Advertisment

1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது?

ஆகஸ்ட் 6, 1945 இல், ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி, நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hiroshima nagasaki US atom bomb, japan atom bomb, ஹிரோஷிமா, நாகசாகி, அமெரிக்கா, இரண்டாம் உலகப்போர், hiroshima nuclear attack, US truman,world war II, tamil indian express explained, explained news

ஆகஸ்ட் 6, 1945 இல், ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி, நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். குண்டுவெடிப்பில் இருந்து வந்த கதிர்வீச்சு விளைவுகளும் குண்டு வெடிப்புக்குப் பிறகு பரவிய தூசும் புழுதியும் பலரையும் பாதித்தது.

Advertisment

குண்டு வெடித்தபின், ஹிரோஷிமாவை ஊடுருவமுடியாத தூசுகளும் புகைமூட்ட மேகமும் மூடியுள்ளது என்று அமெரிக்காவின் போர் துறை கூறியது.

கடந்த வாரம், ஹிரோஷிமா நகரில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம், “கறுப்பு மழையில்”(குண்டு வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட தூசு புகைமண்டலம்) தப்பிப்பிழைத்தவர்களை அங்கீகரித்தது. குண்டு வெடிப்பிற்குப் பிந்தைய மழையால் அவர்கள் மருத்துவச் சூழலுக்கு ஆளானார்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.

எனவே, ஹிபாகுஷாஸ் என்று அழைக்கப்படும் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பியவர்களுக்கு இலவச மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள்.

publive-image

அமெரிக்கா ஏன் ஹிரோஷிமா, நாகசாகி மீது குண்டு வீசியது?

1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பின்னர், ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. குறிப்பாக கிழக்குத் தீவுகளின் எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இந்தோசீனாவை நோக்கமாகக் கொள்ள ஜப்பான் படைகள் முடிவு செய்த பின்னர் மோசமடைந்தது. அதனால், அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை சரணடையச் செய்வதற்காக அணுகுண்டுகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்து அதன்படி குண்டு வீசப்பட்டது.

அக்கால அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் எச்சரித்திருந்தார்: “ஜப்பானியர்களின் எந்தவொரு நகரத்திலும் உள்ள ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தையும் மிக விரைவாகவும் முழுமையாகவும் அழிக்க நாங்கள் இப்போது தயாராக உள்ளோம். ஜப்பானிய மக்களை முற்றிலுமாக அழிப்பதில் இருந்து காப்பாற்றுவதற்காகவே ஜூலை 26இல் இறுதி எச்சரிக்கை போட்ஸ்டாமில் வெளியிடப்பட்டது. அவர்கள் இப்போது எங்கள் விதிமுறைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களுடைய வானத்தில் இருந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.” என்று எச்சரித்தார்.

ஆனால், வேறு கோட்பாடுகளும் உள்ளன. வரலாற்றாசிரியர் கார் அல்பெரோவிட்ஸ் தனது 1965 என்ற புத்தகத்தில், ஜப்பானிய நகரங்களின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்பது “சோவியத் யூனியனுடன் போருக்குப் பின்னர் ராஜதந்திர பேரம் பேசுவதற்கு ஒரு வலுவான நிலையைப் பெறுவதற்கான நோக்கம் கொண்டது. ஜப்பானியர்களை சரணடைவதற்கு கட்டாயப்படுத்த ஆயுதங்கள் தேவையில்லை” என்று ஒரு அமெரிக்க வலைதளம் குறிப்பிடுகிறது.

publive-image

ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9, 1945 இல் என்ன நடந்தது?

ஆகஸ்ட் 6 காலை, உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணியளவில், பி -29 அணுகுண்டு வைத்திருந்த எனோலா கே விமானம் "லிட்டில் பாய்" என்ற அணுகுண்டை ஹிரோஷிமா நகரில் 20,000 டன் டி.என்.டி சக்தியுடன் போட்டது. அப்போது பெரும்பாலான தொழிற்சாலை தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை செய்வதாக அறிவித்திருந்தனர். பலர் வேலைக்குச் செல்லும் வழியில் இருந்தனர். குழந்தைகள் பள்ளியில் இருந்தனர்.

1946 ஆம் ஆண்டு அமெரிக்க குண்டுவெடிப்பு கணக்கெடுப்பு, நகரத்தின் மையப்பகுதியில் இருந்து சற்று வடமேற்கே குண்டு வெடித்ததில் 80,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று குறிப்பிடுகிறது.

மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜப்பான் உள்ளூர் நேரப்படி காலை 11:00 மணியளவில் நாகசாகி மீது "ஃபேட் மேன்" என்று அழைக்கப்படும் மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டதில் 40,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்.

1946ம் ஆண்டு கணக்கெடுப்பில், நாகசாகியின் சீரற்ற நிலப்பரப்பு காரணமாக, குண்டு வெடித்ததில் பள்ளத்தாக்கில் சேதம் ஏற்பட்டது. முழுமையான பேரழிவின் பரப்பளவு மிகவும் சிறியதாக இருந்தது. அது சுமார் 1.8 சதுர மைல்களுக்கு மேல் இருந்தது.

அணுகுண்டு வீச ஹிரோஷிமா, நாகசாகி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

ஒரு நகரத்தில் குண்டுவீசுவது மட்டுமே போதுமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ட்ரூமன் முடிவு செய்தார். ஆகவே, அந்த பகுதியில் உள்ள ராணுவ உற்பத்தியை மனதில் கொண்டு இந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கியோட்டோவைப் போல இந்த இடங்கள் ஜப்பானுக்கு கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டிருக்கவில்லை என்று உறுதி செய்யபட்டது. ஏனென்றால், போர்களில் எதிர்த்துப் போராடும் ஜப்பானின் திறனை அழிப்பதே அதன் நோக்கம்.

ஹிரோஷிமா ஆரம்பத்தில் சுமார் 3,18,000 மக்கள் தொகை கொண்ட ராணுவ இலக்காக இருந்தது. அந்த நேரத்தில் ஹிரோஷிமா ஜப்பானின் ஏழாவது பெரிய நகரமாக இருந்தது. மேலும், இரண்டாவது சுகோகு பிராந்திய இராணுவத்தின் தலைமையகமாகவும் செயல்பட்டது. இது ஜப்பானின் மிக முக்கியமான ராணுவ நிலையங்களில் ஒன்றாகும். இது மிகப்பெரிய ராணுவ விநியோகக் கிடங்குகளில் ஒன்றாகவும், துருப்புக்கள் மற்றும் விநியோகங்களுக்கான முதன்மையான ராணுவப் போக்குவரத்து இடமாகவும் இருந்தது.

அணுகுண்டு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞான அறிவின் விளைவாகும். இது அமெரிக்காவின் இரண்டு ஆலைகளில் உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் ஒரு அறிவியல் ஆய்வகம் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வந்தது. இவை அனைத்தும் மான்ஹட்டன் திட்டத்தின் எல்லைக்குட்பட்டவையாக இருந்தது. அது இந்த ஆராய்ச்சி முயற்சிக்கான குறியீட்டு பெயராகும்.

ட்ரூமனுக்கு முன்பு, அமெரிக்க அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 1939ம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்ற பின்னர், அணு ஆயுதத்தை உருவாக்குவது குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தார். அவர் நாஜி ஜெர்மனி ஒரு அணு ஆயுதத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது குறித்து ரூஸ்வெல்ட்டை எச்சரித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
America Japan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment