Advertisment

மனிதாபிமான வழித்தடம் என்றால் என்ன? தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதா?

பேரழிவுகளைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்படுகின்றன. ஆனால், அவை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.மனிதாபிமான வழித்தடம் மக்களுக்கு எவ்வாறு உதவும்? அவை எவ்வாறு தீங்கு விளைவிக்கும்? என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
மனிதாபிமான வழித்தடம் என்றால் என்ன? தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதா?

மனிதாபிமான வழித்தடம் என்றால் என்ன?

Advertisment

போரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் பல சாத்தியமான வடிவங்களில் ஒன்றாக மனிதாபிமான வழித்தடத்தை ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.

குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ராணுவ வீரர்கள் இல்லாத பகுதியாக இருக்கும். ஆயுத மோதலின் இரு தரப்பினரும் அதனை அமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதன் நோக்கம் என்ன?

இந்த வழித்தடம் வழியாக, உணவு மற்றும் மருத்துவ உதவி மோதல் நடக்கும் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படலாம் அல்லது பொதுமக்கள் வெளியேற்றப்படலாம்.

போர் தீவிரமடையும் போது நகரத்தில் தண்ணீர், மின்சாரம், உணவில் பற்றாக்குறை ஏற்படும் போது, மனிதாபிமான வழித்தடம் உதவியாக இருக்கும்.

அதனை அமைப்பது யார்?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மனிதாபிமான வழித்தடம் ஐநா பேச்சுவார்த்தை மூலம் அமைக்கப்படும். சில நேரங்களில், உள்ளூர் குழுக்களால் அமைக்கப்படும். இருப்பினும், அதை அமைக்க அனைத்து தரப்பினரும் சம்மதிக்க வேண்டும் என்பதால், ராணுவம் அல்லது அரசியல் துஷ்பிரயோகம் ஏற்படும் அபாயம் உள்ளது.

உதாரணமாக, போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு மனிதாபிமான வழித்தடம் ஆயுதங்கள் மற்றும் எரிபொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்படலாம்.

மறுபுறம், ஐ.நா. கண்காணிப்பாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போர் நடைபெறும் இடத்தை அணுகுவதற்கும் உதவியாக அமைந்திடும்.

உக்ரைனில் அமைக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடம் என்ன?

மரியுபோலில் இருந்து சுமார் 200,000 பேரும், வோல்னோவாகா நகரிலிருந்து 15,000 குடியிருப்பாளர்களும் வெளியேற அனுமதிக்கும் வகையில், மார்ச் 5, சனிக்கிழமையன்று ஐந்து மணி நேர போர்நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து மரியுபோல் நகர நிர்வாகம் கூறுகையில், ரஷ்ய படைகள் குண்டு வீசுவதையும், தாக்குதலையும் தொடர்ந்ததால், வெளியேற்றல் பணி ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

ரஷ்ய செய்தி நிறுவனமான RIA கூறுகையில், பொதுமக்கள் தப்பிச்செல்வதை தேசியவாதிகள் சிலர் தடுத்ததாகவும், அதன் காரணமாக போர் நிறுத்தம் சமயத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.

மேலும், Kherson துறைமுக நகரத்தில் மனிதாபிமான பாதை உத்தரவை ரஷ்யா கடைப்பிடிக்கவில்லை என உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது. சுமார் 19 வாகனங்களை அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, ரஷ்யர்களே பொதுமக்களுக்கு உயர்மட்ட ஆதரவை அனுப்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

யாருக்கு அணுகல் கிடைக்கும்?

மனிதாபிமான வழித்தடத்துக்கான அணுகல், போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக நடுநிலை நபர்கள், UN அல்லது ரெட் கிராஸ் போன்ற அமைப்புகளுக்கு அணுகல் கிடைக்கும். வழித்தடத்தின் அமைப்பதற்கான பகுதி, நேரத்தின் நீளம், டிரக், பேருந்து, விமான என எந்த போக்குவரத்துக்கு அனுமதி என்பதையும் அவர்களே முடிவு செய்வார்கள்.

மனிதாபிமான வழித்தடங்கள் மோதலில் ஈடுபடும் ஒரு தரப்பினரால் ஏற்பாடு செய்யப்படுவது மிகவும் அரிதான ஒன்றாகும். 1948-1949 இல் சோவியத் யூனியனால் பெர்லின் தாக்குதலுக்கு ஆன சமயத்தில், சாலை மார்க்கம் தடை செய்யப்பட்டிருந்தால், அமெரிக்க விமானம் மூலம் உணவு, தண்ணீரை விநியோகம் செய்திருந்தது.

மனிதாபிமான வழித்தடங்கள் உருவாக்கப்பட்ட இடங்கள்

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து மனிதாபிமான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக, 1938 முதல் 1939 வரை Kindertransport என்ற பேரில், நாஜி கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து யூத குழந்தைகள் ஐக்கிய ராஜியத்திற்கு மாற்றப்பட்டனர்.

1992-1995 போஸ்னியாவின் சரஜேவோ தாக்குதல் மற்றும் 2018 சிரியாவின் கௌட்டா தாக்குதலின்போதும், மனிதாபிமான வழித்தடங்கள் அமைக்கப்பட்டன.

எவ்வாறாயினும், பல போர்கள் மற்றும் மோதல் சமயத்தில், மக்களை வெளியேற்றவும், போர் தற்காலிகமாக போரை நிறுத்துவதற்கு மனிதாபிமான வழித்தடம் அமைப்பதற்கான முயற்சி தோல்வியில் முடிந்ததும் உள்ளது.

உதாரணமாக, ஏமனில் நடந்து வரும் போரில், மனிதாபிமான வழித்தடம் அமைப்பதற்கான ஐநா பேச்சுவார்த்தை தொடர் தோல்விகளை சந்திக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment