Advertisment

Explained: PVR-INOX இணைப்பு.. பொழுதுபோக்கு துறையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

பிவிஆர் நிறுவனம் அதற்கு சொந்தமான 181 இடங்களில் 73 நகரங்களில் 871 திரைகளில் படங்களை வெளியிட்டு வருகிறது. ஐநாக்ஸ் நிறுவனம், 72 நகரங்களில் அதற்கு சொந்தமான 160 சொத்துகளில் 675 திரைகளில் ஒளிபரப்பி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained: PVR-INOX இணைப்பு.. பொழுதுபோக்கு துறையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?



நாட்டிலேயே மிகப் பெரிய பொழுதுப்போக்கு நிறுவனமாக உருவெடுக்கும் நோக்கத்தில் பிவிஆர் லிமிடெட் நிறுவனமும், ஐநாக்ஸ் லெஷர் லிமிடெட் நிறுவனமும் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன.

Advertisment

இரு நிறுவனங்களின் வாரிய உறுப்பினர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு நிறுவனங்களும் ஒன்றிணைப்பதற்கு ஒப்புதல் வழங்கினர். பங்கு பரிமாற்ற விகிதங்களுக்கும் ஒப்புதல் அளித்தன.

அதன்படி, ஐநாக்ஸ் பங்குதாரர்கள் 10 பங்குகளில் பிவிஆர் நிறுவனங்களிலிருந்து மூன்று பங்குகளைப் பெறுவார்கள்.

இரு நிறுவனங்களின் இணைப்பிற்குப் பிறகு, PVR புரமோட்டர்களுக்கு 10.62 சதவீத பங்குகள் இருக்கும்.

அதே நேரத்தில் ஐநாக்ஸ் புரமோட்டர்களுக்கு ஒருங்கிணைந்த நிறுவனத்தில் 16.66 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.

ஒப்பந்தம் எதைக் குறிக்கிறது?

இரு நிறுவனங்களின் இணைப்பிற்குப் பிறகு, ஐநாக்ஸ் நிறுவனத்தின் புரமோட்டர்கள் பிவிஆர் நிறுவனத்தின் கோ-புரமோட்டர்கள் ஆகிவிடுவார்கள்.

மேலும், இணைக்கப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மொத்தம் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு பலத்துடன் மீண்டும் அமைக்கப்படும்.

மேலும் இரண்டு புரமோட்டர் குடும்பங்களுக்கு சரிசமமான பிரதிநிதித்துவம் இரண்டு வாரியங்களிலும் இருக்கும்.

பிவிஆர் நிறுவனம் அதற்கு சொந்தமான 181 இடங்களில் 73 நகரங்களில் 871 திரைகளில் படங்களை வெளியிட்டு வருகிறது. ஐநாக்ஸ் நிறுவனம், 72 நகரங்களில் அதற்கு சொந்தமான 160 சொத்துகளில் 675 திரைகளில் ஒளிபரப்பி வருகிறது. தற்போது இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால், மொத்தம் 1,546 திரைகளாக இதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதன்மூலம், இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

மொத்தம் 109 நகரங்களில் 341 இடங்களில் இனி படங்கள் ரிலீஸ் செய்யப்படவுள்ளன. இரு நிறுவனங்களின் இணைப்பை அடுத்து, மும்பை பங்குச் சந்தையில், பிவிஆர் பங்குகள் 2.84 சதவீதம் உயர்ந்து ரூ.1,827.60 ஆக முடிந்தது. ஐநாக்ஸ் லெஷர் 6.10 சதவீதம் உயர்ந்து ரூ.469.70 ஆக ஆனது.

இது சந்தையை எவ்வாறு மாற்றுகிறது?

வாடிக்கையாளர்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், உள்ளடக்க தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள், அரசு கருவூலம் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் மிகப்பெரிய மதிப்பு உருவாக்கத்தை உறுதி செய்வதோடு, இந்திய சினிமா திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் இந்த இணைப்பு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலியும், செயல் இயக்குநராக சஞ்சீவ் குமாரும் நியமிக்கப்படுவார்கள்.

பவன் குமார் ஜெயின் குழுவின் நிர்வாக அல்லாத தலைவராக இருப்பார். அதே நேரத்தில் சித்தார்த் ஜெயின் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனத்தில் நிர்வாகமல்லாத, தன்னாட்சி அல்லாத இயக்குநராக நியமிக்கப்படுவார்.

இதுகுறித்து பிவிஆர் வெளியிட்ட அறிக்கையில், "ஒருங்கிணைந்த நிறுவனம் பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் என பெயரிடப்படும், தற்போதுள்ள திரைகளின் பிராண்டிங் முறையே பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆக தொடரும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்புக்குப் பிறகு திறக்கப்படும் புதிய திரையரங்குகள் பிவிஆர் ஐநாக்ஸ் என பெயரிடப்படும்.

பல்வேறு ஓ.டி.டி இயங்குதளங்களின் வருகை மற்றும் தொற்றுநோயின் பின்விளைவுகளால் ஏற்படும் துன்பங்களை வலுவாக எதிர்கொள்ளும் அதே வேளையில், ஒருங்கிணைந்த நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தை அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 சந்தைகளில் உள்ள நுகர்வோருக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் நோக்கில் செயல்படுவோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 மில்லியன் டாலர் ஏற்றுமதி சாதனை; ஆனால் உண்மை நிலை என்ன

டிசம்பர் 2021 இல் முடிவடைந்த காலாண்டில் ஐநாக்ஸ் ரூ. 296.47 கோடி வருவாயையும் ரூ. 1.31 கோடி நஷ்டத்தையும் ஈட்டியது. மூன்றாம் காலாண்டில் ரூ. 546.94 கோடி விற்றுமுதலில் பிவிஆர் ரூ. 24.53 கோடி இழப்பைச் சந்தித்தது.

பிவிஆர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் பிஜிலி கூறுகையில், “ கொரோனா தொற்று காரணமாக திரையரங்கத் துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகும். மேலும் ஓடிடி தளங்களின் வருகையால் மேலும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.

ஐநாக்ஸ் லெஷரின் இயக்குனர் சித்தார்த் ஜெயின் கூறுகையில், புதிய சந்தைகளை அடைய புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment