Advertisment

டெல்லி கலவரம் : அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும்?

பொது ஒழுங்கினை பாதுகாக்க ஆயுதப்படையினை பயன்படுத்துவது மாநில அரசுகளின் உச்ச வரம்பிற்கு அப்பாற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi violence

Force deployed at Khjuri Khass on tuesday after riots,Express Photo by Gajendra Yadav,250220

டெல்லி கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அம்மாநில அரசினால் முடியுமா? அந்த அரசிற்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரங்கள் என்னென்ன என்ற கேள்விகள், டெல்லியில் போராட்டம் உக்கிரம் அடையும் போது நம் அனைவரின் மனதிலும் தோன்றுகிறது. இந்த கேள்விக்கான பதில் நேரடியாக நமக்கு கிடைக்கவில்லை என்ற போதும் டெல்லி அரசு எப்படி இயங்குகிறது? இந்த போராட்டத்தை அவர்கள் எப்படி கையாளலாம்? அதற்கான சட்டரீதியான வழிமுறைகள் என்ன? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

Advertisment

ராணுவத்தின் உதவியுடன் டெல்லியில் சட்ட ஒழுங்கினை நிலை நிறுத்த  டெல்லி அரசு மத்திய அரசின் உதவியை நாட முடியுமா? 

இந்திய தலைநகர் டெல்லிக்கான, சிறப்பு அங்கீகாரங்களை வழங்குகிறது இந்திய அரசியல் சாசனம் 239 AA. சட்ட உருவாக்கம் மற்றும் நிர்வாகத்திற்கான உறுப்பினர்களை தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கவும், அமைச்சரவையை உருவாக்கவும் மட்டுமே இந்த சிறப்பு அங்கீகாரம் வழி செய்கிறது. ஆனால் பொது மற்றும் காவல்துறை என இரண்டும் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

ஆனாலும் கூட கிரிமினல் ப்ரோசிஜர் கோட் (Criminal Procedure Code) 129 மற்றும் 130 எக்ஸ்க்யூட்டிவ் மாஜிஸ்திரேட்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. 129 CrPC சட்டத்திற்கு மாறாக எங்கேனும் பொதுமக்கள் பிரச்சனை செய்கிறார்கள் என்றால் அவர்களை அங்கிருந்து கலைந்து போகக் கூறும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கிறார். இது தோல்வியில் முடிவடையும் போது அவர் காவல்துறையின் உதவியுடன் அவர்களை அங்கிருந்து அனுப்ப முடியும். அதுவும் முடியாத பட்சத்தில் 130 CrPC-ன் கீழ் ஆயுதமேந்திய காவல்துறையின் உதவுடன் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அம்மக்களின் செயல்பாடுகள் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே, எக்ஸ்க்யூட்டிவ் மாஜிஸ்திரேட், முதல்வரிடம் விவரத்தை தெரிவித்துவிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்கான உத்தரவுகளை பிறப்பிப்பார்.

மேலும் படிக்க : ‘ஆபத்தான நிலையை எட்டிய டெல்லி; ராணுவத்தை அனுப்புங்கள்’ – முதல்வர் கேஜ்ரிவால்

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 130 CrPC எப்படி இயங்குகிறது?

இந்த சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகள் உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கூடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்த காவல்துறையால் முடியவில்லை என்றால், அதே சமயத்தில் அந்த கூட்டத்தால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவினால், உயர்மட்ட தலைவராக இருக்கும் எக்ஸ்க்யூட்டிவ் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் ஆயுதமேந்திய ராணுவத்தினரால் அந்த கூட்டம் கலைக்கப்படலாம்.

ஆயுதப்படை அதிகாரி, மாஜிஸ்திரரேட்டரின் உத்தரவை ஏற்றுக் கொள்ள்ள வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 130 சட்டத்திற்கு புறம்பாக குழுமியிருக்கும் மக்களை கலைந்து செல்ல முழுமையான அதிகாரத்தினை மாஜிஸ்திரேட்டருக்கு வழங்கியுள்ளது. ஆயுதப்படையின் எந்த பிரிவினருக்கும், தலைவருக்கும் அவர் உத்தரவு பிறப்பிக்கலாம். பிரச்சனை செய்பவர்களை கைது செய்து வைக்கவும் மாஜிஸ்திரேட்டருக்கு உரிமை உண்டு. அந்த கூட்டத்தினை கலைக்க கைது செய்யப்படலாம் அல்லது சட்டத்திற்கு முன்னே அவர்களை நிறுத்தி தண்டனை வாங்கித் தரவும் அவரால் இயலும்.

மேலும் படிக்க : ஷாகீன் பாக் போராட்டம் – சமரச குழு அறிக்கையில் சமரசம் அடைந்ததா சுப்ரீம் கோர்ட்?

அப்படி கூட்டத்தினை கலைக்கும் போது ஆயுதப் படையினர் மிகவும் குறைவான அடக்குமுறையினை (Force) பயன்படுத்த வேண்டும். அந்த இடத்தில், அந்த கூட்டத்தை கலைக்க போதுமானதாக இருக்கும் என்று அதிகாரி கருதும் குறைந்தபட்ச அதிகாரத்தினை பயன்படுத்தி அந்த கூட்டத்தினை கலைக்கலாம்.

இதர மாநிலங்களும் ஆயுதப்படையின் உதவியை கோர முடியுமா?

சட்டம் மற்றும் காவல்துறை மாநில வரம்புகளுக்கு உட்படும் போது, மாநில அரசு, பொது ஒழுங்கினை நிலைநிறுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம். உட்குழப்பம் என்று வரையறுக்கப்படாத பொது ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெற்றாலும் கூட, அரசியல் சாசனம் 355-ன் கீழ் மாநில அரசு மத்திய அரசின் உதவியை கோர முடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 130, சட்டத்திற்கு புறம்பாக கூடியிருக்கும் மக்களை கலைக்க எக்ஸ்க்யூட்டிவ் மாஜிஸ்திரேட்டிற்கு மட்டுமே உரிமை வழங்கியுள்ளது. வேறெந்த மாநிலத்திலோ அல்லது தலைவர்களோ நேரடியாக ஆயுதப்படையின் உதவியை கோரும் வகையில் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்படவில்லை.

இந்திய அரசியல் சாசனத்தின் 7வது பிரிவில் ஆயுதப்படை பிரயோகம் குறித்து கூறப்பட்டுள்ளது. பொது ஒழுங்கினை பாதுகாக்க ஆயுதப்படையினை பயன்படுத்துவது மாநில அரசுகளின் உச்ச வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தின் போது, எப்போது ஆயுதப்படை வரவழைக்கப்பட்டது?

சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் 1984ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது, டெல்லியின் துணை நிலை ஆளுநராக பணியாற்றினார் பி.ஜி.கவாய். அவர் தான் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர ஆயுதப்படையின் உதவியை நாடினார். நீதிபதி ரங்கநாத் விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் போது, டெல்லி நிர்வாகம், ஆயுதப்படையின் உதவியை நாட அதிக நேரம் எடுத்துக் கொண்டது என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தி கொலை நடந்த அன்று இரவு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அப்போது டெல்லியில் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நானாவதி ஆணையமும் நீதிபதி ரங்கநாத் ஆணையத்தின் இந்த கூற்றினை ஏற்றுக் கொண்டது. அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த டார்லோச்சன் சிங், துணை நிலை ஆளுநரை அழைத்து, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் ராணுவத்தின் உதவி தேவைப்படும் போது அதையும் பயன்படுத்துங்கள் என்று அவர் கூறியதாகவும் நானாவதி கமிஷன் அறிவித்தது.

டெல்லியின் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் ஜே.எஸ். ஜம்வாலுக்கு, நவம்பர் மாதம் 1ம் தேதி, 1984ம் ஆண்டு காலை 11 மணி அளவில் ராணுவ தளபதியிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் டெல்லி பொது ஒழுங்கினை பாதுகாக்க ஏதாவது அழைப்பு வந்தால் அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் காவாய்க்கு அழைப்பு விடுத்து, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தெரிவியுங்கள் என்று அறிவித்துள்ளார். ஆனால் நவம்பர் மாதம் 2ம் தேதி மாலையில் தான் ராணுவத்தினை உதவிக்கு அழைத்தது டெல்லி நிர்வாகம். சில இடங்களில் நவம்பர் 3ம் தேதிக்கு மேல் தான் ராணுவம் செயல்படத் துவங்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment