Advertisment

வைரஸ் பிறழ்வுகளும் கொரோனா இரண்டாம் அலையின் உச்சமும்

பி .1.617 மாறுபாட்டை சில மாநிலங்களில் காணப்பட்ட எழுச்சியுடன் இணைத்தது. ஆனால் மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் தொடர்பு இன்னும் முழுமையாக நிறுவப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறியது.

author-image
WebDesk
New Update
Variants and the Covid-19 surge

 Amitabh Sinha 

Advertisment

Variants and the Covid-19 surge : கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வரும் தொற்றுக்கும் வைரஸின் வீதிகள் மாற்றத்திற்கும் ஏதேனும் காரணங்கள் உண்டா என ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வைரஸ்கள் பிறழ்வு அடைகின்றன. அவை உயிர் வாழவும் பரவும் மற்ற பிறழ்வுகளை பயன்படுத்தி கொள்கிறது. கடந்த சில மாதங்களில் வைரஸின் பல புதிய வகைகள் இந்திய மக்கள் மத்தியில் பரவி வருகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் பல வைரஸ் வகைகள் மிகவும் தீவிரமாக பரவி மனிதர்களை தாக்கும் திறன் கொண்டவையாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட வைரஸ் பிறழ்வு,  B.1.617, மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா என்ற பகுதியில் கண்டறியப்பட்டது. அதிவேகமாக பரவும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் திறன் காரணமாக அதிக கவனத்தை பெற்றது இந்த வைரஸ் பிறழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு வேகமாக பரவும் வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. B 1.1.7 என்ற அந்த வைரஸ் தாக்கம் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. நோய் பரவல் அதிகரிக்க இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நோய் தொற்று அதிகரிக்க இந்த வைரஸ்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் இரண்டாம் அலையின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இவைகள் தானா காரணம் என்பதை தெளிவுப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர் அவர்கள். தொற்றுநோயியல் சான்றுகள் இன்னும் போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறிவருகின்றனர். புதன்கிழமை, அரசாங்கம், முதன்முறையாக, பி .1.617 மாறுபாட்டை சில மாநிலங்களில் காணப்பட்ட எழுச்சியுடன் இணைத்தது. ஆனால் மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் தொடர்பு இன்னும் முழுமையாக நிறுவப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறியது.

publive-image

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸ் பிறழ்வுகளை நீங்கள் பார்த்தாலும், நோய் தொற்று அதிகரிப்பிற்கு இந்த வைரஸ்கள் தான் காரணம் என்று கூறிவிட இயலாது என்று ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டெகிரேட்டிவ் பயாலஜி என்ற டெல்லியை சேர்ந்த நிறுவனத்தின் இயக்குநர் அனுராக் அகர்வால் கூறினார். சில இடங்களில் நேரடியாக அதிக தாக்கும் திறன் கொண்ட வைரஸ்கள் இந்த அதிகரிப்பிற்கு காராணமக இருக்கலாம். மற்ற இடங்களில் வேறும் பல காரணங்களை பட்டியலிட முடியும் என்றார்.

விதர்பாவில் கொரோனா தொற்று அதிகரிக்க பி.1.617 காரணமாக இருக்கலாம். ஆனால் இதே வைரஸ் மும்பையில் தொற்று அதிகரிக்க காரணமாக இல்லை. ஏன் என்றால் இந்த பிறழ்வு மும்பை மக்கள் தொகையில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் அதிகமாக காணப்படவில்லை. இதற்கு காரணம் வேறவாக இருக்கலாம். உள்ளூர் ரயில்களை மீண்டும் இயக்க ஆரம்பித்தது கூட காரணமாக இருக்கலாம் என்றார்.

கேரளாவில், புழக்கத்தில் இருக்கும் புதிய மாறுபாடு N440K ஆகும். ஆனால், கேரளாவில் ஏற்பட்ட எழுச்சிக்கு இது காரணமில்லை என்று அகர்வால் கூறினார். இந்த பிறழ்வு, அதிகபட்ச பரவல்கள் இருந்த இடங்களில் அதிகமாக காணப்படவில்லை. உண்மையில், இந்த மாறுபாட்டின் இருப்பு மிகக் குறைவான பகுதிகளில் ஏற்பட்ட கொரோனா எழுச்சிக்கு மட்டுமே காரணமாக இருந்தது என்று அவர் கூறினார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் தொற்று ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து சந்தேகங்கள் நிலவுகிறது. இரண்டு மாநிலங்களிலும் இங்கிலாந்தின் வைரஸ் பிறழ்வு அதிகமாக காணப்பட்டது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பஞ்சாபில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் 80% மாதிரிகளில் இந்த பிறழ்வு காணப்பட்டது. அருகிலிருக்கும் டெல்லியிலும் இந்த இங்கிலாந்து வைரஸ் பிறழ்வு அதிகமாக காணப்பட்டது. ஆனால் தேசிய தலைநகரின் தன்மைக்கு ஏற்ப, நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகிறார்கள், மற்ற மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு வைரஸ் மாறுபாடும் டெல்லியிலும் இருப்பதைக் குறிக்கிறது. அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் நோய் தொற்றின் அதிகரிப்புக்கு சிறிதளவு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை.

ஒரு இடத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் குறைவு இரண்டுமே பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பிறழ்வுகளை கொண்டுள்ளது ஆனால் அவைகள் கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொற்றுநோய்கள் சிக்கலான அமைப்புகள் போன்றவை, அங்கு உள்ளீடுகளில் சிறிய அளவு மாற்றங்கள் கூட எதிர்பாராத வெளியீடுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, சில இடங்களில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிக எண்ணிக்கையிலான திருமணக் கூட்டங்கள் கூட காரணமாக இருக்கலாம். ஒரு தொற்றுநோய் பரவலின் அதிவேக தன்மை இதை சாத்தியமாக்குகிறது என்கின்றனர்.

மேலும் படிக்க : ஏழை நாடுகளுக்கு காப்புரிமம் நீக்கப்பட்டு செயல்முறைகளை தருவதில் சிக்கல் ஏற்படும் - பில்கேட்ஸ்

கண்காணிப்பில் உள்ள பிற பிறழ்வுகள்

புதிய பிறழ்வுகளும் தற்போது கண்காணிப்பின் கீழ் உள்ளது. ஏற்கனவே அரசு B.1.617 பிறழ்வை வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த குறிச்சொல் இன்னும் உலக சுகாதார நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. செய்திதாளில் கூறியது போல், இந்த வைரஸ் மாறுபாடு B.1.617.1, B.1.617.2 மற்றும் B.1.617.3 என பெயரிடப்பட்ட குறைந்தது மூன்று பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இது தீவிரமாக பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும் இன்னும் வேகமாக, மற்றும் பெற்றோர் மாறுபாட்டை விட பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த மூன்று மாதிரிகள் கவலையை ஏற்படுத்துகிறது. பி .1.617 ஐப் பற்றியும், அதிலிருந்து வெளிவரும் மூன்று புதியவற்றைப் பற்றியும் நான் கவலைப்படுகிறேன். நான் இங்கிலாந்து மாறுபாட்டைப் பற்றியும், தென்னாப்பிரிக்க மாறுபாட்டைப் பற்றியும் கவலைப்படுகிறேன். ஆனால் பிரேசிலிய மாறுபாடு, அல்லது பி .1.618, அல்லது என் 440 கே பற்றி கூட நான் அதிகம் கவலைப்படவில்லை என்று அகர்வால் தெரிவித்தார்.

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment