பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியக் காவலில் இறந்தால் என்ன நடக்கிறது?

Pakistani civilians die in Indian custody சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகப் புகார் தெரிவித்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாகவும் ஜே.ஐ.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

What happens when pakistani civilians die in indian custody explained Tamil News
What happens when Pakistani civilians die in Indian custody
What happens to Pakistani Civilians in India Tamil News : குஜராத்தில் உள்ள பூஜ், கச்சில் கூட்டு விசாரணை மையத்தில் (ஜே.ஐ.சி) கைதிகளாக தடுத்து வைக்கப்பட்ட நான்கு பாகிஸ்தான் பிரஜைகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறந்தனர். நான்கு பேருக்கும் இறப்புக்கான முதன்மையான காரணங்களாக “மன நோய்” மற்றும் “சுவாசக் கோளாறு” ஆகியவற்றை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நான்கு உடல்களில் மூன்று ஜாம் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் சடலக் கிடங்கில் தொடர்ந்து கிடக்கின்றன.
நான்கு மரணங்கள்
* நவம்பர் 4, 2020 அன்று, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முசாபர்கர் மாவட்டத்தில் உள்ள காந்தியார் கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் பைஸ்பாக்ஸ் (50), மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பூஜில் உள்ள ஜி கே பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் இறந்தார்.
* நவம்பர் 19, 2020 அன்று, மற்றொரு பாகிஸ்தானிய நாட்டைச் சேர்ந்த ஆஷிக் அலி சாதிக் அலி (45) கோவிட் -19-க்கு பாசிட்டிவ் என முடிவு வந்த பின்னர் இறந்தார்.
* பாகிஸ்தானியர்களான சையத் அப்துல் ரஹீம் (32) மற்றும் அரபு என்ற அர்பாஸ் மிஸ்ரிபாய் ஜாட் (60) ஆகிய இருவரும் முறையே 2020-ம் ஆண்டு டிசம்பர் 1 மற்றும் 2021-ம் ஆண்டு ஜனவரி 11 அன்று இறந்தனர்.
இந்த நான்கு நிகழ்வுகளிலும், பாகிஸ்தானியப் பிரஜைகள் “மனநோயால்” பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகப் புகார் தெரிவித்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாகவும் ஜே.ஐ.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏன் மன நோய்?

பாகிஸ்தானியப் பிரஜைகள் என்று நம்பப்படும் சுமார் 20 பேர் தற்போது ஜே.ஐ.சி-யில் இருந்ததாக நம்புகின்றனர். அவர்கள் அனைவரும் கச்சில் உள்ள நில எல்லையிலோ அல்லது கச் கடற்கரையிலிருந்து கடல் எல்லையிலோ இந்தியப் பகுதிக்குச் சென்றபின் தடுத்து வைக்கப்பட்டனர்.

கச்சில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, நில எல்லையைத் தாண்டிய ஏராளமான பாகிஸ்தானியப் பிரஜைகள் மனரீதியாக நிலையற்றவர்கள் என்றும் “கவனக்குறைவாக” இந்தியாவுக்குள் நுழைகிறார்கள் என்றும் கூறினார். JIC-ல் உள்ள சில கைதிகள், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கூட சொல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நபர்களை மனநோய் சிகிச்சைக்காக மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

குஜராத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை, பார்டர் பில்லர்ஸ்களால் (border pillars) குறிக்கப்பட்டது. ஆனால், அவை நெருக்கமாக ஒன்றிணைக்கப்படவில்லை. எனவே, கவனமில்லாத குடிமகன் உணராமல் எல்லையைக் கடக்க முடிகிறது. பெரும்பாலான பாகிஸ்தானியப் பிரஜைகள் தங்கள் வழியை இழந்த பின்னர் எல்லையைக் கடக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் தனியாக இருக்கிறார்கள். 2015-ம் ஆண்டில் ராபருக்கு அருகில் ஒன்பது பேர் கொண்ட ஒரு குடும்பத்தைத் தடுத்து வைத்தது விதிவிலக்கு.

மேலும், சில பாகிஸ்தான் மீனவர்கள் கவனக்குறைவாக இந்தியப் பிராந்திய நீரில் குறிப்பாக சர் க்ரீக் பகுதியில் நுழைகிறார்கள்.

சிறை இல்லாமல் ஏன் ஜே.ஐ.சி?

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழைவோர் இந்திய பாஸ்போர்ட் சட்டம், பாஸ்போர்ட் விதிகள் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.

கச் நகரில், பாகிஸ்தானியப் பிரஜைகள் இந்தியப் பகுதிக்குச் செல்வது பொதுவாக எல்லைப் பாதுகாப்புப் படையால் (Border Security Force) தடுத்து வைக்கப்படுகிறது. பிறகு அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறார்கள்.

எல்லை மாவட்டமாக இருப்பதால், சட்டவிரோதமாகக் கச்சுக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டினர், மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள், ஆயுதப்படைகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் ஆர்வமுள்ள நபர்களாகக் கருதப்படுகிறார்கள். பல ஏஜென்சிகளால் விசாரிக்கப்படுவதற்கு வசதியாக, இந்த நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அறியப்படாத குற்றப்பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜெஐசியில்  வைக்கப்படுகிறார்கள்.

பெரும்பாலும், இந்த ஏஜென்சிகள் தனிநபருக்கு ஆரோக்கியமான மனநிலை இல்லை என்று முடிவு செய்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த நபர்களை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதால் எந்தவொரு குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. எனவே அவர்கள் ஜே.ஐ.சி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் சிறைத் தண்டனைகளை நிறைவு செய்தவர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியாதவர்கள் இரு அரசாங்கங்களும் தங்கள் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முடிக்கும் வரை ஜே.ஐ.சி-யில் இருக்கவேண்டும்.

தாமதத்திற்கான காரணங்கள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள பல பாகிஸ்தானியர்களின் மோசமான மன நலம் மற்றும் தங்களைப் பற்றிய போதுமான தகவல்களை, ஆவணங்கள் மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ கூட அவர்களால் பெரும்பாலும் வழங்க முடியவில்லை என்பது சரிபார்ப்பைக் கடினமாக்குகிறது. மேலும், அவர்களைத் திருப்பி அனுப்புவதில் தாமதத்திற்குப் பங்களிக்கிறது.

ஒரு கைதி இறந்த சந்தர்ப்பங்களில் அதன் சிக்கல் மேலும் அதிகரிக்கிறது.

இறப்பு வழக்குகளில், பூஜின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் விசாரணை பஞ்சனாமாவுக்கு உடலைப் பரிசோதித்தார். அதன்பிறகு, பூஜில் உள்ள ஜி.கே. பொது மருத்துவமனை அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படுவதால், உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜாம்நகரில் உள்ள ஜி.ஜி பொது மருத்துவமனைக்கு மருத்துவர்கள் குழு அனுப்பியது. மேலும், மருத்துவ-சட்ட வழக்குகளில் பிரேதப் பரிசோதனை செய்யத் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை .

கைதியின் மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய, உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் சோதனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இது மேலும் நேரத்தை அதிகப்படுத்துகின்றன.

இந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்ததும், பூஜில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மரணத்தைப் பற்றி மாநில உள்துறைக்குத் தெரிவிக்கவேண்டும். பிறகு இது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதுகிறது. உள்துறை அமைச்சகம் வெளியுறவு அமைச்சகத்தை அறிவிக்கிறது. இறுதியாக இது இந்த விஷயத்தை இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதருக்கு தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்கிறார். அதன்பிறகு பாகிஸ்தான் தரப்பில் சரிபார்ப்பு செயல்முறை நடைபெறும். சம்பந்தப்பட்ட நபரின் தேசியத்தை இஸ்லாமாபாத் உறுதிசெய்தால், உடலைக் கோருவதற்கான தயார்நிலையைத் தூதர் தெரிவிப்பார். பாகிஸ்தானுக்கு நேரடி விமானங்கள் இல்லாததால், உடல்கள் பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் அத்தாரி-வாகா கிராசிங் வழியாக ஒப்படைக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியப் பொதுமக்கள்

ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் பாகிஸ்தானியர்களால் பிடிபட்டுள்ளனர். இந்த மீனவர்கள் பொதுவாக கராச்சிக்கு அருகிலுள்ள லந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு மீனவர் காவலில் இறந்தால், அவருடைய உடல் பொதுவாகப் பாகிஸ்தான் தன்னார்வ தொண்டு நிறுவனமான எதி ஃபவுண்டேஷன் நடத்தும் சவக்கிடங்கிற்கு மாற்றப்படுகிறது.

இந்தியாவில் அதன் பிரதிநிதிகளைத் தொடர்புகொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் வழக்கை என்ஜிஓ எடுத்துக்கொள்கிறது. ஆர்வலர்கள் பொதுவாக MEA-க்கு எழுதுகிறார்கள். பின்னர் MEA உடனடியாக பாகிஸ்தான் அரசாங்கத்தை அடைகிறது. இது உடல்கள் மற்றும் கைதிகளை விரைவாகத் திருப்பி அனுப்புவதை உறுதி செய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What happens when pakistani civilians die in indian custody explained tamil news

Next Story
ரேபிட் ரத்தப் பரிசோதனை கணிப்பு: யார், யாருக்கு கொரோனா தீவிரமாக உருவாகும்?Rapid Blood Test predicts covid patients develop severe disease Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express