Advertisment

RTI Amendment Bill 2019: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாற்றம்! எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள்?

Center Proposed Changes In RTI Bill 2019: தகவல் அறியும் உரிமைச் சட்டம் சுதந்திர இந்தியாவின் மிக வெற்றிகரமான சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சாதாரண குடிமக்களுக்கு அரசாங்க அதிகாரிகளை கேள்வி கேட்கும் நம்பிக்கையையும் உரிமையையும் அளித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RTI Amendment Bill, RTI Bill 2019

RTI Amendment Bill, RTI Bill 2019

ஷியாம்லால் யாதவ்

Advertisment

Changes in RTI Act: தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டம்: அரசு தகவல் ஆணையர்களுக்கு சம்பளம் மற்றும் சேவை விதிகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரங்களை வழங்கும் திருத்தங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த சட்டத்தை எவ்வாறு மாற்றுகிறது இதற்கு ஏன் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன?

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டம் 2019 மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. அது மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களுக்கு சம்பளம் மற்றும் சேவை காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்க பரிந்துரைக்கின்றன. அரசின் இந்த நகர்வு எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தூண்டியிருக்கிறது.

என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-இல் பிரிவு 13 மற்றும் 16 இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அசல் சட்டத்தில் பிரிவு 13 மத்திய தகவல் ஆணையர் மறும் தகவல் ஆணையர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கிறது (அல்லது 65 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ). இந்த நியமனத்தில் இது போன்ற கால நிர்ணயத்தை மத்திய அரசால் பரிந்துரைக்கப்படலாம் என்று இந்த திருத்தம் தெரிவிக்கிறது. மேலும், தலைமை தகவல் ஆணையர், சம்பளம், பிற படிகள் மற்றும் சேவை காலம் தலைமை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும் என்றும் ஒரு தகவல் ஆணையருடையவை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும் என்றும் பிரிவு 13 கூறுகிறது. தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் சம்பளம், இதர படிகள், மற்றும் சேவை காலம் போன்றவைகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறுகிறது.

அசல் சட்டத்தில் பிரிவு 16 மாநில அளவிலான தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் தகவல் ஆணையர்களுடன் தொடர்புடையது. இது மாநில அளவிலான தலைமை தகவல் ஆணையர்களின் சேவை காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கிறது (அல்லது 65 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ). இந்த நியமணங்களின் காலம் போன்றவை மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் என்று இந்த திருத்தம் தெரிவிக்கிறது. மேலும் அசல் சட்டம் மாநில தலைமை தகவல் ஆணையரின் சம்பளம், சேவை காலம் போன்றவை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும். என்றும் மாநில தகவல் ஆணையரின் சம்பளம் மற்றும் சேவை காலம் போன்றவை மாநில தலைமை செயலாளருடையதைப் போல இருக்கும் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்த திருத்தம் இவை எல்லாம் மத்திய அரசால் பரிந்துரைக்கலாம் என்று தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள்?

அசல் சட்டம் தற்போதுள்ள விதிகளின்படி சம்பளம் மற்றும் பதவி காலங்களை அளவிட்டு வரையறுத்துள்ளது. இந்த திருத்தங்கள் தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் ஆணையர்களின் நியமனம் சம்பளம், பதவிக்காலம் ஆகியவற்றை ஒரு வழக்கு அடிப்படையில் அரசாங்கத்தால் தீர்மாணிக்க முடியும் என்பதைக் குறிக்கும் வகையில் இது பார்க்கப்படுகிறது.

இது தகவல் அறியும் உரிமை சட்ட அதிகாரிகளின் சுதந்திரத்தை பறிக்கும் என்று எதிக்கட்சிகள் வாதிடுகின்றன. மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, இந்த மசோதா மத்திய தகவல் ஆணையரின் ‘சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்’ என்றும் சசி தரூர் இதை ‘தகவல் அறியும் உரிமைச் சட்ட ஒழிப்பு மசோதா” என்றும் இது அந்நிறுவனத்தின் சுதந்திரத்தை அகற்றுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும், இதற்கு திரிணாமுல் கங்கிரஸ், திமுக, மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு கடந்த ஆண்டுகூட இந்த திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த முயற்சித்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை திரும்ப பெற்றது.

திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தால் கூறப்பட்ட காரணங்கள் யாவை?

இந்த பொருளின் கூற்றுப்படி, “இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களின் ஆணை வேறுபட்டது. எனவே, அவர்களின் நிலை மற்றும் சேவை விதிகளை அதற்கேற்ப பகுத்தறிந்து செய்ய வேண்டும்” என்று கூறுகிறது. திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, பிரதமர் அலுவலக மாநிலங்கள் விவகாரத்துறை அமைச்சர் ஜீதேந்திர சிங் கூறுகையில், “அநேகமாக அன்றைய அரசாங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ஐ அவசரமாக நிறைவேற்றுவதற்காக பல விஷயங்களை கவனிக்கவில்லை. மத்திய தகவல் ஆணையருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது தீர்ப்புகளை உயர் நீதிமன்றங்களில் எதிர்த்து முறையிடலாம் என்பது எப்படி இருக்கும்? தவிர தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்திற்கு விதிகளை உருவாக்கும் அதிகாரங்களை வழங்கவில்லை. நாங்கள் திருத்தத்தின் மூலம் அவற்றை சரி செய்கிறோம்” என்று கூறினார்.

2005 சட்டத்தில் இந்த விதிகள் எந்த சூழ்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டன?

அசல் சட்டத்துக்கு வழிவகுக்கும் இந்த மசோதா தனி மற்றும் பொது குறைகேட்பு, சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றில் பாஜக உறுபினர்கள் ராம்நாத் கோவிந்த் (தற்போதைய குடியரசுத் தலைவர்) பலவந்த் ஆப்தே, ராம்ஜெத் மலானி ஆகியோர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவால் விவாதிக்கப்பட்டது. முதலில், தலைமை தகவல் ஆணையர்களின் சம்பளம் இந்திய அரசாங்கத்தின் செயலாளர்களுக்கு சமமானதாக இருக்கும் என்றும், தகவல் ஆணையர்களின் சம்பளம் மத்திய செயலாளர்களுக்கு கூடுதல் செயலாளர்கள் அல்லது இணை செயலாளர்களின் சம்பளத்திற்கு சமமாக இருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது. ஈ.எம்.எஸ். நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு 2005 இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது அதில், “அந்தக் குழு உணர்கிறது… தகவல் ஆணையர் (தலைமை தகவல் ஆணையர் என்று பின்னர் பதவி மறுபெயரிடப்பட்டது) மற்றும் துணை தகவல் ஆணையர்கள் (தற்போது தகவல் ஆணையர்கள்), முறையே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு வழங்கும் மரியாதையை நிலையை வழங்கி பொருத்தமான ஏற்பாட்டைச் சேர்க்க பரிந்துரைக்கிறது"

கடந்த 14 ஆண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த நோக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சுதந்திர இந்தியாவின் மிக வெற்றிகரமான சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சாதாரண குடிமக்களுக்கு அரசாங்க அதிகாரிகளை கேள்வி கேட்கும் நம்பிக்கையையும் உரிமையையும் அளித்துள்ளது. மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 60 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது குடிமக்கள் மற்றும் ஊடகங்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதற்கு தடையாக செயல்பட்டதாக கருதப்படுகிறது.

Rti
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment