Advertisment

மாணவ- மாணவிகள் சீருடை: கர்நாடகா விதிமுறை என்ன?

அரசு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
What Karnataka order on student uniforms says

 Johnson T A 

Advertisment

 What Karnataka order on student uniforms says : கர்நாடக அரசின் முன் - பல்கலைக்கழக கல்வித்துறை (Pre-University Education), பிப்ரவரி 5ம் தேதி அன்று முன்-பல்கலைக்கழக கல்வி பெறும் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளது. ஆனால் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வரும் போது தலையில் ஹிஜாப் அணிவதை தடை செய்தது தனி மனிதரின் மத நம்பிக்கைக்கான உரிமையை மீறுவதாக அர்த்தப்படாது என்று கூறியுள்ளது.

சர்ச்சை

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு, மாநிலங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் இந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த வாரம், பல்கலைக் கழகத்திற்கு முந்தைய கல்வித் துறையின் துணைச் செயலர் வெளியிட்ட கடிதத்தில், மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் என்று பரிந்துரைக்கப்படவில்லை என்றும் உடுப்பி மாவட்டத்தில் சில மாணவிகள் அவர்களின் விருப்பத்தில் அணிந்த ஹிஜாப் உடையுடன் வகுப்பிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசின் அறிக்கை, கல்லூரி நிர்வாகம் சீருடை தொடர்பாக விதிக்கும் விதிகள், ஹிஜாப் தடை உள்ளிட்ட விதிகள் அனைத்தும், இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீடிக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.

புதிய உத்தரவு

அரசின் அனைத்து ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் உள்ளூர் கல்லூரி மேம்பாட்டு கழகம் விதிக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் சீருடைகள் இல்லாத கல்லூரிகளில் ஒற்றுமையை பாதுகாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள சீருடைக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளிகள் தங்கள் கவுன்சில் முடிவு செய்யும் சீருடைகளை பின்பற்றலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, ​​அரசு நடத்தும் பள்ளிகளில் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஆனால் PU கல்லூரிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடைகள் உடுத்திக் கொள்ளலாம்.

பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் செயல்களை கைவிட, மத, மொழி மற்றும் பிராந்திய அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் பொதுவான சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்துவதற்காக மாநில அரசு விதிகளை பரிந்துரைக்கலாம் என்று மூன்று பக்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா கல்விச் சட்டம், 1983 இன் பிரிவு 7 (2) (g) (v) மற்றும் கல்விச் சட்டத்தின் பிரிவு 133 (2) இன் கீழ், சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி கவுன்சில்களுக்கு, கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், சில கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அந்தந்த மதத்தின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதும், இது நிறுவனங்களில் சமத்துவம் மற்றும் சீரான தன்மையைப் பாதிக்கிறது என்பதும் கல்வித் துறையால் கவனிக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப்களை தடை செய்வது அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள, மதத்தை பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என்ற வாதத்தை நியாயப்படுத்த உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளது அரசின் இந்த உத்தரவு. உச்ச நீதிமன்றம் Asha Renjen and Others vs பீகார் மாநிலம் (2017) வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ள “தனிநபர் நலன் பெரிய பொது நலனுக்கு வழிவகுக்க வேண்டும்” என்பதை டிசம்பர் 4, 2018 அன்று சுட்டிக்காட்டிய, கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பும் இதில் அடங்கும்.

மேற்கோள்கள்

பாடத்திட்டங்களை வரையறுக்கும் கர்நாடகா கல்விச் சட்டத்தின் ஷரத்து 7(2)(g)ஐ அரசாங்கம் மேற்கோளிட்டு அதில் கல்லூரி வளாகங்களில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் பராமரிக்கும் ஆடைக் குறித்த உத்தரவை வெளியிடுகிறது.

ஷரத்து 7(2)(g) பாடத்திட்டமானது "அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பின்வரும் கடமைகளின் உணர்வை" புகுத்த வேண்டும் என்று கூறுகிறது மற்றும் பிரிவு 7(2)(g)(i) பாடத்திட்டங்கள் "அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அதன் நிறுவனங்கள், கொள்கைகள் தேசிய கீதம், தேசியக்கொடி ஆகியவற்றை மதிக்க வேண்டும்” என்று கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment