Advertisment

மே 1ம் தேதிக்கு பிறகு கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை என்ன?

தடுப்பூசிகள் குறித்து உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில்கள் இங்கே

author-image
WebDesk
New Update
சென்னையை விட சிறு நகரங்களில் மோசமாக பரவும் கொரோனா வைரஸ்

 Prabha Raghavan 

Advertisment

SIIs Covishield vaccine : சீரம் நிறுவனம் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்க இருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலைப்பட்டியலை வெளியிட்டது. இன்னும் சில மாதங்களில் தடுப்பூசிகள் மொத்த விற்பனை மற்றும் இலவச வர்த்தகத்திற்கும் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளது. அறிவிக்கப்பட்ட விலை என்ன மற்றும் இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இதர விசயங்கள் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

புதிய விலையை ஏன் கோவிஷீல்ட்டுக்கு சீரம் நிறுவனம் நிர்ணயித்தது?

நரேந்திர மோடி அரசு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இருப்பது குறித்து அறிவித்த பிறகு புதியவிலைப்பட்டியல் வெளியானது. அந்த முடிவுப்படி இந்நிறுவனம் இந்தியாவிற்கு வழங்கும் 50% மருந்துகளை திறந்த சந்தையில் விற்க முடிவு செய்துள்ளது. அதில் தனியார் மருத்துவமனைகள், நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளும் அடங்கும்.

மேலும் படிக்க : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை? மூடப்பட்ட மையங்கள்; திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்

கோவிஷீல்டின் விலை என்ன?

publive-image

மாநில அரசுகளுக்கு ரூ. 400க்கு இந்த கோவிஷீல்ட் விற்பனை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தினை ரூ. 600க்கு பெற்றுக் கொள்ளலாம். ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் தேவைப்படும் என்று கொண்டால், மாநில அரசு ஒரு தனிநபருக்கு ரூ. 800க்கு தடுப்பூசியை பெற வேண்டும். அதே போன்று தனியார் மருத்துவமனைகள் ரூ. 1200க்கு இந்த தடுப்பூசிகளை பெற வேண்டும். இந்நிறுவனம் தயாரிக்கும் மீதமுள்ள 50% மருந்துகளை மத்திய அரசுக்கு குறைந்த விலையில் விற்கும். சீரம் நிறுவனத்தின் தலைவர் பூனவல்லா ஆரம்பத்தில் மத்திய அரசுக்கு ரூ. 150க்கு தடுப்பூசிகளை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். சி.என்.பி.சி. டிவி 18-ற்கு அளித்த பேட்டியில் தற்போது இருக்கும் கொள்முதல் ஒப்பந்த காலம் முடிந்த பிறகு மத்திய அரசுக்கும் ரூ. 400க்கு தான் விற்பனை செய்யும் என்று கூறப்பட்டது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசிகளை விற்பனை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : மாநில அரசுகளுக்கு ஒரு விலை; மத்திய அரசுக்கு ஒரு விலை - நியாயமற்றது என கண்டனம்

தற்போது நிலவி வரும் சிக்கலான தன்மை மற்றும் அவசரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக தடுப்பூசிகளை வழங்குவது மிகவும் சவாலானது. எனவே அனைத்து தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அந்நிறுவனம் கூறியது.

SIIs Covishield vaccine : மே 1ம் தேதிக்கு பிறகு யாரெல்லாம் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டும்?

18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்கள் தங்களின் தடுப்பூசிகளுக்கு பணம் செலுத்த வேண்டும். தற்போது சென்று கொண்டிருக்கும் அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் மிகவும் முன்னுரிமை தரப்படும், பாதிக்கப்படக் கூடிய குடிமக்கள் பட்டியலில் அவர்கள் இல்லை. மத்திய அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்குகிற நிலையில் மாநில அரசுகள் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் இளம் வயதினருக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கலாம். எந்த மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கலாம் என்று கே. ஸ்ரீநாத் ரெட்டி, பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேசன் அமைப்பின் தலைவர் கூறினார்.

தனியார் மருத்துவமனைகளும் மாநில அரசுகளும் வாங்கும் விலைக்கே தடுப்பூசிகளை குடிமக்களுக்கு வழங்குமா?

இல்லை. யாருக்கெல்லாம் இலவசமாக அல்லது யாருக்கு கட்டணத்துடன் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும். தனியார் மருத்துவமனைகள் ரூ. 600க்கு தடுப்பூசிகளை பெறுகின்றன. ஆனால் தடுப்பூசி நிர்வாகத்திற்கு தேவையான கட்டணாமும் அதில் இணைக்கப்பட்டு, லாபத்திற்கு தான் விற்பனை செய்வார்கள். முன்னதாக முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு தனியார் வசதிகள் வசூலிக்கக்கூடிய விகிதத்தை மத்திய அரசு உச்ச வரம்பு விதித்திருந்தாலும், தற்போது திறந்த சந்தைகளில் விற்கப்படும் தடுப்பூசிகளுக்கு இது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதுவரை கூறியது என்னவென்றால், தனியார் மருத்துவமனைகள் தங்களது முன் நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி விலையை “வெளிப்படையாக” அறிவிக்க வேண்டும் என்பது தான்.

45 வயதிற்கு மேல் நான் உள்ளேன்? நான் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டுமா?

45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் ரூ. 250 கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மருந்தகத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமா?

தற்போது அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் தனியார் சந்தைகளில் விற்பனைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் 6 மாதங்களில் தனியார் சந்தைகளுக்கு இம்மருந்துகள் வரும் என்று பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது தனியார் சந்தைகளில் விற்பனை செய்வதற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவில்லை என்றும் 60 முதல் 70 மில்லியன் டோஸ்கள் ஒரு மாதத்திற்கு தயாரிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 4-5 மாதங்களில் மொத்த விற்பனைக்கு வரலாம் என்று கூறப்பட்டாலும் என்ன விலைக்கு விற்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தனியார் சந்தைகளில் ரூ. 1000க்கு தடுப்பூசிகளை விற்பனை செய்யலாம் என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

மே 1ம் தேதிக்கு மேல் நான் தடுப்பூசிகளை பெற முடியுமா?

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ம் தேதிக்கு மேல் தடுப்பூசிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கோவிஷீல்ட் மருந்துகள் மே மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரங்களில் மட்டுமே தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைக்கும் என்று பூனவல்லா கூறியுள்ளார். மத்திய அரசின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் அளவிற்கு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்பட்டவில்லை என்பது தான் காரணம். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்19 தடுப்பூசியான கோவாக்ஸின் தற்போது நாட்டின் கொரோனா தடுப்பூசி திட்டங்களில் இடம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் இன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவது குறித்து அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. மேலும் 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு எப்போது தடுப்பூசி கிட்டும் என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை. இரண்டு டோஸ்கள் முறையை கொண்ட கோவாக்ஸின் மீது தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸை தரலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் வேறு ஏதேனும் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் உள்ளதா?

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி இந்தியாவில் மே மாத இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த மருந்தின் விலை ரூ. 750க்கும் குறைவாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இம்மருந்துகளை பெற்று இறக்குமதி செய்யும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் எந்த விலைக்கு இம்மருந்துகளை விற்பனை செய்யும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் மத்திய மற்றும் திறந்த சந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும். ஹைதராபாத்தில் இயங்கி வரும் இந்த மருந்து நிறுவனத்திடம் பேரம் பேசும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஃபைசர், மோடெர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகளை பெறவும் முயற்சி செய்து வருகிறது.

இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு அது தொடர்பாக ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். இது மேலும் சில மாதங்களை எடுத்துக் கொள்ளும். பயோஎன்டெக் உடனான தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக இந்தியாவை அணுகிய முதல் நிறுவனமான ஃபைசர், உள்ளூர் சோதனைகளை நடத்துமாறு கூறப்பட்டதை அடுத்து பிப்ரவரி மாதத்தில் அதன் விண்ணப்பத்தை திரும்பப் பெற முடிவு செய்தது. இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் மற்றும் WHO அவசரகால பயன்பாட்டு பட்டியல்களைக் கொண்டவர்களிடமிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களுடன் (EUA கள்) தடுப்பூசிகளை அனுமதிக்க அரசாங்கம் அனுமதித்து வருவதால், ஃபைசர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடர்னா இதுவரை தனது தடுப்பூசியை இங்கு கிடைக்கச் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

எந்தெந்த மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது?

உ.பி., அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளது. மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இந்த வயதினருக்கான தடுப்பூசிகளை வாங்குவதை பரவலாக்குவதும், அவற்றை தனியார் மருத்துவமனைகளுடன் போட்டியிடுவதும் அதிக செலவுக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டு கடிதம் எழுதியுள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அரசு பிப்ரவரி மாதம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கான அனுமதியை தர மறுத்துவிட்டது. உங்களின் தரப்பில் இருந்து பதில்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தற்போது இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற இந்த சூழலின் போது வெறும் வாய்வார்த்தைகளை கூறி பொறுப்பில் இருந்து விலகி ஓட நினைக்கிறது என்று கடிதம் எழுதினார். அறிவிக்கப்பட்ட கொள்கை சந்தையில் நேர்மையற்ற வழிமுறைகளுக்கு வழிவகுக்கும். இது தடுப்பூசிகளின் விலை உட்பட சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறது, இது பொது மக்களை பெரும் நிதிச் சுமையின் கீழ் கொண்டு வரக்கூடும்" என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment