Advertisment

கொரோனா இரண்டாம் அலையில் என்ன மாறுபட்டுள்ளது?

10.03 கோடி பேர் கோவிஷீல்டின் முதல் டோஸை பெற்றுள்ளனர். அதில் 0.02% அதாவது 17,145 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Explained: What has changed in second wave of Covid-19?

 Kaunain Sheriff M

Advertisment

What has changed in second wave of Covid-19? : 1918-20 ஆண்டுகளில் ஏற்பட்ட ஸ்பேனிஷ் ஃப்ளூவைப் போன்று கொரோனா இரண்டாம் அலையும் முதல் அலையைக் காட்டிலும் மிகுந்த ஆபத்து உடையதாக உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொற்றைக் காட்டிலும் பல்வேறு வகையில் இது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கவலை மற்றும் மன அழுத்தத்தையும் இது தருகிறது. இரண்டாம் அலை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 விசயங்கள் இங்கே

ஒரு வருடம் நான் மிகவும் பாதுகாப்பாக இருந்தேன். இப்போது ஏன் எனக்கு கோவிட் வர வேண்டும்?

நோய் அறிகுறி ஏதும் இல்லாத ஒரு நபர் இந்த தொற்றை பரப்ப முடியும். இந்தியாவில் ஏற்பட்ட தொற்றில் 80 - 85%த்தினர் நோய் அறிகுறிகள் ஏதும் அற்றவர்கள் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் தொடர்ந்து அதிக அளவில் இந்த நோயை பரப்புகின்றனர். மூடப்பட்ட ஒரு அரங்கில் அல்லது வீட்டில் அவர்கள் பேசும் போது கூட நோயை பரப்ப முடியும். மேலும் நோய் அறிகுறி அற்றவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில்லை.

அளவுக்கு அதிகமாக நோய் அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் மற்றும் பலதரப்பட்ட மாறுப்பட்ட கொரோனா வைரஸ்களின் இருப்பும் தான் முந்தைய அலையைக் காட்டிலும் அதிக பாதிப்பை தற்போது ஏற்படுத்துகிறது. உதாரணமாக, டெல்லி மற்றும் பஞ்சாபில் மரபணு கண்காணிப்பின் போது இங்கிலாந்தின் திரிபு கணிசமான விகிதத்தில் கண்டறியப்பட்டது, இது 50% அதிக பரவலைக் காட்டியுள்ளது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட B1.671 மாறுபாட்டில் காணப்படும் L452R பிறழ்வு அதிகரித்த தொற்றுநோயுடன் தொடர்புடையது.

மேலும் படிக்க : சென்னையை அச்சுறுத்தும் கொரோனா; கட்டுக்குள் கொண்டு வருமா மாநகராட்சி?

இரண்டாவதாக, இந்த அலையின் போது பாதுகாக்கப்பட வேண்டிய மண்டலங்களில் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக இருக்கிறது. நகரங்களில் அரசு, அதிகாரிகளை மைக்ரோ மண்டலங்களை உருவாக்க உத்தரவிட்டுள்ளனர். அதில் ஒரு வீடு அல்லது தளம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும். இதில் மிகவும் செயல்திறன் மிக்க கண்காணிப்பு ஏதும் இல்லாத காரணத்தால் வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கிறது. முன்பு ஒரு தெரு அல்லது ஒருமுழுமையான குடியிருப்பு பகுதி கண்டெய்ன்மெண்ட் ஸோனாக அறிவிக்கப்பட்டதால் வைரஸ் பரவும் விதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு அமைத்திருக்கும் குழுக்கள், மகாராஷ்ட்ராவில் அதிக அளவு நோய் பரவும் இடங்களாக இருக்கும் வேலை பார்க்கும் இடம், வீடுகள் ஆகியவை முறையாக கண்காணிக்கப்படவில்லை. அதுவே தொற்றுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று கூறினர். நாடு முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது.

கடந்த ஆண்டைப் போன்று இல்லாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. தொற்று பரவும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் வீட்டில் பார்ட்டி நடத்துதல் மற்றும் கூட்டம் கூடுதல் போன்ற நிகழ்வுகள் அளவுக்கு அதிகமாக கொரோனா தொற்றை ஏற்படுத்துகிறது. சில வைரஸ் வகைகள் மிகவும் அதிகமாக பரவும் தன்மை. மேலும் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டு அதிக அளவில் கொரோனா கண்டெய்ன்மெண்ட் ஸோன்கள் கண்காணிக்கப்படவில்லை. அதனால் தான் தற்போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது. கடந்த முறையைப் போன்று இம்முறை தடம் அறிதல் அதிக அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நோய் அறிகுறி அற்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் 5 முதல் 10 நாட்களில் சோதனை செய்ய வேண்டும். ஆனால் அவை தவறான எதிர்மறையான முடிவை அளித்தால் அவர்கள் தொடர்ந்து தொற்றுநோயை பரப்பலாம்.

மேலும், இந்த எழுச்சியின் போது, சோதனைக்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. முடிவுகள் கிடைக்கும் வரை, பல அறிகுறியற்ற நபர்கள் தனிமைப்படுத்தும் வழிகாட்டுதல்களை மீறி தொற்றுநோயை பரப்புகிறார்கள்.

மேலும் படிக்க : உதவத் தயார்; அரசியல் ஒருமித்த கருத்தே நமக்கு தேவை - சோனியா காந்தி

கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு அதிக வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா?

அனைத்து வயதினரிடமும் நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது, இளைஞர்களிடம் எவ்வளவு நாள் நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என்பது தொடர்பான தரவுகள் குறைவாகவே உள்ளது. ஆனால் இணை நோய்கள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 70 வயது வரை 7 பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கும் குழுவினரிடையே, இறப்பு விகிதமானது கடந்த அலையில் இருந்தது போன்றே தற்போதும் உள்ளது. ஆனால் 70 முதல் 80 மற்றும் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களில் இறப்பு விகிதம் கடந்த அலையை காட்டிலும் தற்போது அதிகமாக உள்ளது. தற்போதுவரை, வயதானவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது. அவர்கல் பாதுகாக்கப்பட வேண்டும். அதிக அளவு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால், அனைத்து வயது பிரிவினரிடையும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. வைரஸ் மேலும் அதிக தொற்று திறன் கொள்வதாலும் சில பிறழ்வுகள் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்துக் கொள்வதாலும், கொரோனா எதிர்ப்பு வழிமுறைகளை இளையோர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.

மருத்துவ ஆக்ஸிஜன் நிலைமை இந்த பேரழிவை எவ்வாறு மாற்றியது?

அரசால் கண்காணிக்கப்படும் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி, இரண்டாம் அலையில் தொற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் 54.5% பேருக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 13.4% அதிகமாகும். 40 மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் இது. மூச்சுத்திணறம் மிகவும் பொதுவான நோய் அறிகுறியாக இருக்கிறது. மிதமான நோய் தொற்றுடன் இருப்பவர்களுக்கு முதன்மை சிகிச்சையாக ஆக்ஸிஜனை இந்திய மருத்துவ மேலாண்மை நெறிமுறை பரிந்துரை செய்கிறது.

இலக்கு 92-96% SpO2, அல்லது COPD நோயாளிகளில் 88-92%. இந்த வகைக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவை. ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுபவர்களின் விகிதம் இன்னும் 10% க்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் தற்போது இந்தியாவில் இதற்காக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 26 லட்சமாக உள்ளது. ஏப்ரல் 24ம் தேதியின் படி, டெல்லி, உ.பி., குஜராத் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் அதிக நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 நாட்களில், 12 மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை 18% ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றில் 83% தொற்று இந்த 12 மாநிலங்களில் தான் ஏற்பட்டுள்ளது.

நான் தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். இருந்தும் எனக்கு ஏன் கொரோனா தொற்று ஏற்பட்டது?

இந்தியாவில் அவசர தேவைக்காக இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அது தொற்றை கட்டுப்படுத்தாது. மாறாக நோயின் தாக்கத்தை குறைக்கும். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழலை தடுக்கும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் நபர்களில் 2 முதல் நான்கு பேர் கொரோனா தடுப்பூசி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

10.03 கோடி பேர் கோவிஷீல்டின் முதல் டோஸை பெற்றுள்ளனர். அதில் 0.02% அதாவது 17,145 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ்களையும் பெற்ற 1.57 கோடி நபர்களில் 0.03% அதாவது 5,014 பேருக்கு கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment