்டும்?

இரண்டு அளவுகளுக்கு கோவாக்சின் ரூ.430 என்ற விகிதத்தில் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. நன்கொடை அளிப்பவர் ஒரு தனிநபருக்கு ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ.430 செலுத்த வேண்டும்.

தனிப்பட்ட முறையில், கோவாக்சின் ஒற்றை டோஸ் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. ஆனால், அரசாங்க கொள்முதல் செய்ய ஒருவர் ரூ.430 மட்டுமே செலுத்தினால் போதும். கோவிஷீல்டுக்காக அரசாங்கம் நன்கொடைகளை வாங்கவில்லை.

அரசாங்கம் கோவாக்சினுக்கு மட்டுமே நன்கொடைகளை ஏன் அனுமதிக்கிறது?

இரண்டு அளவுகளுக்கு இடையில் எடுத்துக்கொள்ளப்படும் காலம் குறைவாக இருப்பதால், அரசாங்கம் கோவாக்சினுக்கு மட்டுமே நன்கொடைகளை அனுமதிக்கிறது. “3 மாதங்களுக்கு ஒரு தரவை பராமரிப்பது கடினம். கோவாக்சின் தடுப்பூசிக்கு நான்கு வாரங்கள் மட்டுமே இடைப்பட்ட காலம் இருப்பதால், நான்கு வாரங்களுக்குப் பதிவைப் பராமரிப்பது சிறந்தது” என்று தடுப்பூசிக்கான நோடல் அதிகாரி விகாஸ் கார்க் கூறினார்.

இதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

“அதிகமான தொழிலதிபர்கள் தங்கள் உழைப்பாளர்கள் மற்றும் பிறருக்காகத் தடுப்பூசிகளுக்கான பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக எங்களிடம் வருகிறார்கள். பல தொழிலதிபர்கள் தங்கள் சி.எஸ்.ஆர் நிதியைத் தடுப்பூசிகளுக்கான நன்கொடையாகப் பயன்படுத்துவதால், கிராமங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாங்கள் மே 4 அன்றுதான் தொடங்கினோம் என்பதால், அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்"

நன்கொடை அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் எங்கே கிடைக்கின்றன?

இவை அரசாங்கத்தால் நடத்தப்படும் தடுப்பூசி மையங்களில் கிடைக்கின்றன. ஆனால், இப்போது தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கும்படி அரசாங்கம் செய்துள்ளது. இதனால், மக்கள் தனியார் மருத்துவமனைகளில் கூட தடுப்பூசிகளை இலவசமாகப் பெற முடியும்.

மொஹாலி துணை ஆணையருக்குப் பிறகு, ஒரு முழு கிராமத்திற்கும் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளும் பிரச்சாரம் வேகத்தை அதிகரித்துள்ளது. டி.சி மற்றும் அவரது ஐந்து பார்ட்னர்கள் எடுத்துக்காட்டாக முன்னிலை வகிக்கின்றனர். அதுமட்டுமின்றி பணத்தையும் திரட்டியுள்ளனர். மேலும், மசோல் கிராமத்தின் மொத்த மக்களுக்காக ரூ.1.78 லட்சம் நன்கொடை அவர்கள் அளித்துள்ளனர். மொஹாலி மாவட்டத்தில் மட்டும் தடுப்பூசிகளுக்கான நன்கொடையாக ரூ.40 லட்சத்திற்கு மேல் வசூலிக்க முடிந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment