Advertisment

உக்ரைன் முன்னாள் அதிபர் மீது பார்வையைத் திருப்பும் ரஷ்யா; யார் இந்த விக்டர் யனுகோவிச்?

பிப்ரவரி 18 மற்றும் 22 க்கு இடையில் இந்த போராட்டம் உச்சம் பெற்றது. குறைந்தது 88 அப்பாவி போராட்டக்காரர்கள் அரசின் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Viktor Yanukovych Ukraines ousted president

Rounak Bagchi

Advertisment

Viktor Yanukovych Ukraine's ousted president: உக்ரைனில் தொடர்ந்து ரஷ்யா முன்னேறிச் செல்கின்ற நிலையில், தற்போதுள்ள அரசு வீழ்ச்சி அடையும் பட்சத்தில், உக்ரைன் நாட்டின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சை உக்ரைனின் புதிய அதிபராக ரஷ்யா நியமிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே இரண்டு முறை பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு அதிபரை மீண்டும் ரஷ்யா, உக்ரைனின் அதிபராக நியமிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் இண்டிபென்டண்ட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் அதிபருக்கு பல்வேறு காலங்களில் க்ரெம்ளின் பயிற்சி அளித்ததாக உக்ரையின்ஸ்கா ப்ரவதா என்ற ஆன்லைன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியை சுட்டிக் காட்டியுள்ளது.

விக்டரின் வளர்ச்சி

உலோகப்பட்டறையில் வேலை பார்க்கும் நபருக்கும் செவிலியருக்கும் மகனாக ஜூலை மாதம் 1950ம் ஆண்டு யெனாகியேவோ என்ற பகுதியில் பிறந்தார் விக்டர். இளம் வயதில் வன்முறை குற்றங்களில் ஈடுபட்டதற்காக இரண்டு முறை ஜெயிலிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும், அவருடைய அதிகாரப்பூர்வ சுயசரிதையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் கிழக்கு உக்ரைனில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ட்ரான்ஸ்போர்ட் எக்ஸ்க்யூட்டிவாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய அவர் 2000-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உள்ளூர் நிர்வாகத்தில் கால் வைத்த ஒரே ஆண்டில், 30 லட்சம் மக்கள் தொகையை கொண்ட, உக்ரைனின் பொருளாதார உந்து சக்தியாக விளங்கும் டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார். 2002ம் ஆண்டு நவம்பர் மாதம், அன்றைய உக்ரைன் அதிபர் லியோனிட் குச்மா, விக்டரை பிரதமராக அறிவித்தார்.

ரயில் நிலையத்தில் உக்ரைன் ராணுவப் பிடியில் 3000 இந்தியர்கள்: புதின் தகவல்

2004ம் ஆண்டு அவர் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டார். ஆனாலும், கீவில் நடைபெற்ற ஆரஞ்சு புரட்சி அந்த தேர்தலில் மோசடி நிகழ்ந்தது என்று அறிவித்தது. பின்னர் இரண்டாவது முறையாக 2006 - 2007 காலகட்டங்களில் அவர் பிரதமராக பதவி வகித்து, அந்நாட்டின் மிக முக்கியமான அரசியல்வாதியாக உருமாறினார்.

2010ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட யுலியா திமோஷென்கோவை வென்றார். அவருடைய ஆட்சியின் போது விக்டர், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை நோக்கி கொண்டு சென்றார்.

ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு கையொப்பமிடுவதற்கு சில நாடுகளுக்கு முன்பு நவம்பர் மாதம் 2013ம் தேதி அன்று அந்த ஒப்பந்தத்தை நிராகரித்தார். 2004ம் ஆண்டு நடைபெற்ற ஆரஞ்சு புரட்சியைக் காட்டிலும் ஒரு பெரிய போராட்டம் வெடித்து பல மாதங்களாக நடைபெற்றது. , பிப்ரவரி 18 மற்றும் 22 க்கு இடையில் இந்த போராட்டம் உச்சம் பெற்றது. குறைந்தது 88 அப்பாவி போராட்டக்காரர்கள் அரசின் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தலின் பெயரால் அதிகாரங்கள் அனைத்தையும் அவர் நாடாளுமன்றத்திற்கு மாற்ற கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து தேர்தலையும் முன்கூட்டியே அறிவிக்கவும் செய்தார். பின்னர் சில மணி நேரங்களில் அவர் தலைநகரை விட்டு தப்பியோட அவருடைய அரசு கலைக்கப்பட்டது.

ரஷ்யாவுடன் இணைந்து கொண்ட விக்டர்

2004ம் ஆண்டு யுனுகோவிச் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வெளிப்படையாக ஆதரித்தார். இருப்பினும் “மாஸ்கோவால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்” என்ற பிம்பத்தை கலைக்க தொடர்ந்து பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். உக்ரைனின் நிதி ஆபத்தான நிலையில் இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக உறவுகள் ரஷ்யாவுடனான தனது நாட்டின் தற்போதைய வர்த்தகத்தை பாதிக்கும் என்று வாதிட்டார்.

ஷக்தர் டொனெட்ஸ்க் கால்பந்து கிளப்பின் உரிமையாளரான, செல்வந்தர் ரினண்ட் அக்மேதோவ் யனுகோவிச்சின் அரசியல் கூட்டாளியாக இருந்தார். மாஸ்கோவுடனான முன்னாள் அதிபரின் உறவு, கீவை விட்டு வெளியேறி யனுகோவிச் ரஷ்யாவிடம் புகலிடம் கேட்ட போது மேலும் அப்பட்டமாக தெரிந்தது.

உக்ரைனில் மாணவர்களை மீட்க தமிழக குழு.. மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கும் ஸ்டாலின்!

உக்ரைனை விட்டு வெளியேறிய அவர் தன்னுடைய முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பை ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டன் என்ற பகுதியில் வழங்கினார். அப்போது அவர் ராணுவ தலையீடு அல்லது தன்னுடைய நாட்டின் பிரிவினைக்கு எதிராக அவர் பேசினார். மேலும் தனக்கும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் கீவில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தலைநகருக்கு திரும்பமாட்டேன் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment