Advertisment

பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ... விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன?

அத்தகைய கமிஷன்களின் கண்டுபிடிப்புகள் பொதுவாக சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ தாக்கல் செய்யப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ... விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன?

 Apurva Vishwanath 

Advertisment

West Bengal probes Pegasus : இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸபைவேரை பயன்படுத்தி பலரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை விசாரணை செய்ய மேற்கு வங்க அரசு விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோக்கூர் மற்றும் முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யாவை கொண்டுள்ள இந்த ஆணையம், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளார்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

ஆணையத்தின் கட்டளைகள் என்ன?

மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆணைக்குழு “அறிக்கையிடப்பட்ட இடைமறிப்பு மற்றும் இதுபோன்ற இடைமறிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்திருத்தல், சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பாக அரசு மற்றும் அரசு சாரா நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும். பாரீஸை தளமாகக் கொண்ட ஃபோர்பிடன் ஸ்டோரிஸ் தலைமையில் 17 ஊடகவியல் நிறுவனங்கள் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியான அறிக்கைகள், முக்கியத்துவம் வாய்ந்த திட்டவட்டமான விசயம் என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன் அதிகாரங்கள் என்ன?

விசாரணை ஆணையங்கள் சட்டம், 1952 இன் கீழ் , அரசால் அமைக்கப்படும் ஒரு ஆணையத்திற்கு ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். அதே சமயம் சிவில் நடைமுறைகள் 1908 -ன் கீழ் ஒரு வழக்கை விசாரிக்கும். இதன் பொருள் என்னவென்றால், இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ஒருவரை வரவழைத்து அவரின் வாக்குமூலங்களை பதிவு செய்து, ஆதாரங்களை பெறமுடியும். மேலும் எந்தவொரு நீதிமன்றத்திலிருந்தும் அல்லது அலுவலகத்திலிருந்தும் எந்தவொரு பொதுப் பதிவையும் அல்லது நகலையும் கோர உத்தரவிடலாம்.

சட்டத்தின் 5 வது பிரிவின் கீழ், ஆணையத்திற்கு எந்தவொரு சட்டத்தின் கீழும் உரிமை கோரக்கூடிய சலுகைகளுக்கு உட்பட்டு எந்த ஒரு நபரையும் விசாரிக்க அதிகாரங்கள் உள்ளது. ஆணைக்குழுவின் கருத்து, விசாரணையின் விஷயத்திற்கு பயனுள்ளதாகவோ அல்லது தொடர்புடையதாகவோ இருக்கலாம்.

ஒரு மாநில அரசு ஏன் ஆணையம் அமைக்கிறது?

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இத்தகைய விசாரணை ஆணையங்களை அமைக்க முடியும் என்றாலும், மாநிலங்கள் சட்டமியற்ற அதிகாரம் பெற்ற விஷயங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், முதலில் விசாரணைக்கு யார் உத்தரவிடுகிறார்கள் என்பது முக்கியம். அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சட்டத்தின் கீழும்.

முதலில் மத்திய அரசு கமிஷனை அமைத்தால், மாநிலங்கள் மத்திய அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் ஒரே விஷயத்தில் ஒரு இணையான ஆணையத்தை அமைக்க முடியாது. ஆனால் ஒரு மாநிலம் ஒரு ஆணைக்குழுவை நியமித்திருந்தால், விசாரணையின் நோக்கம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கருத்து இருந்தால், அதே விஷயத்தில் மற்றொரு மாநிலத்தை மத்திய அரசால் நியமிக்க முடியும். முதலில் ஒரு குழுவை நியமிக்கும் மேற்கு வங்க அரசாங்கத்தின் நடவடிக்கை, இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடும்.

கடந்த காலங்களில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அரசியல் மோதல்கள் இருந்தன. மத்திய அரசு ஒரே விவகாரத்தை விசாரிக்க வேறு ஆணையங்களை அமைக்க உத்தரவு பிறப்பித்தது.2002ம் ஆண்டு, குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, மாஅநில அரசு, கி.டி. நானாவதி மற்றும் ஏ.எச். மேத்தா ஆகியோர் தலைமையில் கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணைக்குழு பின்னர் தனது அறிக்கையில் மாநில அரசுக்கு ஒரு ”க்ளீன் சிட்” கொடுத்தது.

2004 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கத்தில் அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி யு சி பானர்ஜியின் கீழ் இதே விஷயத்தில் விசாரணை ஆணையத்தை அமைத்தார். பானர்ஜி கமிஷன் மாநில ஆணையத்திற்கு முரணான கண்டுபிடிப்புகளை அறிவித்தது.

இருப்பினும், மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆணையம் ஏற்கனவே இந்த விவகாரத்தை கவனித்து வருவதால் அதன் முடிவுகளை ரத்து செய்தது. குஜராத் உயர்நீதிமன்றம் பின்னர் பானர்ஜி கமிஷன் அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என்றும் அதன் முடிவுகளையும் நிராகரித்து அறிவித்தது குஜராத் உயர் நீதிமன்றம்.

ஒரு கமிஷன் எந்த வகையான பிரச்சனைகளை விசாரிக்கும்?

1952 சட்டத்தின் பிரிவு 2 (அ) இன் கீழ், மத்திய அரசு அமைத்த கமிஷன்கள் பட்டியல் I (யூனியன் பட்டியல்) அல்லது பட்டியல் II (மாநில பட்டியல்) அல்லது பட்டியல் III (Concurrent List) அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில், மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட கமிஷன்கள் பட்டியல் II அல்லது பட்டியல் III இல் உள்ளீடுகளைக் காணலாம்.

பெகாசஸ் விசாரணை ஆணையத்தில், மேற்கு வங்க அரசு பொது ஒழுங்கு மற்றும் காவல்த்துறை உள்ளீடுகளை மேற்கோளிட்டுள்ளது. இந்த பாடங்கள் மாநில பட்டியலில் இருக்கும்போது, விசாரணையின் பொருள் முக்கியமாக மத்திய பட்டியலின் கீழ் வரும் என்று ஒரு வாதத்தையும் முன்வைக்க முடியும். தபால், தந்திகள், டெலிபோன்கள், வயர்லெஸ், ஒளிபரப்பு மற்றும் இதர தொலைத் தொடர்புகள் 31 விவகாரங்கள் மத்திய பட்டியல் அல்லது பட்டியல் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

அத்தகைய ஆணையத்தின் அறிக்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

அத்தகைய கமிஷன்களின் கண்டுபிடிப்புகள் பொதுவாக சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ தாக்கல் செய்யப்படுகின்றன. ஆறு மாதங்களுக்குள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க மேற்கு வங்க அரசு லோகூர் ஆணையத்திற்கு அறிவித்துள்ளது. இருப்பினும், அறிக்கையை பகிரங்கப்படுத்த அரசாங்கம் கட்டுப்படவில்லை. கண்டுபிடிப்புகள் நிர்வாகத்தின் மீது பிணைக்கப்படவில்லை, ஆனால் நீதிமன்றங்களால் ஆதாரமாக நம்பலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pegasus Spyware
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment