Advertisment

ஃபைசர் தடுப்பூசி 2-வது டோஸை தவிர்க்கக்கூடாது: காரணம் என்ன?

ஃபைசர் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்ய ஸ்டான்போர்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை தொடங்கியது.

author-image
WebDesk
New Update
pfizer corona vaccine

கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதிக்கு ஆன்டிவைரல் பாதுகாப்பை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த ஊக்கத்தை தூண்டுகிறது என ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2வது ஷாட் தவிர்க்கப்படக்கூடாது என்ற கருத்தை இந்த கண்டுபிடிப்பு வலுவாக கூறுகிறது என ஸ்டான்போர்டு மெடிசின் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த ஆய்வு Nature இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஃபைசர் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்ய ஸ்டான்போர்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களிடம் தடுப்பூசி செலுத்த தொடங்கியது.

தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை, நோயெதிர்ப்பு-சமிக்ஞை புரதங்களின் அளவு கணக்கிடப்பட்டது. மேலும் 2,42,479 தனித்தனி நோயெதிர்ப்பு உயிரணுக்களின் வகை மற்றும் நிலையின் மரபணுவில் உள்ள ஒவ்வொரு மரபணுவின் வெளிப்பாட்டையும் வகைப்படுத்தியது.

ஸ்டான்போர்ட் மருத்துவ பேராசிரியர் பாலி புலேந்திரன் மற்றும் சக ஆய்வாளர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட அனைத்து நோயெதிர்ப்பு உயிரணு வகைகளிலும் செயல்பாட்டை மதிப்பிட்டனர். அவற்றின் எண்கள், செயல்பாட்டு நிலைகள், அவை வெளிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் தடுப்பூசி மூலம் அவை தயாரிக்கும் மற்றும் சுரக்கும் புரதங்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த குழு 56 ஆரோக்கியமான தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் இரத்த மாதிரிகளை சேகரித்தது. முதல் ஷாட் ஆன்டிபாடி அளவை அதிகரிக்கிறது. ஆனால் இரண்டாவது டோஸ் அளவு அதிகமாக இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இரண்டாவது ஷாட் முதல் ஷாட் செய்யாத விஷயங்களைச் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்ததாக உள்ளது. ஆன்டிபாடிகளின் அளவுகளை அதிகரிப்பது, முதல் டோஸ்க்கு பிறகு இல்லாத ஒரு பயங்கர டி செல் ரெஸ்பான்ஸ் மற்றும் மேம்பட்ட உள்ளார்ந்த நோய்எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என புலேந்திரன் கூறியுள்ளார்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று மற்றும் பிற அவமதிப்புகளுக்கு எதிராக உடலின் முதல் வரிசையாக செயல்படுகின்றன.புலேந்திரன் தலைமையிலான சமீபத்திய தடுப்பூசி ஆய்வில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த செல்கள் உண்மையான கொரோனா தொற்றுக்கு விடையிறுக்கவில்லை.ஆனால் ஃபைசர் தடுப்பூசி அவைகளை தூண்டுவதாக கண்டறியப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid Vaccine Pfizer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment