Advertisment

கர்ப்பப்பை புற்றுநோய்க்கு இந்திய தடுப்பூசி: குறைந்த விலையில் விற்பனை; சீரம் அறிவிப்பு

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள செவாவாக் தடுப்பூசி, அதாவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குணப்படுத்தும் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கர்ப்பப்பை புற்றுநோய்க்கு இந்திய தடுப்பூசி: குறைந்த விலையில் விற்பனை; சீரம் அறிவிப்பு

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள செவாவாக் தடுப்பூசி, அதாவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குணப்படுத்தும் தடுப்பூசிக்கு  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

Advertisment

கர்ப்பப்பை புற்று நோயால் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 8 நிமிடங்களில் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்று  நோயால் மரணமடைகிறார். உலகம் முழுவதும் உள்ள பெண்களை பாதிக்கும் இரண்டாவது புற்றுநோயாக கர்ப்பப்பை வாய் புற்று நோய் அமைகிறது. இதுவே 15 முதல் 44 வயது வரை உள்ள பெண்கள் மரணமடைய காரணமாகவும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின், சர்வதே புற்று நோய் தொடர்பான ஆய்வு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு 1.23 லட்சம் பேர் இப்புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், இதில் 67 ஆயிரம் பேர் மரணமடைந்துவிடுவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்கூட்டியே பரிசோதனை செய்வதும், அதற்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதுமே தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விழிப்புணர்வு இல்லாததால், 10 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்களே முன்கூட்டியே பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

தற்போது உள்ள தடுப்பூசிகள்

உலகம் முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு க்ராடாசில் ( Gradasil) , செர்வரிக்ஸ் (Cervarix) என்ற இரு தடுப்பூசிகள் இருக்கிறது. ஒரு டோஸ் க்ராடாசில்  தடுப்பூசியின்  விலை ரூ.2, 800 மற்றும் ஒரு டோஸ் செர்வரிக்ஸ் தடுப்பூசியின் விலை ரூ. 3,299 ஆகும்.

இதுபோன்ற எச்பிவி தடுப்பூசிகள் 2008ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் அவை இடம்பெறவில்லை. 2021ம் ஆண்டு,  ஆய்விதழில்  வெளியான தகவலின்படி, பிஎடிஎச் ( PATH) என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு  2009ம் ஆண்டில் ஆந்திர பிரதேசம், குஜராத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டது. ஆனால் 2010ம் ஆண்டில் இத்தடுப்பூசி செலுத்திக்கொண்ட 7 பெண்கள் உயிரிழந்ததால், இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 2016ம் ஆண்டு ஐசிஎம்ஆர், இளம்பெண்கள், எச்பிவி தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்தியிருப்பது அவசியமாகும் என்று தெரிவித்தது.  

புதிய தடுப்பூசி

சீரம் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கு   இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்ததன் மூலமாக எச்பிவி தடுப்பூசிகள் குறைந்த விலையில் கிடைக்கும். இதனால் 9 முதல் 14 வயதுவரை உள்ள 5 கோடி பெண் குழந்தைகள் பயனடைவார்கள். இதனால் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்க முடியும்.

SII என்று அழைக்கப்படும் தடுப்பூசிக்கு ஜீலை மாதம் இரண்டாம் வாரத்தில்  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்தது. இந்த வருடத்திற்குள், SII தடுப்பூசிகளை சந்தைப்படுத்த உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவாலா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் சோதனை முடிவுகள்

தனியார் மற்றும் அரசு இணைந்து நடத்தும் , SII தடுப்பூசியின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆய்வுகள் கொரோனா காலக்கட்டத்தில் நடைபெற்றது.

2019ம் ஆண்டில்,  இந்தியாவில் உள்ள 12 நகரங்களைச் சேர்ந்த நபர்கள் இந்த சோதனையில் கலந்துகொண்டனர். ஆய்வு முடிவுகள் 100% வெற்றியடைந்துள்ளது. 9ம் வயது முதல் இத்தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். முதல் முறையாக பாலியல் உறவில் ஈடுபடுதற்கு முன்பு பெண்கள் இந்தத் தடுப்புசியை செலுத்திக்கொண்டால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுத்துவிட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment